Published:Updated:

வெளிநாட்டுச் சுற்றுலா: இப்படித் தயாராகுங்க!

வெளிநாட்டுச் சுற்றுலா: இப்படித் தயாராகுங்க!

வெளிநாட்டுச் சுற்றுலா: இப்படித் தயாராகுங்க!

வெளிநாட்டுச் சுற்றுலா: இப்படித் தயாராகுங்க!

Published:Updated:

ஆலோசனை

##~##

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஊட்டி, கொடைக்கானல் என்று உள்ளூரிலேயே சுற்றுவது? வெளிநாடுகளுக்கு சுற்றுலா போய்வந்தால்தான் என்ன? என்கிற கேள்வி பலரது மனதில் இப்போது வர ஆரம்பித்துவிட்டது. ஆனால், உள்ளூர் டூர் மாதிரி இல்லை, வெளிநாட்டுப் பயணம். அதற்கு பல விஷயங்களை நாம் தயார் செய்யவேண்டும். என்ன விஷயங்கள் என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் யாத்ரா டாட் காம் நிறுவனத்தின் சென்னை மேலாளர் கே.கமலசுதன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முதலில் உங்கள் ஹாலிடேவுக்கான நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக்கிக்கொள்ளுங்கள். முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு, ஷாப்பிங், குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலா, ஹனிமூன் என உங்கள் சுற்றுலாவின் நோக்கம் எது என்பதில் தெளிவு வேண்டும்.

அடுத்து, நம் பட்ஜெட். நம் பட்ஜெட் எவ்வளவு என்பதற்கு ஏற்ப சுற்றுலாவைத் திட்டமிடலாம். இப்போதெல்லாம் உள்நாட்டில் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிற செலவில், வெளிநாட்டுச் சுற்றுலாவை முடித்துவிடலாம். அந்த அளவுக்கு மீடியம் பட்ஜெட்டில்கூட வெளிநாட்டுச் சுற்றுலா சாத்தியமாகிவிட்டது.  

அடுத்து முக்கியமான விஷயம், சுற்றுலாப் போவதற்கான சீஸன் எப்போது என்பதை முடிவு செய்வது. எல்லா காலமுமே சீஸன்தான் என்கிற நாடுகளாக இருந்தால் நாம் திட்டமிடுவதற்கு ஏற்ப சில பல சலுகைகளையும் நமது பட்ஜெட்டிற்குள் கொண்டு வந்துவிட முடியும்'' என அடிப்படை விஷயங்களை விளக்கியவர், நிம்மதியான வெளிநாட்டுப் பயணத்திற்கு அவசியமான வேறு சில விஷயங்கள் பற்றியும் சொன்னார்.

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

பாஸ்போர்ட் / விசா!

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

முதலில் வெளிநாடு செல்வதற்குத் தேவை யான நம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் பக்காவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு எடுத்ததாகவோ, ஆறு மாதங்கள் வேலிடிட்டி உள்ளதாகவோ இருப்பது நல்லது.  அதுபோல, எந்த நாட்டிற்குச் செல்லத் திட்டமிடுகிறோமோ, அதற்கேற்ப விசா எடுக்க வேண்டும்.

நான்கு நாட்களுக்குள் விசா தரும் நாடுகளும் இருக்கின்றன. பதினைந்து நாட்களில் விசா தரும் நாடுகளும் இருக்கின்றன. ஆறு மாதங்கள் காத்திருக்கவேண்டிய நாடுகளும் உள்ளன. எனவே, நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் நடைமுறைக்கு ஏற்ப விசா எடுக்க திட்டமிடவேண்டும். விசா தேதிக்கு ஏற்ப நமது சுற்றுலாப் பயணத்தைத் திட்டமிடுங்கள்.

விடுமுறை எப்போது?

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

சுற்றுலாத் திட்டத்தில் உங்கள் விடுமுறையை மட்டுமல்லாமல், நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் விடுமுறை தினங்களையும் கணக்கில் எடுக்கவேண்டும். சில நேரங்களில் நாம் பார்க்க விரும்புகிற இடம் விடுமுறை விடப்பட்டிருந்தால், நாம் அதைப் பார்க்க முடியாமலே போகும். பொதுவாக, வெளிநாடு சுற்றுலா என்று திட்டமிடுகிறபோது ஒரு சுற்றுலா ஏற்பாட்டாளரிடம் உங்கள் விருப்பம் அல்லது பட்ஜெட்டை தெரிவித்து திட்டமிடுவது நல்லது. அவர்களே மற்ற ஏற்பாடுகளை கவனித்துக்கொள்வார்கள். மேலும், சுற்றுலா ஏற்பாட்டாளர் மூலமாகச் செல்லும்போது சில சலுகைகளும், காம்போ ஆஃபர்களும் கிடைப்பதன் மூலம் மொத்தச் செலவில் 20 சத விகிதமாக மிச்சப்படுத்தலாம்.

விமான டிக்கெட்!

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

ஒவ்வொரு நாட்டு சீஸனுக்கு ஏற்பவும் விமான டிக்கெட் கட்டணம் ஏறும், இறங்கும். எனவே, பயணத்தை எந்த அளவுக்கு முன்கூட்டித் திட்டமிடுகிறோமோ, அதற்கேற்ப விமான பயணக் கட்டணத்தில் சில சலுகைகளும் கிடைக்கும். குறிப்பிட்ட நாட்டில் சீஸனைப் பொறுத்து அந்த வழித்தடத்தில் மட்டும் கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, முதலில் திட்டமிடும்போதோ அல்லது விமான டிக்கெட் சலுகையில் புக் செய்து வைத்துக்கொண்டோ அல்லது குறைந்த கட்டண சலுகை அறிவிப்பதற்கு ஏற்பவோ பயணத்தைத் திட்டமிடலாம். நாம் வெளிநாட்டிற்கு செல்வதுபோல இந்தியாவின் சீஸனுக்கு ஏற்ப வெளிநாட்டுப் பயணிகளும் இங்கு வருவார்கள் என்பதால், நமது நாட்டு சீஸன் காலங்களிலும் விமான டிக்கெட் இருக்கும். அதையும் கவனிக்கவும்.

ரிட்டர்ன் டிக்கெட்!

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

ரிட்டர்ன் டிக்கெட் எடுப்பது ஒருவகையில் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். நமது திட்டத்தில் எந்த மாற்றமுமில்லாமல் திரும்பி வரலாம். சுற்றுலாவை முடித்துவிட்டு அதற்கேற்ப ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கலாம் என்றாலும், சில சமயங்களில் ரிட்டர்ன் டிக்கெட்டிற்காக காத்திருக்கும் சூழல் வரலாம். எனவே, அந்த டென்ஷனை தவிர்க்க முன்பே ரிட்டர்ன் டிக்கெட்டை எடுத்துவிடுவது நல்லது. மேலும், பாஸ்போர்ட் / விசா ஆவணங்கள் தொலைந்து போனாலும் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்திருந்தால் அதுபோன்ற நிலைமைகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும். நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

பணமாற்றம்!

சுற்றுலாச் செல்லத் திட்டமிடும்போதே தேவையான அளவுக்கான பணத்தை வெளிநாட்டு கரன்சிகளாக மாற்றிக் கொள்வது நல்லது அல்லது இன்டர்நேஷனல் மணி கார்டு வாங்கி விடலாம். தேவையான அளவு பணத்தை டெபாசிட் செய்துவிட்டால் செல்லும் இடத்தில் சிக்கல் இருக்காது. கைவசம் இந்திய ரூபாய் தேவையில்லை.

லக்கேஜ்!

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

எந்த அளவுக்கு குறைவான லக்கேஜ்களை எடுத்துச் செல்லமுடியும் என்று பாருங்கள். அப்போது தான் சுற்றுலா முடித்து திரும்பி வரும்போது அங்கிருந்து நிறைய பொருட்களை உங்களால் வாங்கி வரமுடியும்.  ஷாம்பு, பேஸ்ட், லிப்ஸ்டிக் போன்ற லிக்விட் பொருட்கள் எடுத்துச் செல்கிறீர்கள் எனில், அவை எல்லாம் சேர்த்து 1,000 மில்லி தாண்ட வேண்டாம். சில நாடுகளிலிருந்து வரும்போது 20 கிலோ, 30 கிலோ என்கிற அளவில் மட்டுமே அங்கிருந்து பொருட்களை வாங்கி வரமுடியும். எனவே, ஷாப்பிங் செய்தாலும் கொண்டுவர முடியாத நிலை ஏற்படும்.

மருந்து!

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

லக்கேஜ் பேக் செய்யும்போதே தேவையான மருந்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். நமது நாட்டில் கிடைக்கும் மருந்துகள் வெளிநாட்டில் கிடைக்காமல் இருக்கலாம். அல்லது அதற்காக அங்கு அலைந்து நேரம் செலவிட வேண்டியிருக்கும். மருந்துப் பொருட்களை எடுத்து வைக்கும்போதே அதற்குரிய ப்ரிஸ்கிரிப்ஷன்களையும் எடுத்துக்கொள்ளவும். இதை விமானத்திலும் கையில் வைத்துக்கொள்ளலாம். அதுபோல, குழந்தைகளுக்கான உணவுகளையும் மறக்காமல் எடுத்துக்கொள்ளவும். இது எப்போதும் கையில் இருக்கவேண்டும்.

கைப்பை!

எப்போதும், ஒரு கைப்பையை மறக்காமல் வைத்துக்கொள்ளவும். கேமரா, தண்ணீர் பாட்டில் போன்றவையும், பாஸ்போர்ட், விசா,  மருத்துவக் காப்பீடு நகல்கள், மருந்துப் பொருட்கள், நம்முடைய அவசர உதவி எண், தங்கியிருக்கும் ஓட்டல் முகவரி, தொலைபேசி எண்,  சுற்றுலா மேனேஜர் எண் போன்றவற்றை மறக்காமல் வைத்திருக்கவேண்டும். இந்த கைப்பை நமது உடலோடு ஒட்டியிருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

பாதுகாப்பு!

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!

வெளிநாட்டுப் பயணத்தின்போது நமது பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்துகொள்ள வேண்டும். சுற்றுலாச் சென்ற இடத்தில் அங்குள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும். சுற்றுலா வழிகாட்டி சொல்வதை மீறவோ அல்லது சுற்றுலாத் தலத்தில் உள்ள பணியாளர்கள் தரும் ஆலோசனைகளை மீறவோ கூடாது. சாகச விளையாட்டுகள், சீதோஷ்ண நிலை போன்றவற்றில் உங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே சுற்றுலா இனிக்கும். பாதுகாப்பு விஷயத்தில் சறுக்கல் என்றால் சுற்றுலா பாழ்தான்.''

இனி நீங்கள் மேற்கொள்ளப்போகும் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும். பான் வாயேஜ்!  

- நீரை.மகேந்திரன்,  படம். வீ.நாகமணி.

வெளிநாட்டுச் சுற்றுலா:  இப்படித் தயாராகுங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism