ஏகாம்பரத்துக்கு வேலை கொடுக்கற துக்குன்னே சிலபேரு கங்கணம் கட்டிக்கிட்டு ஏடாகூடமா எதையாவது பண்ணி வைக்கிறாங்க. அதான் பாருங்க... சமீபத்துல வெளிவந்த ஃபைனான்ஷியல் செக்டார் சட்டம் குறித்த ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் ரிப்போர்ட் சும்மா இருந்த என்னைய தொணதொணக்க வச்சிடுச்சு. ஆர்.பி.ஐ., செபி, எஃப்.எம்.சி., ஐ.ஆர்.டி.ஏ., பி.எஃப்.ஆர்.டி.ஏ. போன்ற பல்வேறு ரெகுலேட்டர்களை ஒருங்கிணைத்து ஒரு சூப்பர் ரெகுலேட்டரைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கச் சொல்வதுதான் இந்த கமிஷனின் பரிந்துரை.

இதுல செபி, ஐ.ஆர்.டி.ஏ.வை எல்லாம் விட்டுடுங்க. இவையெல்லாம் 1992-க்கு அப்புறமா வந்தது. ரிசர்வ் பேங்க் ஆதியோடு அந்தமா பேங்கிங் செக்டாரையும் மற்றும் பல நிதிச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் ரெகுலேட் செஞ்சுகிட்டு இருக்குது. முன்னாடி கொஞ்சம் முன்னேபின்னேன்னு இருந்தாலும்கூட இப்பல்லாம் ஆர்.பி.ஐ.யோட செயல்பாடு சூப்பராவே இருக்குது. ஃபாரெக்ஸ், எஃப்.டி.ஐ.ன்னு பல்வேறுவிதமான அந்நியச் செலாவணி வரத்து விஷயத்துலகூட ஆர்.பி.ஐ. சிறப்பான முடிவுகளைத்தான் எப்பவுமே எடுக்குதுங்க!

ஆனாலும் பாருங்க, இந்த ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் ரிப்போர்ட் ஆர்.பி.ஐ.க்கு முழுக்க முழுக்க எதிரானதா இருக்குது. என்னென்ன பவர் ஆர்.பி.ஐ. கையிலிருந்து போகுதுன்னு பார்த்தா, நீங்களே பதைபதைச்சுப் போயிடுவீங்க.

ஃபைனான்ஸ் கம்பெனிகளையும் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களையும் கண்காணிக்கிற பொறுப்பு கையைவிட்டு போகப்போகுது. அரசாங்கத்தோட கடன் நிர்வாகத்தை இப்ப ஆர்.பி.ஐ. செஞ்சுகிட்டு இருக்குது. இனி, அதை தனியா ஒரு ஏஜென்சி பொறுப்பேத்து நடத்தப்போகுதாம். அந்நிய நாட்டவர்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகளின் மீதான மொத்தக் கன்ட்ரோலையும் ரிசர்வ் வங்கி வச்சிருந்தது. எவ்வளவு வருது, எப்படி வருது, எப்ப வருதுன்னெல்லாம் ஆர்.பி.ஐ. கன்ட்ரோல்ல இருந்துச்சு. இனிமேல் ஆர்.பி.ஐ. கன்ட்ரோல் எல்லாம் செய்ய முடியாதாம். அரசாங்கத்தோட ஒப்புதலோட சில பல ரெகுலேஷன்களை மட்டுமே போடமுடியுமாம்.

நிதி நிர்வாகத்துல அவ்வப்போது பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு, அமெரிக்காவுல வந்த சப்ப்ரைம் கிரைசிஸ் மாதிரி பிரச்னைகள் வரும்போது, அதைச் சமாளிக்கத் தேவையான பணத்தை ஒரு ரிசர்வுல வச்சுக்கிறதுக்கும் மற்றும் அதை நிர்வாகம் செய்யறதுக்கும் ஒரு குழுவை நிர்மாணம் செய்யப்போறாங்க.

நியாயமாப் பார்த்தா, இந்தக் குழுவுக்கு யாரு தலைவரா இருக்கணும்? ரிசர்வ் வங்கியோட கவர்னர்தானே! அது இல்லியாம். மத்திய நிதி அமைச்சர்தான் அந்தக் குழுவோட தலைமைப் பொறுப்புல இருப்பாராம். எப்படி இருக்கு நியாயம்!

என்ன ஏகாம்பரம் குழப்புறேங்கிறீங்களா? குழப்பலீங்க, தெளிவுபடுத்தறேன். நாட்டுல இருக்கற வட்டி விகிதமும், புழக்கத்துல இருக்கற பணமும்தான் நம்ம நாட்டோட பணத்தோட மதிப்பை நிர்ணயம் பண்ணுது. நம்ம நாட்டை நோக்கி வர்ற அந்நிய முதலீடுகள் அதிகமா வர ஆரம்பிச்சா என்னவாகும்? வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டாலரை வித்து ரூபாயை வாங்குவாங்க. டாலர் அதிகம் விற்கப்படும்போது அதனோட நம்ம ரூபாய்க்கு எதிரான மதிப்பு குறைய ஆரம்பிக்கும். டாலரோட மதிப்பு குறைய ஆரம்பிச்சா, ஏற்றுமதியாளருங்க கஷ்டப்படுவாங்க. இறக்குமதி செய்யறவங்க சந்தோஷப்படுவாங்க.

அதேமாதிரி, வட்டி விகிதமும் உள்ளூர் கரன்சி அதிகமாப் புழக்கத்துலவிட்டா டாலரோட மதிப்பு கூடும். மதிப்பு கூடுச்சுன்னா ஏற்றுமதியாளருங்க சந்தோஷப்படுவாங்க. இறக்குமதி செய்யறவங்க கஷ்டப்படுவாங்க. வட்டி, கரன்சி, எஃப்.டி.ஐ. வரத்துங்கிற எல்லாமே ஆர்.பி.ஐ. கையிலேயே கன்ட்ரோல்ல இருக்கறதால நாட்டுச் சூழலுக்கு ஏற்றமாதிரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துகிட்டு வருது ஆர்.பி.ஐ.! இப்ப இதுல ஃபாரின் பணம் வர்றதை வேற ஒருத்தர் மேனேஜ் பண்ண ஆரம்பிச்சா என்னவாகும்? குழப்பம்தான் மிஞ்சும்.

இதேமாதிரிதான் மத்த எல்லா ரெகுலேட்டர் சமாசாரமும். ஒண்ணோட ஒண்ணு எப்போவாவது இடிக்குதுன்னு எல்லாத்தையும் புடிச்சு ஒண்ணாக் கட்டிவைக்க முயற்சி பண்றது தப்புங்க. செபியையே எடுத்துக்குங்க. கடந்த இருபது வருஷத்துல நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு இப்பத்தான் நல்ல தெளிவான பாதையில போக ஆரம்பிச்சிருக்கு. அதைக் கொண்டுபோய் இன்னோரு ஆபீஸோட சேத்து முடிச்சுப்போட்டா என்னவாகும்? ஒன் ப்ளஸ் ஒன் டூ -வுன்னு சேராதுங்க. ஒன் மைனஸ் ஒன் ஜீரோன்னு காணாமப் போயிடும்.

ஆட்சி இருக்கப்போறதோ ஒரு வருஷம். அப்படி இருக்கறப்ப நாட்டோட தலையெழுத்தையும் பாமரனோட தலையெழுத்தையும் மாத்திட போற மாதிரியான மாறுதல்களைச் செய்யறதுக்கு அரசியல் சட்டரீதியா உங்களுக்கு உரிமையிருக்கலாம். ஆனா, அது நியாயமா, தேவையான்னு கொஞ்சம் யோசியுங்க. நீங்க பாட்டுக்கு எல்லாத்தையும் சேத்துவைச்சுட்டுப் போயிட்டீங்கன்னா, புதுசா வேற யாராவது வந்தா அதை சரிபண்ண படாதபாடு படவேண்டி யிருக்கும்.

கமிஷன் ரிப்போர்ட்டிலேயே சில பேரு இதெல்லாம் சரிப்படாதுன்னு சொல்லியிருக் காங்கன்னு கேள்விப்பட்டேன். தயவு செய்து வற்புறுத்தாதீங்க. சும்மா கடைசி ரீலுல ட்விஸ்டை வச்சுட்டு போயிட்டீங்கன்னா, அடிவாங்குறது நாட்டோட அடிப்படை பொருளாதாரமும், என்னைய மாதிரி பாமரனுங்களும்தான். கொஞ்சம் யோசிச்சு உருப்படியான முடிவை எடுங்க சாமிகளா!