Published:Updated:

இனி எல்லாம் வளமே !

செ.கார்த்திகேயன், படங்கள்: கே.ரமேஷ்.

இனி எல்லாம் வளமே !

செ.கார்த்திகேயன், படங்கள்: கே.ரமேஷ்.

Published:Updated:

குடும்ப நிதி ஆலோசனை

##~##

முப்பது வயதுக்குள் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், 52 வயதாகி விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்ட நிலையிலும், தன் குடும்பத்துக்கான நிதித் திட்டமிடலை செய்து தாருங்கள் என்று நம்மைத் தேடி வந்தார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜேந்திரசிங். இவருக்கான நிதி ஆலோசனையை விஷா அட்வைஸரி சர்வீஸஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஆர்.செந்தில் தந்தார். அந்த ஆலோசனையை இனி பார்ப்போம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விஜேந்திரசிங்கிற்கு கிருஷ்ணகிரியில் உள்ள ஏழு காலி மனைகளின் தற்போதைய மதிப்பு ரூ.60 லட்சம்; ஜோலார்பேட்டையில் உள்ள இரண்டு காலி மனைகளின்  தற்போதைய மதிப்பு ரூ.8 லட்சம்; தங்கம், பங்குச் சந்தை முதலீடு, தவிர, இ.பி.எஃப். சேமிப்புத் தொகை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் இருக்கின்றன. அதேசமயம், வங்கியில் ரூ.6 லட்சத் துக்கு நகைக் கடன் வாங்கிருக்கிறார்.  

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரூ.4 லட்சத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கவர் இருக்கிறது. தவிர, விஜேந்திரசிங் வேலை செய்த நிறுவனத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கவர் இருக்கிறது. தவிர, தன் பெயரிலும், மனைவி மற்றும் குழந்தைகள் பெயரிலும் ஒன்பது இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார்.

எதிர்காலத் தேவைகள் !

இனி எல்லாம் வளமே !

கிஷன் நிகிலேஷை சி.ஏ. அல்லது எம்.பி.ஏ. படிக்க வைக்கவேண்டும்; குபேர் சிங்கை பி.இ. படிக்க வைக்க வேண்டும்; இருவரின் திருமணத்திற்கும் குறிப்பிட்ட தொகை தேவை; 2025-ம் ஆண்டிற்குள் இரு மகன்களுக்கும்  கிருஷ்ணகிரியில் 1,200 சதுர அடியில் இரண்டு வீடு வாங்கவேண்டும்; வேலை செய்த நிறுவனத்தில் இருந்து ரூ.17.50 லட்சம் விருப்ப ஓய்வாகக் கிடைத்தாலும் ஓய்வுக் காலத்துக்கு என தனியாகத் திட்டமிடவேண்டும்.

அவசரகாலத் தொகை !

இனி எல்லாம் வளமே !

குடும்பச் செலவுக்கு மூன்று அல்லது ஆறு மாதத் தொகையை அவசரகாலத் தொகையாகச் சேமித்து வைத்திருப்பது அவசியம். மூன்று மாதத் தொகை என்றால் ரூ.98,000; ஆறு மாதத்திற்கான தொகை என்றால் ரூ.1.97 லட்சத்தை லிக்விட் ஃபண்ட் அல்லது ஏற்கெனவே வங்கிச் சேமிப்புக் கணக்கில் இருக்கும் ரூ.10,000-த்துடன் சேர்த்து சேமித்து வைப்பது நல்லது.

தங்க நகைக் கடன் !

குடும்பத் தேவைக்காக நகைக் கடன் ரூ.6 லட்சத்துக்கு  வாங்கி இருக்கிறார். இந்தக் கடனை மூன்று ஆண்டுகளில் முடிக்கவேண்டும் என்கிறார். குடும்பச் செலவு மற்றும் சேமிப்பு போக, மாதம் ரூ.20,000 கையில் இருக்கிறது. அத்தொகையை அப்படியே எடுத்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கடனைக் கட்டி அடைத்துவிடுவது நல்லது. அதன் பின்னர் அத்தொகையை சராசரியாக 8 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகள், ஆர்.டி மற்றும் கடன் ஃபண்டுகளில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பிரித்து முதலீடு செய்தால், ரூ.14 லட்சம் கிடைக்கும். இந்தப் பணத்தை ஓய்வுக்காலத்திற்கு  பயன்படுத்திக்கொள்ளலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் !

விஜேந்திரசிங் 1.10 கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம்.  ரூ.10.25 லட்சத்துக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் கவர் ஏற்கெனவே இருப்பதால், ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இதை ஒருவரது பெயரிலேயே எடுக்காமல், ரூ.50 லட்சத்துக்கு விஜேந்திரசிங் பெயரிலும் இன்னொரு ரூ.50 லட்சத் துக்கு சிவகாமியின் பெயரிலும் எடுக்க லாம். இந்த இரு பாலிசியையும் ஆன்லைனில் எடுத்தால் ரூ.20,000  பிரீமியம் கட்டவேண்டி இருக்கும். ஏற்கெனவே செய்துவரும் 8,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பில் இருந்து மகன்களின் கல்விக்கு செய்த முதலீடு 5,600 போக, மீதம் இருக்கும் 2,400 ரூபாயை டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்ட பயன்படுத்தலாம்.

இனி எல்லாம் வளமே !

மூத்த மகனின் கல்விக்கு !

மூத்த மகன் கிஷன், இளங்கலைப் படிப்பிற்கு  இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து ரூ.3.5 லட்சம் தேவை. ஏற்கெனவே முதலீடு செய்து வைத்திருக்கும் பங்குச் சந்தை முதலீடு ரூ.2 லட்சத்தை 7 சதவிகிதம் வளர்ந்திருந்தால் ஐந்து ஆண்டுகள் கழித்து ரூ.2.93 லட்சம் கிடைக்கும். விஜேந்திரசிங் தன் பெயரில் எடுத்துள்ள மணிபேக் பாலிசி 2014-ல் மெச்சூரிட்டி ஆவதால் அதிலிருந்து 77,000 ரூபாய் கிடைக்கும். ஆக, இந்த இரண்டு தொகையையும் சேர்த்து மூத்த மகனின் இளங்கலைப் படிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதுகலைப் படிப்புக்கு இன்னும் எட்டு ஆண்டு கழித்து. ரூ.9.90 லட்சம் தேவை. சிவகாமி பெயரில் எடுத்து வைத்திருக்கும் மணிபேக் பாலிசி 2019-ல் முதிர்வடைகிறது. முதிர்வுத் தொகை ரூ.5.06 லட்சம் கிடைக்கும். இந்தப் பணத்தை அடுத்த ஓராண்டுக்கு 7 சதவிகிதம் வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்தால் ரூ.5.79 லட்சம் கிடைக்கும். மீதி தேவைப்படும் ரூ.4.11 லட்சம் கிடைக்க மாதம் 2,800 ரூபாயை தங்கம், கடன் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என பிரித்து முதலீடு செய்யவேண்டும். இதற்கான முதலீட்டுத் தொகை ரூ.2,800-த்தை ஏற்கெனவே முதலீடு செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருந்து எடுத்து பயன்படுத்தவும். இந்த மூன்று முதலீடுகளுக்கும் சேர்த்து சராசரியாக 10.45 சதவிகிதம் வருமானம் கிடைத்தால் ரூ.4.11 லட்சம் கிடைக்கும். இதை மூத்த மகனின் முதுகலை பட்டப் படிப்பிற்கு பயன்படுத்தவும்.

இளைய மகனின் கல்விக்கு !

இளைய மகனை இன்ஜினீயர் ஆக்கவேண்டும் என்பது இவரது ஆசை. அதற்கு இன்னும் எட்டு ஆண்டுகள் கழித்து,  ரூ.5 லட்சம் தேவை. சிவகாமியின் பெயரில் இருக்கும் யூலிப் பாலிசி முதிர்வின் மூலம் ரூ2.11 லட்சம் கிடைக்கும். மீதித் தேவைப்படும் தொகைக்கு ஏற்கெனவே செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் தொகை ரூ.8,000-லிருந்து ரூ.1,900-லிருந்து எடுத்து தொடர்ந்து எட்டு ஆண்டுகள் மேலே சொன்னதுபோல மூன்று விதமாகப் பிரித்து முதலீடு செய்யவும். இதற்கு சராசரியாக 10.45 சதவிகித வருமானம் கிடைத்தால் ரூ.2.83 லட்சம் கிடைக்கும். ஆக, இரண்டு முதலீட்டுத் தொகையின் கூட்டுத் தொகை ரூ.5 லட்சம். இந்தப் பணத்தை இளையவனின் கல்விக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதுகலை படிப்புக்கு இன்னும் 11 ஆண்டுகள் கழித்து ரூ.13.91 லட்சம் தேவை. விஜேந்திரசிங் தன் பெயரில் எடுத்து வைத்திருக்கும் யூலிப் பாலிசி முதிர்வின்போது (2020-ல்) ரூ5.37 லட்சம் கிடைக்கும். இதை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து, அதற்கு 7 சதவிகித வருமானம் கிடைத்தால், ரூ7.04 லட்சம் கிடைக்கும்.

இனி எல்லாம் வளமே !
இனி எல்லாம் வளமே !

குழந்தைகள் பெயரில் எடுத்து வைத்திருக்கும் ஃப்யூச்சர் ப்ளஸ் பாலிசிகளில் ஒன்று, 2020-ல் முதிர்வடைகிறது. இதன்மூலம் ரூ.1.98 லட்சம் கிடைக்கும். இந்தப் பணத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வ தன் மூலம் ரூ.2.42 லட்சம் கிடைக்கும். மற்றொரு ஃப்யூச்சர் ப்ளஸ் பாலிசி 2023-ல் முதிர்வடைகிறது. இதிலிருந்து கிடைக்கும் முதிர்வுத் தொகை ரூ.2.19 லட்சம். இந்த மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசி முதிர்வி லிருந்து கிடைக்கும் தொகை ரூ.11.65 லட்சம். மீதி ரூ.2.25 லட்சம் தேவை. இதற்கு மாதம் 900 ரூபாயை 12 சதவிகிதம் வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் தொடர்ந்து 11 ஆண்டுகள் முதலீடு செய்தால் ரூ.2.25 லட்சம் கிடைக்கும்.

திருமணத்திற்கு !

மூத்தவனின் திருமணத்திற்கு 13 வருடமும், இளையவனின் திருமணத்திற்கு 16 வருடமும் ஆகும். இதற்கு என்று தனியாக முதலீடு செய்ய இன்றைய நிலையில் போதிய வருமானம் இல்லை. ஆனால்,  ஜோலார்பேட்டையில் உள்ள இரண்டு காலி மனையை விற்பதன் மூலம் பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக முடிக்கலாம். இந்த இடத்தின் இன்றைய மதிப்பு ரூ.8 லட்சம். இன்னும் 13 வருடங்களில் தோராயமாக 10 சதவிகித ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்தால் அன்றைய நிலையில் இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 லட்சமாக இருக்கும். இதில் ரூ.10 லட்சத்தை எடுத்து மூத்த மகனின் திருமணச் செலவிற்கு பயன்படுத்தலாம். மீதிப் பணத்தை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் அடுத்த

இனி எல்லாம் வளமே !

மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வைப்பதன் மூலம் இளையவனின் திருமணச் செலவிற்கு அந்தத் தொகையைப் பயன்படுத்தலாம்.

மகன்களுக்கு வீடு வாங்க !

தன் இரு மகன்களுக்காகவும் கிருஷ்ணகிரியில் 1,200 ச.அடிக்கு  2025-க்குள் வீடு வாங்க ஆசைப்படுகிறார். இதற்கு தலா ரூ.90 லட்சம் தேவைப்படும்.  கிருஷ்ணகிரியில் இருக்கும் ஏழு காலி மனைகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ1.80 கோடியாக உயரும். இதனை விற்று,  இரண்டு வீடுகளை வாங்கலாம்.

ஓய்வுக்காலத்திற்கு !

ஓய்வுக்காலத்தில் இவரும் இவருடைய மனைவியும் தங்கள் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள 1.24 கோடி ரூபாய் சேமிப்பு கையில் இருக்கவேண்டும். விஜேந்திரசிங்கிற்கு கிடைக்கும்

வி.ஆர்.எஸ். தொகை ரூ.17.50 லட்சத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து வைத்தால், எட்டு ஆண்டுகளில் 32.39 லட்சம் ரூபாயாகப் பெருகும்.

தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் இருக்கும் மூன்று எண்டோவ்மென்ட் பாலிசியின் முதிர்வுத் தொகை ரூ.4.34 லட்சம் கிடைக்கும். மனைவியின் நிறுவனத்திலிருந்து கிடைக்கும் ஓய்வுக்காலத் தொகை ரூ.87.20 லட்சம் என மொத்தம் ரூ.1.24 கோடி கிடைக்கும். இதுபோக, நகைக் கடன் முடிந்ததும் செய்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் 14 லட்ச ரூபாய் கூடுதலாக கையில் இருக்கும். தவிர, இருவருக்கும் அரசுப் பணி என்பதால் தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism