Published:Updated:

இன்டர்நெட் துண்டிப்பால் நஷ்டம்: வழக்குத் தொடர முடியுமா?

படம்: ச.இரா.ஸ்ரீதர்

இன்டர்நெட் துண்டிப்பால் நஷ்டம்: வழக்குத் தொடர முடியுமா?

படம்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:

 கேள்வி - பதில்

##~##

நான் ஒரு நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பு வாங்கியிருந்தேன். எந்த நிலுவையுமில்லை. ஆனால், சில நாட்கள் திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டதால் எனக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சுதாகரன், செங்கல்பட்டு.

ஜெ.செல்வராணி, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''உரிய கட்டணங்கள் செலுத்திய பிறகோ அல்லது எந்த நிலுவைகளும் இல்லாதபோதோ முறையான அறிவிப்பு தராமல் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது சேவை குறைபாடுதான். இதற்காக அந்நிறுவனத்தின் மீது நுகர்வோர் வழக்குத் தொடுத்து இரண்டுவகைகளில் இழப்பீடு கோரலாம். ஒன்று, இணைப்பு  துண்டிக்கப்பட்டதற்கான இழப்பீடு. இரண்டாவது, அதனால் ஏற்பட்ட மனஉளைச்சல், தொழில் மற்றும் பொருளாதார இழப்பு போன்றவற்றுக்காகவும் இழப்பீடு கோரலாம். ஆனால், இன்டர்நெட் துண்டிப்பால்தான் தொழில் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்.

இன்டர்நெட் துண்டிப்பால் நஷ்டம்: வழக்குத் தொடர முடியுமா?

என் மொபைல் போனுக்கு தேவையில்லாத அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்பி பணம் பிடிக்கிறார்கள். இது தொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்திற்குத் தொடர்புகொண்டு புகார் செய்தால் மட்டுமே பணம் திரும்பக் கிடைப்பது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக நான் யாரிடம் புகார் அளிப்பது?

- குமரகுரு, திருத்துறைப்பூண்டி.

எஸ்.சரோஜா, ஒருங்கிணைப்பாளர், கன்ஸ்யூமர் சிவிக் ஆக்ஷன் குரூப்.

இன்டர்நெட் துண்டிப்பால் நஷ்டம்: வழக்குத் தொடர முடியுமா?

''உங்களது விருப்பத்திற்கு மாறாக உங்களது மொபைல் எண்ணிற்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.கள் வருவதைத் தடை செய்ய 1901 (ஞிஷீ ஸீஷீt ஞிவீstuக்ஷீதீ) எண்ணிற்கு தொடர்புகொண்டு பதிவு செய்துவிடவும். எந்த செல்போன் சேவை நிறுவனம் என்றாலும், இந்த பொதுவான எண்ணில் பதிவு செய்யலாம். இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட மார்க்கெட்டிங் சேவை நிறுவனங்கள் செய்யும் தொலைபேசி அழைப்புகள், எஸ்.எம்.எஸ். வருவதைத் தடை செய்யலாம். ஆனால், பதிவு செய்யப்படாத மார்க்கெட்டிங் நிறுவனங்களை தடை செய்ய முடியாது. இதை அந்தந்த சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்து தடைசெய்யக் கோரலாம். அடுத்ததாக, வாடிக்கையாளருக்கு வழங்கும் கூடுதல் சேவைகளை செல்போன் நிறுவனங்கள் தங்களது ஏஜென்சி மூலம் மேற்கொள்வதால், அவர்கள் தவறு செய்துவிடுகின்றனர் என்று தங்களது வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் தீர்த்து வைக்கின்றனர். ஆனால், செல்போன் சேவை நிறுவனங்கள் நமது அனுமதி இல்லாமல் நம்மிடமிருந்து பணத்தைப் பிடித்துக்கொண்டு அதை திரும்பச் செலுத்தாதபட்சத்தில், டிராய் விதிகள்படி சேவைக் குறைபாடு என்பதால் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரலாம்.''

நான் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டி, அந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளேன். இதனால் எனக்கு ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும் என என் அலுவலகத்தில் சொல்கிறார்கள். அதற்கு மேல் உள்ளதை வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து ரீஃபண்ட் பெறச் சொல்கிறார்கள். இது சரியா?

- சுந்தரமூர்த்தி, சென்னை.  பாஸ்கரன், ஆடிட்டர்.

இன்டர்நெட் துண்டிப்பால் நஷ்டம்: வழக்குத் தொடர முடியுமா?

''வீட்டுக் கடன் மூலம் கட்டிய வீட்டை சொந்த உபயோகத்திற்கு இல்லாமல் வாடகைக்கு விட்டு, அதன்மூலம் கிடைக்கும் வாடகை வருமானத்தை உங்களது ஆண்டு மொத்த வருமானத்தில் காட்டும்போது, வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் வட்டி முழுவதற்கும் வரிச் சலுகை பெறலாம். வீடு சொந்த உபயோகம் என்கிறபோதுதான் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய்வரை வரிச் சலுகை என்பது பொருந்தும். படிவம் 12சி கொடுத்து உங்கள் அலுவலகம் மூலமாகவே நீங்கள் இந்த வரிச் சலுகையைப் பெறமுடியும். எனவே, உங்கள் அலுவலகத்தில் இந்த விஷயங்களையும் கவனிக்கச் சொல்லவும். அவர்கள் இந்த வசதியை உங்களுக்கு அளிக்கவில்லை என்றால், உங்கள் வருமான வரிக் கணக்கை தனியாக தாக்கல் செய்து ரீஃபண்ட் பெறுவதற்கு முயற்சி செய்யவும்.''

லோக் அதாலத்தில் எப்படி வழக்குத் தொடருவது? வழக்குத் தொடர கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?

- தில்லைராஜன், வேலூர்.

அ.ரோஜா, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

இன்டர்நெட் துண்டிப்பால் நஷ்டம்: வழக்குத் தொடர முடியுமா?

''மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) வழக்கிற்கு முந்தைய பிரச்னைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் என இரண்டு வகைகளில் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கின்றன. வழக்கிற்கு முந்தைய பிரச்னையாக இருக்கும்பட்சத்தில், ஒரு மனு எழுதி தருவதன் மூலம் மக்கள் நீதிமன்றத்திற்கு உங்கள் பிரச்னையை எடுத்துச்செல்லலாம். இதற்கு நீதிமன்றக் கட்டணம் எதுவுமில்லை. வழக்கறிஞர் தேவையில்லை. மேலும், தபால் செலவுகளைக்கூட சட்டப் பணிகள் ஆணைக் குழுவே செய்துகொள்ளும்.

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளைப் பொறுத்தவரை, சமரசமாகத் தீர்த்துக்கொள்ளக்கூடிய வழக்கு என்று நீதிமன்றம் கருதுமானால் அல்லது இரு தரப்பினரும் விரும்பினால் அந்த வழக்கு, மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும். இருதரப்பினரும் சமரசமாகச் சென்றால் மட்டும் மக்கள் நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைக்கும். மேலும், பணம் சம்பந்தப்பட்ட வழக்காக இருந்தால் அதற்காகச் செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகள் அல்லது  பிரச்னைகளுக்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.''

இன்டர்நெட் துண்டிப்பால் நஷ்டம்: வழக்குத் தொடர முடியுமா?
இன்டர்நெட் துண்டிப்பால் நஷ்டம்: வழக்குத் தொடர முடியுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism