Published:Updated:

எடக்கு மடக்கு - ஏய்க்கிறவங்களப் பிடிங்கய்யா முதல்ல !

எடக்கு மடக்கு - ஏய்க்கிறவங்களப் பிடிங்கய்யா முதல்ல !

எடக்கு மடக்கு - ஏய்க்கிறவங்களப் பிடிங்கய்யா முதல்ல !

எடக்கு மடக்கு - ஏய்க்கிறவங்களப் பிடிங்கய்யா முதல்ல !

Published:Updated:
##~##

வருமான வரி பத்தி யோசிக்கிற சீஸன்ல இருக்கோம். நம்மள மாதிரியாளுங்க டாக்ஸ் கட்டணுமேன்னு முழிபிதுங்கி நிக்கிறோம். அரசாங்கம் டாக்ஸ் போடறது எப்படீன்னு மூளையைக் கசக்கிக்கிட்டு இருக்குது. ஆனா, இந்தக் கவலையேதும் இல்லாம ஒரு கூட்டம் ஹாயா சம்பாதிச்சுக்கிட்டு டாக்ஸ் கட்டாமலோ அல்லது குறைவா கணக்குக் காண்பிச்சுக்கிட்டோ இருக்குதுங்க. அதைப் பாத்தாத்தான் எனக்கு ரொம்ப ஆத்தாமையா இருக்குதுங்க.

2010 கணக்குபடி இன்கம் டாக்ஸ் டிப்பார்ட்மென்ட் 9.58 கோடி பான்கார்டுகளைத் தந்திருந்தது. அப்படித் தந்ததுல 3.40 கோடி பான் கார்டு வச்சிருக்கறவங்கதான் ரிட்டர்ன் ஃபைல் செஞ்சிருக்காங்க.  அப்ப மிச்சம் பேரு வரியே கட்டலையான்னு நீங்க கேக்கப்படாது. ஏன்னா, அடுத்து நான் சொல்லப் போற தகவல் இன்னும் ஆச்சரியமா இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூப்பர் ரிச்சு, சூப்பர் ரிச்சுன்னு சொல்றாங்களே, அவங்க யாருன்னு தெரியுமா? சூப்பர் ரிச்சுன்னா வருஷ வருமானம் 20 லட்சம் ரூபாயும் அதற்கு மேலும் இருக்கறவங்கதான். இந்த கேட்டகிரியில எத்தனை பேரு இந்தியாவுல இருப்பாங்கன்னு நெனைக்கிறீங்க? இந்தியா முழுக்கவே நாலு லட்சம் பேர் மட்டும்தாங்க.

இவ்வளவு குறைவா இருக்குதேங்கிறீங்களா? டாக்ஸ் டிப்பார்ட்மென்ட் குடுக்குற புள்ளி விவரத்தை நம்புங்களேன் சார்! என்னை மாதிரி ஏன் எடக்கு மடக்கா கேள்வி கேக்குறீங்க?

நாட்டுல எத்தனை லக்ஸரி காரு ஓடுது, லம்போகினி பென்ஸுன்னு ஓடுது, எத்தனை சொகுசு பங்களா இருக்குது, எத்தனை ஃப்ளாட் (அடுக்குமாடிகள்) ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கைமாறுது, எத்தனை பேரு வருஷத்துக்கு ஓர் உல்லாசப் பயணம் ஐந்து முதல் பத்து லட்சம் செலவு செஞ்சு போய்வாராங்க, எத்தனை பேரு ஈமு கோழி மாதிரி ஸ்கீமுல பல லட்சம் பணம் போடறாங்க; இவங்களுக் கெல்லாம் எங்கேயிருந்து சார் காசு வருது? எல்லாரும் தாத்தா பாட்டி சம்பாதிச்ச சொத்தை வித்துதான் இந்தச் செலவெல்லாம் செஞ்சுகிட்டு இருக்காங்களா? இல்லை, திரும்பச் செலுத்த நினைக்காம கடன் வாங்கி செலவு பண்றாங்களா? நீங்க கேக்குற கேள்வி அத்தனை யும் என் மனசுலயும் வரத்தாங்கச் செய்யுது.

எடக்கு மடக்கு -  ஏய்க்கிறவங்களப் பிடிங்கய்யா முதல்ல !

ஒரு குத்துமதிப்பா பாத்தா, ஒரு கோடிப் பேருக்கும் மேலே 20 லட்சம் சம்பாதிப்பாங்கப் போலிருக்கே. இதுல கணக்கு காண்பிக்கிற நாலு லட்சம் பேரு மாசச் சம்பளக்காரங்களா இருப்பாங்கப் போலிருக்கு. பாவம்! அதனால அவங்கச் சிக்கிக்கிறாங்க. பல தொழில் பண்றவங்க டாக்ஸே கட்டறதில்லபோல.  கடந்த பத்து வருஷத்தில ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுனவங்க, கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்துனவங்க, மொபைல் போன் கடை வச்சிருக்கறவங்கெல்லாம் சம்பாதிக்கவே இல்லையா?  

இன்னைக்குச் சாதாரணமா பெருநகரங்களிலே வீடு வாங்குனா ஐம்பது அறுபது லட்சம் ரூபாய் ஆயிடுதே. ரியல் எஸ்டேட்டில கோடிகள் புரளுதே. ஆங், மறந்துட்டேன். டன் டன்னா தங்கம் வாங்கிக் குவிக்கிறாங்களே! அதுக்கெல்லாம் எங்கேயிருந்துங்க பணம் வருது. அதையெல்லாம் வருமானத்துல கணக்கெடுத்துக்கறது இல்லையா? இல்லே, கணக்குலயே காண்பிக்கிறது இல்லை யாங்கிறதுதான் என்னோட கேள்வி.

இந்த லட்சணத்துல ஒழுங்கா கணக்கு காண்பிக்கிற இந்த நாலு லட்சம் பேருக்கு அதிக டாக்ஸ் போடப்போறாங்கன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. இப்படி சிக்குனவங்க கிட்டேயே அறுவடை பண்றதுக்குப் பதிலா... சம்பாதிச்சுட்டு கம்முன்னு இருக்கற பலரை தேடிப்போய் கண்டுபிடிச்சு டாக்ஸ் கட்ட வச்சாலே அரசுக்கு வரி வருமானம் நிச்சயமாக உயருமுங்க. சம்பாதிச்சிட்டு டாக்ஸ் கட்டாம இருக்கறவங் களை இப்படி கண்டுக்காம இருக்கலாமா? வரியை உயர்த்துறதுக்குப் பதிலா டாக்ஸ் கட்டாம டிமிக்கி தர்றவங்க எண்ணிக்கையைக் குறைக்கிறதுக்கு ஏதாவது உருப்படியா வழியைக் கண்டுபிடிக்கணுமுங்க.

நான் சின்னப்புள்ளையா இருக்கறப்ப வீடு கொஞ்சம் பளபளன்னு கட்டினாலே இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டிலே இருந்து வந்து சர்வே பண்ணுவாங்க. எத்தனை பிளக் பாயின்ட், எத்தனை சதுர அடி, என்ன பெயின்ட்னு பாத்து கணக்குப்போட்டு இவ்வளவு செலவாயிருக்குமே? ஏது இவ்வளவு பணமுன்னு கேப்பாங்க. புது காரு புக் பண்ணினாக்கூட கேள்வி வந்துடுமுன்னு பயந்த காலமுங்க அது. இன்னைக்கு என்னடான்னா பங்களா, காரு, அஞ்சு கிலோ தங்கமுன்னு ஒரேநாளில வாங்குனாலும் கேட்பாரில்லாம இருக்கு. அதனால வரி ஏய்ப்பு செய்யறவங்களுக்கு ரொம்ப சௌகரியமாப் போச்சுங்க.

ஏய்க்கிறவங்களை எல்லாம் டாக்ஸ் நெட்டுக்குள்ளே கொண்டுவந்தாலே வரி வசூல் சூப்பரா அதிகமாயிடுங்கன்றதுதான் என்னோட கருத்துங்க. இதை விட்டுட்டு சூப்பர் ரிச்சுக்கு சூப்பரா டாக்ஸை ஏத்துனா அவங்க டாக்ஸ் நெட்டைவிட்டு வெளியேறத்தான் முயற்சிபண்ணுவாங்க. எனவே அரசாங்கம், டாக்ஸ் கட்டாம அதிகம் சம்பாதிக்கிறவங்களை கண்டறிஞ்சுக்கிடறதுலதான் டைம் ஸ்பென்ட் பண்ணணுமே தவிர, டாக்ஸை ஏத்தற முயற்சியில இறங்கக் கூடாதுங்கிறதுதாங்க இந்த ஏகாம்பரத்தோட கோரிக்கை. நீங்களும் இதை ஒத்துக்குவீங்கதானே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism