Published:Updated:

வங்கிக் கடன்: கட்டாவிட்டால் 'கட்டம்’ கட்டுவார்கள்!

நீரை.மகேந்திரன்.

வங்கிக் கடன்: கட்டாவிட்டால் 'கட்டம்’ கட்டுவார்கள்!

நீரை.மகேந்திரன்.

Published:Updated:

எச்சரிக்கை

##~##

சமீப காலமாக பல வங்கிக் கிளைகளில் இடம் பிடித்து வருகிறது ஓர் அறிவிப்புப் பலகை. 'நாணயம் தவறியோர்’ என்ற தலைப்பில் பலரது படங்கள் அந்த அறிவிப்புப் பலகையில். கடன் வாங்கி திரும்பக் கட்டாதவர்கள் புகைப்படங்கள்தான் அந்த அறிவிப்பில் கட்டம் கட்டமாகக் கட்டப்பட்டு இருந்தன. முன்பு 'நாணயம் தவறிய கடன்தாரர்கள்’ என செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட்டார்கள். இதற்கு கடன்தாரர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவே, இப்போது இந்த மாதிரியான யுக்தியைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன சில வங்கிகள். இதுபற்றி வங்கி மேலாளர் ஒருவருடன் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நம்மவர்கள் சமூக அந்தஸ்துக்கு அதிக மரியாதைத் தருபவர்கள். வங்கி யிலிருந்து வாங்கியக் கடனை சரியாகத் திரும்பக் கட்டாவிட்டால், நம் படத்தையும் இப்படி வைத்துவிடுவார்கள் என்கிற ஓர் உணர்வை கடன் வாங்குபவர்களிடம் உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். தவிர, இதில் இடம்பெற்றுள்ளவர்களுக்குத் தகவல் தெரிவிப்பது அல்லது அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கடன் தராமல் விழிப்போடு இருப்பதற்கு இது உதவியாக இருக்கும். இந்த யுக்தியைப் பின்பற்றத் தொடங்கியதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் வாராக்கடனின் அளவும் கணிசமாகக் குறைந்திருக்கிறது'' என்று அவர் சொன்னார்.

எந்தெந்த நிலையில் ஒரு கடன்தாரரின் படத்தை இப்படி அறிவிப்புப் பலகையில் போடுவீர்கள்? இதனைத் தவிர்க்க என்ன வழி என வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம்.  

''சிலர் தனிநபர் கடன் வாங்கிவிட்டு திரும்பக் கட்டாமல் முகவரியை மாற்றிவிடுகின்றனர். இதுமாதிரியானவர்களுக்குக் கடன் திரும்பக் கட்டச் சொல்லி கடிதம் அனுப்ப முடியாது. எனவே, அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தகவல் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்துடன் இப்படி அறிவிப்பு வெளியிடுகிறோம். கடன் வாங்கிய பிறகு அதை ஒழுங்காகத் திரும்பக் கட்டுவதோடு, முகவரி மாற்றம் ஏதாவது இருந்தால், அதை உடனடியாக வங்கிக்குத் தெரியப்படுத்திவிடுவது நல்லது.

வங்கிக் கடன்: கட்டாவிட்டால் 'கட்டம்’ கட்டுவார்கள்!

சிலர் தங்களிடம் உள்ள அத்தனை சொத்து களையும் அடமானம் வைத்து, அந்தச் சொத்தின் மதிப்பைவிட அதிகமாக கடன் வாங்கிவிடுகிறார்கள். பிற்பாடு கடனைக் கட்ட வழியில்லை என்கிறபோது, அடமானச் சொத்துகள் அத்தனையையும் விற்றாலும் வங்கித் தந்த பணம் கிடைப்பதில்லை. மீதித் தொகையை கட்டச் சொல்லி வங்கி வலியுறுத்தியும், அதைக் கட்டாதவர்களை இந்நடவடிக்கைக்கு உள்ளாக்குவோம்.  

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 4.5 லட்சம் ரூபாய் வரை ஜாமீன் இல்லாமல் கடன் வழங்குகிறோம். மாணவருடைய கல்விக் காலம் முடிந்த ஒரு வருடத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும். ஆனால், வேலைக்குச் செல்லவில்லை என்கிற காரணம் காட்டி பலரும் கடன் கட்டாமல் தாமதம் செய்கின்றனர். ஆண்டுக்கணக்கில் இப்படி தாமதம் செய்பவர்கள் மீதும் இந்நடவடிக்கை எடுப்போம்.  

வங்கிக் கடன்: கட்டாவிட்டால் 'கட்டம்’ கட்டுவார்கள்!

தொழில் கடன் வாங்கியவர்கள் தொழில் நலிவடைந்துவிட்டது என கடனைக் கட்டாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். அல்லது தொழில் நஷ்டமாகிவிட்டது என வேறு தொழில்களுக்கு மாறிவிடுகின்றனர். இதனால் வங்கித் தந்த பணம் திரும்ப வராமலே போய்விடுகிறது. இந்த நிலைமையில்தான் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்'' என்றார்கள்.  

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.கிருஷ்ணதாசனிடம்

வங்கிக் கடன்: கட்டாவிட்டால் 'கட்டம்’ கட்டுவார்கள்!

(இந்தியன் வங்கி) பேசினோம். ''வங்கிக் கடனைக் கட்டாமல் நாணயம் தவறுபவர்களிடமிருந்து கடனை வசூலிக்க இந்த வழியையும் ஒரு நடைமுறையாக வங்கிகள் மேற்கொள்வதை ரிசர்வ் வங்கி அனுமதித்திருப்பதோடு, அனைத்து வங்கிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் சமூகத்தில் இருக்கும் நன்மதிப்பு பாதிக்கப்படும் என்பதால் கடனை காலம் தவறாமல் கட்டிவிடுகின்றனர். ஆனால், இப்படி செய்யும்போது  என்ன வார்த்தைகளைப் பயன் படுத்தலாம் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை. வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டாதவர்கள் பற்றி எச்சரிக்கை ஏற்படுத்துவதைத் தவிர, யாரையும் புண்படுத்தவேண்டும் என்பதற்காக வங்கிகள் இதைச் செய்யவில்லை'' என்று விளக்கம் தந்தார்.

வாங்கிய கடனைக் கட்டாமல் எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என நினைக்கும் நபர்களுக்கு இந்தவகை நடவடிக்கை ஒரு கிடுக்கிப்பிடிதான்.

கவுரவத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் கடனைக் கட்டிவிடுவதே நல்லது.

 ''வங்கி மீது வழக்குத் தொடுக்கலாம்!''

வங்கிகளின் இந்நடவடிக்கையால் தனி மனிதர்களின் இமேஜ் பாதிப்படையுமே? இதிலிருந்து தப்பிக்க சட்டப்படி என்ன வழி என வழக்கறிஞர் அழகுராமனிடம் கேட்டோம்.

வங்கிக் கடன்: கட்டாவிட்டால் 'கட்டம்’ கட்டுவார்கள்!

''பணத்தைக் கட்டத் தவறிய வாடிக்கையாளர் மீது இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தல்

(proclamation) என்பதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். வேண்டுமென்றே பணம் கட்டத் தவறியவர்கள் மீது வங்கி தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம் என சர்ஃபாசி ஆக்ட் (SARFAESI Act)சொல்கிறது. பிற வங்கிகளுக்கும், இதர வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும் தரும் அறிவுப்புதான் இது.

ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடன் வாங்கியவர் பணத்தைத் திரும்பக் கட்டத் தயாராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு காலஅவகாசம் தரவேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பில் அவர் படத்தை அறிவிப்பில் போடக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கும்முன் சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்கவேண்டும். ஆனால், வாடிக்கையாளரிடம் தெரியப்படுத்தாமல் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் சட்டப்படி வங்கி மீது நடவடிக்கை எடுக்கலாம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism