Published:Updated:

காற்றாலை மின்சாரம்: கவனிப்பாரா நிதி அமைச்சர்?

காற்றாலை மின்சாரம்: கவனிப்பாரா நிதி அமைச்சர்?

காற்றாலை மின்சாரம்: கவனிப்பாரா நிதி அமைச்சர்?

காற்றாலை மின்சாரம்: கவனிப்பாரா நிதி அமைச்சர்?

Published:Updated:
##~##

தமிழகத்தில் சென்னை நீங்கலாகப் பிற ஊர்களில் தினம் பத்து முதல் பன்னிரண்டு மணிநேரம் மக்களைப் பாடாய்ப்படுத்தி வருகிறது மின்வெட்டு. மின் பற்றாக்குறை தமிழக அரசாங்கம் சொல்லிவரும் முக்கிய காரணம், போதிய அளவு மின்சாரம் உற்பத்தியாகாததே. குஜராத் போன்ற சில மாநிலங்களில் தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தியானாலும் அதனை நம் தமிழகத்திற்கு கொண்டுவரத் தேவையான க்ரிட் (கம்பி வழி) வசதி இல்லை.

காற்றாலை மின்சாரம்: கவனிப்பாரா நிதி அமைச்சர்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக அளவில் இந்தியா ஆண்டுக்கு சுமார் 210.951 கிகாவாட் மின் உற்பத்தி செய்து ஐந்தாம் இடத்தில் இருந்தாலும் அதிக அளவு மின் தட்டுப்பாடு இருப்பதும் இங்குதான். சர்வதேச ஆற்றல் முகமையகம்(International Energy Agency) இந்தியாவின் தற்போதைய மின் தேவையை பூர்த்தி செய்ய சுமார் 135 பில்லியன் டாலர் முதலீட்டில் மின் உற்பத்தி செய்வது அவசியம் என்று மதிப்பிட்டுள்ளது.

பொதுவாக, நீர், நிலக்கரி என பலவிதமாக மின்சாரம் உற்பத்தி செய்து வந்தாலும், மரபு சாரா எரிசக்தி மூலம் செய்யப்படும் மின் உற்பத்திக்கு உலக அளவில் ஊக்கம் அதிகம் தரப்படுகிறது. காற்றாலை மற்றும் சூரிய சக்தி தவிர பிற மின் திட்டங்களுக்கு முதலீடு அதிக அளவு தேவைப்படுவதால் அரசாங்கமோ அல்லது அரசு சார் நிறுவனங்களோதான் இதை தோற்றுவிக்கின்றன.

ஆனால், காற்றாலை மின் உற்பத்தியில் தனியார்களும் குறிப்பாக நடுத்தர தொழிலதிபர்களும் பங்கு பெறுகின்றனர். ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கான முதலீடு காற்றாலைக்கு சுமார் 6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில் துரிதத் தேய்மானமாக (Accelerated Depreciation) 80 சதவிகிதம் வருமான வரிச் சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. பெரும்பான்மையினர் காற்றாலைகளில் அதிக அளவில் முதலீடு செய்து அதற்குரிய தேய்மானத்தைப் பெற்று வருமான வரியைக் குறைத்து நாட்டின் மின் உற்பத்திக்கும் தங்களால் இயன்ற பங்கை செலுத்தி வந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டு தாக்கலான மத்திய பட்ஜெட்டில் காற்றாலைக்கான துரித தேய்மானம் வாபஸ் பெறப்பட்டு, வெறும் 15% தேய்மானம் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு காற்றாலை நிறுவுபவர்களின் எண்ணிக்கைப் பாதிக்குமேல் குறைந்துவிட்டது.

மத்திய அரசாங்கம் இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம்?

காற்றாலை மின்சாரம்: கவனிப்பாரா நிதி அமைச்சர்?

அரசுத் தரப்பில் இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிக அளவு வருமானம் உள்ள சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல முக்கிய புள்ளிகள் காற்றாலைகளை நிறுவி தங்களது வரியை வெகுவாகக் குறைத்துக் கொண்டனர் என்பது ஒரு காரணம். சிலர் காற்றாலைகளின் விலையை அதிகரித்துக்காட்டி (Over Invoicing) அதிக தேய்மானப் பயன் பெற்றார்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டன.  

காற்றாலை முதலீடுகளில் ஈடுபட்ட பலர் தங்களது தொழிலை பலமடங்கு அபிவிருத்தி செய்துள்ளது நாடறிந்த விஷயம். அதிக மின் உபயோகம் உடைய தொழிற்சாலைகள் காற்றாலைகளில் முதலீடு செய்வதன் மூலம் தங்களது மின்சாரக் கட்டணத்தை அடுத்த பல ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்துகொள்ள முடியும். முக்கியமாக, துரித வரிச் சேமிப்பின் மூலம் வரியாகக் கட்டக்கூடிய தொகையைத் தங்களது மார்ஜின் பணமாகக் கொடுத்து மீதத் தொகையை கடனாகப் பெற்று காற்றாலையை நிறுவ முடியும்.

உதாரணமாக, ஒரு நூற்பாலையின் லாபம் 5 கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். காற்றாலையில் ரூ.6 கோடி முதலீடு செய்யும் பட்சத்தில் ரூ.1.45 கோடி வரியைச் சேமிக்கமுடியும். மேலும், இந்த வரிச் சேமிப்பை மட்டும் தனது மார்ஜின் பணமாகக் கொடுத்து (25%) மீதத் தொகையை வங்கிக் கடனாகப் பெற்று வரியை சட்டப்படி குறைப்பதோடு மட்டும் அல்லாமல் மின் உற்பத்திச் சொத்துக்கு அதிபதி ஆகின்றனர்.

காற்றாலை மின்சாரம்: கவனிப்பாரா நிதி அமைச்சர்?

மேலும், காற்றாலை மூலம் பெறும் வருமானம் அரசு மின் நிறுவனத்திற்கு விற்பதால் முழு அளவில் கணக்கில் காட்டப்பட்ட வருமானமாக இருக்கும். மின் உற்பத்தி முறைகளில் மிகக் குறைந்த நாட்களில் நிறுவப்படும் முறையிலானது காற்றாலை மட்டுமே. துரிதத் தேய்மானத்தின் மற்றுமோர் சிறப்பு என்னவென்றால், இது சிறு, குறு மற்றும் நடுத்தர வகைத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைய உதவி செய்கிறது.

இந்தியாவில் மின் பற்றாக்குறை அதிக அளவில் இருக்கும்போது சிறு தொழிலதிபர்களும் தோற்றுவிக்கக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி கூடங்களை வரவேற்காமல் அதற்களித்து வந்த துரிதத் தேய்மான சலுகையை வாபஸ் பெற்றது சரியல்ல. துரிதத் தேய்மானம் என்பது ஓர் ஊக்க உதவித் தொகை அல்ல. தாமதித்துச் செய்யப்படும் வரி வசூலிப்பே ஆகும். பல வகைகளில் நாட்டின் பொருளாதாரத்தை வளமாக்க முயற்சிகள் எடுத்துவரும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்த முக்கியமான வரிச் சலுகையை மீண்டும் கொண்டுவந்து நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்க வரும் பட்ஜெட்டில் வழி செய்வார் என்று நம்புவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism