Published:Updated:

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்ன செய்யணும்?

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்ன செய்யணும்?

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்ன செய்யணும்?

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்ன செய்யணும்?

Published:Updated:

கேள்வி-பதில்

##~##
[?]எஃப்.டி.-க்கு படிவம் 15 தந்தால் டி.டி.எஸ். பிடிப்பார்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கதிரவன், திருத்தணி.

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்ன செய்யணும்?

சதீஸ்குமார், ஆடிட்டர்.

''வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு படிவம் 15 தந்தால்,  அதன் மூலம் வரும் வருமானத்திற்கு டி.டி.எஸ். பிடித்தம் செய்யமாட்டார்கள். 'என் வருமானத்திற்கு வரிப் பிடித்தம் வராது அல்லது என் வருமான வரிக் கணக்கை நானே தனியாகத் தாக்கல் செய்துகொள்கிறேன். அதனால் எனது வருமானத்திற்கு நீங்கள் வரிப் பிடித்தம் செய்யவேண்டாம்’ என வங்கிக்கு நீங்கள் தரும் அறிவிப்புதான் இந்தப் படிவம் 15. இப்படிவம் தந்தபிறகு உங்களது சேமிப்பு மற்றும் வைப்புநிதிக்கு வரும் வருமானத்திற்கு வங்கி, வரிப் பிடித்தம் செய்யாது. அதேநேரத்தில் பான் கார்டு எண் கொடுப்பது அவசியம். இல்லை என்றால் 20% டி.டிஎஸ். பிடிக்கப்படும்''

[?]இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கும், அதற்காக அலுவலகம் அமைப்பதற்கும் தகுதிகள் என்ன?

- பி.மாதுர்யா.

ஏ.ஜி.பழனி, காப்பீடு ஆலோசகர், எல்.ஐ.சி.

''நீங்கள் எந்த நிறுவனத்தில் முகவராக விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனம் மூலம் ஐ.ஆர்.டி.ஏ. (மிஸீsuக்ஷீணீஸீநீமீ ஸிமீரீuறீணீtஷீக்ஷீஹ் ணீஸீபீ ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt கிutலீஷீக்ஷீவீtஹ்) நடத்தும் இன்ஷூரன்ஸ் முகவர்களுக்கான தகுதி தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையவேண்டும். இத்தேர்வில் வெற்றி பெற்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் காப்பீடு முகவராகப் பணியாற்ற லைசென்ஸ் எடுத்துக்கொண்டால், இன்ஷூரன்ஸ் முகவராகப் பணியாற்றலாம். இத்தேர்வு எழுத குறைந்தபட்ச தகுதியாக பதினெட்டு வயது பூர்த்தியடைந்தவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கவேண்டும். அலுவலகம் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்''    

[?]நானும் என் மனைவியும் இணைந்து ஜாயின்ட் அக்கவுன்ட்-ஆக டீமேட் கணக்கு வைத்திருக்கிறோம். ஆனால், நாங்கள் நாமினி பெயரை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் எங்களில் யாராவது ஒருவருக்கு அசம்பாவிதம் நடந்தால் கணக்கைத் தொடர முடியுமா?

- குமரகுரு, பொள்ளாச்சி.

ஹரிகரன், நிதி ஆலோசகர்.

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்ன செய்யணும்?

''உங்களது டீமேட் கணக்கு ஜாயின்ட் அக்கவுன்டாக இருப்பதால் நாமினியின் பெயரை பதிவு செய்யவேண்டிய கட்டாயமில்லை. நீங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நாமினியை நியமிக்கலாம். அதேசமயம் உங்கள் இருவரது பெயரிலும் கணக்கு இருப்பதால், உங்களில் யாராவது ஒருவர் கணக்கைத் தொடரமுடியாது போனாலும், மற்றொருவர் கணக்கைத் தொடர முடியும். எனவே, கவலை வேண்டாம்.''

[?]எனது அப்பாவும் அம்மாவும் மாத வருமானம் உடையவர்கள். இருவரது வருமானத்தின் அடிப்படையில் வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பித்து, தற்போது கடன் தொகை வாங்க உள்ள நிலையில், அம்மாவுக்கு வி.ஆர்.எஸ். வாங்க உள்ளோம். இதனால் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையில் வங்கி மாற்றம் செய்யுமா?

- த.குமார், தேன்கனிக்கோட்டை.

ஆர்.கணேசன், முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி.

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்ன செய்யணும்?

''தற்போது கடன் வழங்க உள்ள நிலையில் நீங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதால் இதை முறைப்படி வங்கியில் தெரியப்படுத்திவிட வேண்டும். இந்தத் தகவலை தெரியப்படுத்தாமல் விட்டாலும் வங்கிக் கடன் கிடைத்துவிடும்தான். ஆனால், இது சரியான நடவடிக்கையாக இருக்காது. வீட்டுக் கடன் வாங்கிய பிறகு உங்கள் அம்மாவின் கணக்கிலிருந்து விகிதாச்சார அடிப்படையில் கடன் தொகை (இ.எம்.ஐ.) செலுத்த முடியவில்லை என்றால், அது வங்கியை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படுவதாக ஆகிவிடும். எனவே, இந்த முடிவை முறையாக வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள். வி.ஆர்.எஸ். வாங்கும் நபரின் பென்ஷன் தொகையை அடிப்படையாக வைத்து மீண்டும் கடன் மதிப்பைத் தீர்மானித்து அந்தத் தொகையை பெறுவது நல்லது.''

[?]எனக்கு வயது 31. என் வருமானம் ஆண்டிற்கு இரண்டு லட்சம் ரூபாய். நான் எனது மனைவி மற்றும் ஐந்து வயது குழந்தைக்கும் சேர்த்து எவ்வளவு தொகைக்கு ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்?

- முத்துக்குமார், மதுரை.

சங்கர், நிதி ஆலோசகர்.

''உங்கள் வயது, குடும்பம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ் என்கிற அளவில் ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இதற்கான பிரீமியம் உங்கள் வருமானத்தைக் கணக்கிடும்போது கொஞ்சம் அதிகமாகத் தோன்றலாம். என்றாலும், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்காவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருப்பதே நல்லது. டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, உங்களது ஆண்டு வருமானத்தைப் போல பத்து மடங்கு தொகைக்கு, அதாவது 20 லட்ச ரூபாய்க்கு எடுத்துக்கொள்வது நல்லது.''

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்ன செய்யணும்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism