Published:Updated:

எங்கள் இலக்கு பில்லியன் டாலர் !

வா.கார்த்திகேயன், படம்: ஆ.முத்துக்குமார்.

எங்கள் இலக்கு பில்லியன் டாலர் !

வா.கார்த்திகேயன், படம்: ஆ.முத்துக்குமார்.

Published:Updated:

 சிறப்புப் பேட்டி

##~##

டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் இருக்கும் ரிகோ என்னும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியது. டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சி.ஐ.ஐ.யின் தமிழக பிரிவின் தலைவருமான ஆர்.தினேஷ், நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

?இங்கிலாந்தைச் சேர்ந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருக்கிறீர்கள். இன்னும் சில நிறுவனங்களை கையகப்படுத்தப் போவதாகவும் சொல்லி இருக்கிறீர்கள். வெளிநாடுகளில் லாஜிஸ்டிக்ஸ் பிஸினஸ் நல்ல வருமானம் தருகிறது என்பதால் இப்படி செய்கிறீர்களா அல்லது கன்சர்வேட்டிவ் என்கிற நிலையில் இருந்து டி.வி.எஸ். குழுமத்தின் மனநிலை மாறிவருகிறதா?

''டி.வி.எஸ். ஒரு கன்சர்வேட்டிங் நிறுவனம்; தென் இந்தியாவில் செயல்படும் நிறுவனம் என்பதெல்லாம் வெளியில் இருக்கும் பேச்சு. உண்மை நிலைமை அதுவல்ல. மேலும், லாஜிஸ்டிக்ஸ் துறையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும்; பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும் என்றாலும், 2015-ல் 1 பில்லியன் டாலர் என்கிற எங்கள் இலக்கை எட்ட வேண்டும் என்றாலும் இதுபோன்ற கையகப்படுத்துதல்கள் நிச்சயம் தேவை. மேலும், உள்நாட்டில் கிடைக்கும் வருமானத்தைவிட வெளிநாடுகளில் நல்ல லாபமும் கிடைக்கிறது.''

?இப்போதைய நிலையில் வளர்ச்சி குறைவாக இருக்கிறது: ரூபாய் சரிந்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனத்தைக் கையகப்படுத்தும்போது, கொஞ்சம் அதிக விலை தந்து வாங்கவேண்டி இருக்குமே?

''ரூபாய் சரிந்திருப்பது கொஞ்சம் சுமைதான் என்றாலும், நீண்டகால சூழ்நிலையை மனதில் வைத்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எதிர்காலத்தை யோசித்துப் பார்த்து செய்யும்போது, இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரத் தேவை இல்லை. மேலும், இன்னொரு முறை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. இது மட்டுமல்லாமல் இன்னும் சில நிறுவனங்களிடமும் பேசி வருகிறோம்.''

எங்கள் இலக்கு பில்லியன் டாலர் !

?வெளிநாடுகளில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து பிஸினஸை வளர்ப்பதைவிட, வெளிநாட்டில் சிறப்பாகச் செயல்படும் ஒரு நிறுவனத்தைக் கையகப்படுத்துவது நல்ல முடிவுதான். ஆனால், இதில் எதிர்மறை விளைவுகள் எப்படி இருக்கும்?

''சரியான நிறுவனமாகத் தேர்வு செய்யப் படாவிட்டால், மொத்த முதலீடும் வீண்தான். எந்த நிறுவனத்தை வாங்கப் போகிறோம், அவர்களின் செயல்பாடுகள், நிர்வாகம், அந்த நாட்டின் கலாசாரம் எப்படி இருக்கிறது என பல விஷயங்களை கவனித்துதான் நிறுவனத்தைக் கையகப்படுத்த வேண்டிருக்கிறது.''

?இப்போதைய நிலையில் பிஸினஸ் டு பிஸினஸ்தான் செய்துவருகிறீர்கள். பிஸினஸ் டு கஸ்டமர் பிரிவுக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறதா?

''இப்போதைய நிலைமையில் அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்கான தகுதியும், சூழலும் எங்களிடம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டு காலத்துக்குப் பிறகு அதைச் செய்வோம்''

?எப்போது ஐ.பி.ஓ. வரப் போகிறீர்கள்?

''நிச்சயமாக இந்த வருடம் கிடையாது. 2014-ம் ஆண்டோ அல்லது அதற்கு பிறகோ பட்டியல் செய்யலாம். ஆனால், இப்போது உறுதியாக தேதியினை அறிவிக்க முடியாது.''

?சி.ஐ.ஐ.யின் தலைவராக இருக்கும் உங்களுக்கு இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன். இந்த பட்ஜெட்டில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

''நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால், முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்கும், ஒரு ஃபீல் குட் (யீமீமீறீ ரீஷீஷீபீ)  பட்ஜெட்டை எதிர்பார்க்கிறேன்.''

?அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரி என்பதனை எப்படி பார்க்கிறீர்கள்?

''இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், இப்படி அதிக வரி விதிப்பதன் மூலம் எவ்வளவு பணத்தைத் திரட்ட முடியும் என்று தெரியவில்லை. நாம் என்ன பேசினாலும் எல்லாம் நிதி அமைச்சரின் கையில்தான் இருக்கிறது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism