Published:Updated:

இது பஃபெட் ஸ்டைல்... எதிர்கருத்தையும் கேளுங்கள்!

வா.கார்த்திகேயன்.

பிரீமியம் ஸ்டோரி

விமர்சனம்

##~##

வாரன் பஃபெட், உலகின் பெரிய பணக்காரர், முதலீட்டு குரு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சந்தை பற்றி அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் வேதமாக எடுத்துக்கொள்ளும் முதலீட்டாளர்கள் உலகம் முழுக்க நிரம்பிக் கிடக்க, தன்னைப் பற்றியும் தன்னுடைய பெர்க்ஷயர் நிறுவனத்தைப் பற்றியும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார் பஃபெட் என்றால் ஆச்சரியமாக இல்லை?

பொதுவாக, தன்னைப் பற்றிய விமர்சனத்தை யாரும் கேட்க விரும்புவதில்லை. பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் சரி, பக்கத்து சீட்டில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, அடுத்தவர் நம்மைப் பற்றி விமர்சனம் செய்தால் அதை நம்மால் பொறுக்கவே முடியாது. ஆனால், வருகிற மே மாதம் நடக்கவிருக்கும் தனது பெர்க்ஷயர் நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் தனது நிறுவனத்தைப் பற்றி எதிர்கருத்து வைத்திருக்கும் ஒரு மனிதரை பேச அழைத்திருக்கிறார் பஃபெட்.

இது பஃபெட் ஸ்டைல்... எதிர்கருத்தையும் கேளுங்கள்!

அவர் பெயர், டாக் காஸ் (Doug Kass). இவர் ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர். சில வாரங்களுக்கு முன்பு வாரன் பஃபெட்-ன் நிறுவனமான பெர்க்ஷயர் நிறுவனத்தில் பங்கினை 'ஷார்ட்’ செய்யப் போக, இதன்மூலம் இவருக்கு மே மாதம் நடக்க இருக்கும் கூட்டத்தில் வாரன் பஃபெட்டை சந்தித்து கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  

பஃபெட் செய்வது பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மையிலே இதற்கு பெரிய தைரியம் வேண்டும். நாம் செய்வது சரி என்றுதான் எப்போதும் நினைப்போம். இதனால் நாம் பெரிய இழப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும். ஆனால், நம்மைப் பற்றி மாற்றுக் கருத்து வைத்திருக்கும் ஒருவருடன் பேசினால், நாம் செய்யும் தவறை அவர் தைரியமாக எடுத்துச் சொல்வார். அதனால்  நம் தவறைத் திருத்திக் கொள்ளலாம் என்கிறார் பஃபெட்.  

மே மாதம் நடக்கும் கூட்டத்தில் பஃபெட் மீது என்ன விமர்சனம் வைக்கப்படுமோ என உலகமே பரபரப்பாக எதிர்பார்க்க, பஃபெட்டிடம் அந்த பரபரப்பு இல்லவே இல்லை. முதலீட்டு விஷயத்தில் மட்டுமல்ல, மற்றவர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதிலும் நாம் பஃபெட்டை பின்பற்றுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு