Published:Updated:

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

சுற்றுலாச் செல்லத் திட்டமிடுவது எப்படி? படம்: சு.ஸ்டீவ்ஸ் இராட்ரிக்ஸ்.

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

சுற்றுலாச் செல்லத் திட்டமிடுவது எப்படி? படம்: சு.ஸ்டீவ்ஸ் இராட்ரிக்ஸ்.

Published:Updated:

கவர் ஸ்டோரி

##~##

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை சுற்றுலாவிற்கு நம் மக்கள் அவ்வளவாகச் செல்ல விரும்பியதில்லை. ரிலாக்ஸ்டு-ஆன வாழ்க்கைமுறை இருந்ததாலும், பொருளாதாரம் அவ்வளவு நன்றாக இல்லாததாலும் மக்கள் சுற்றுலாவிற்கு அதிகம் சென்றதில்லை. மேலும், கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்த காலம் அது. ஓர் ஊருக்குச் செல்வதென்றால் பெரும் படையாகத்தான் கிளம்பிச் செல்ல வேண்டியிருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய தேதியில் பல நாடுகளுக்கு தீனி போடுவது நமது இந்திய சுற்றுலாப் பயணிகள்தான். உள்நாட்டிலும் சுற்றுலாச் செல்வது அதிகரித்துவிட்டது. காரணம், நகரவாசிகளின் வேகமான வாழ்க்கைமுறை, சின்னச் சின்னதாகப் பிரிந்துவிட்ட குடும்பங்கள், அதிகமான சம்பாத்தியம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் குழந்தைகளைப் பார்க்கச் செல்லும் பெற்றோர்கள், பெற்றோர்களைக் காணவரும் குழந்தைகள் என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

நமது வாழ்க்கையில் சுற்றுலாச் செல்வது என்பது ஓர் அங்கமாகிவிட்ட நிலையில், அதற்காக திட்டமிடுவதுதான் உசிதம். ஓரிரு குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்கு இன்றைய நிலையில் வேலைப்பளு மிக அதிகம். அதுவும் கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இதுபோன்ற சூழ்நிலையில், சுற்றுலாவிற்காக திட்டமிடுவதை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, நிதி சார்ந்த திட்டமிடல்; மற்றொன்று, பயணம் சார்ந்த திட்டமிடல். முதலில் நிதி சார்ந்த திட்டமிடலைப் பார்த்துவிடுவோம்.

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

சுற்றுலாச் செல்வதற்கு நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதற்கு, முதலில் நாம் எங்கு டூர் செல்கிறோம் என்பது தெரியவேண்டும். அதற்கு நமது டூர் திட்டத்தை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வோம்.  

1. காலாண்டிற்கு ஒருமுறை செல்லும் பிக்னிக் (பொதுவாக ஒரு நாள் டூர்கள்) - வசிக்கும் இடத்திலிருந்து சில மணி நேரங்களில் செல்லக்கூடிய இடங்கள்.

2. ஓரிரண்டு வருடத்திற்கு ஒருமுறை உள்நாட்டிற்குள் செல்லும் டூர்கள் (செல்லும் இடத்தை / போக்குவரத்தைப் பொறுத்து மூன்றிலிருந்து ஏழு நாட்கள்).

3. நான்கைந்து வருடத்திற்கு ஒருமுறை செல்லக்கூடிய வெளிநாட்டு டூர்கள் (மூன்றிலிருந்து பதினான்கு நாட்கள்).

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றில், வருடத்தில் பலமுறை செல்லக்கூடிய பிக்னிக்குகளுக்கு ஆகும் செலவை மாதாந்திர செலவுகளிலேயே கொண்டுவந்துவிடலாம். நான்குபேர் கொண்ட குடும்பம் என்றால், பிக்னிக் செல்லும் இடத்தைப் பொறுத்து ரூ.500 - 2,000 வரை செலவாகலாம். சராசரியாகப் பார்க்கும்போது மாதத்திற்கு ரூ.500-ஐ பிக்னிக்குகளுக்கு ஒதுக்கிக்கொள்ளலாம்.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செல்லும் உள்நாட்டு டூருக்கு, செல்லும் இடங்கள் மற்றும் நாட்களைப் பொறுத்து ரூ.10,000 - 20,000 தேவைப்படலாம். இதை ஆவரேஜாக மாதத்திற்கு ரூ.1,500 என எடுத்துக்கொள்ளலாம்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செல்லும் வெளிநாட்டு டூருக்கு, செல்லும் இடம் மற்றும் நாட்களைப் பொறுத்து ரூ.1 - 3 லட்சம் ஆகும். ஆவரேஜாக ரூ.2 லட்சம் ஆகும் என்று எடுத்துக்கொண்டால், நான்காண்டிற்கு ஒருமுறை டூர் என்றால், மாதத்திற்கு சுமாராக ரூ.4,000 சேமிக்கவேண்டி இருக்கும். இந்தத் தொகையை நான்காண்டிற்கு சேமிக்கையில், வட்டி ஓரளவுக்கு கிடைக்கும். என்றாலும், பண வீக்கமும் ஏறக்குறைய அந்த அளவுக்கு இருக்கும் என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

மொத்தத்தில் சராசரியாக மாதத்திற்கு ரூ.6,000 சேமித்தால், ஆண்டிற்கு நான்கு பிக்னிக்குகள், ஓர் உள்நாட்டு டூர் மற்றும் நான்காண்டிற்கு ஒருமுறை வெளிநாட்டு சுற்றுலாச் செல்லலாம். அடுத்துவரும் கேள்வி, இப்பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதுதான்.

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

சந்தேகமே இல்லாமல் இதுபோன்ற தேவைகளுக்கு சேமிக்க சிறந்த உபகரணங்கள் லிக்விட்/ அல்ட்ரா ஷார்ட்டேர்ம் ஃபண்டுகள் அல்லது ரெக்கரிங் டெபாசிட்கள் ஆகும். லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட்டேர்ம் ஃபண்டுகளில் பணத்தைத் தேவைப்படும்பொழுது எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது; ஆனால் ரெக்கரிங் டெபாசிட்களில் அந்த வசதி இல்லை. ரெக்கரிங் டெபாசிட்டில் வரும் வட்டி கேரன்டி உண்டு. ஆனால், லிக்விட் ஃபண்டுகளில் ஆர்.டி-யை ஒட்டி வட்டி கிடைத்துவிடும் என்றாலும், ஃபண்ட் ஹவுஸ்கள் கேரன்டி தரக்கூடாது. ஆர்.டி-யை நீங்கள் எந்த வங்கியிலும் அல்லது தபால் அலுவலகத்திலும் துவக்கலாம். கீழே சில நல்ல லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளைத் தந்துள்ளேன். உங்கள் வசதிக்கு ஏற்ப எஸ்.ஐ.பி. முறையில் சேமிப்பைத் தொடங்கிக்கொள்ளுங்கள் அல்லது மொத்தமாக முதலீடு செய்துகொள்ளுங்கள்.

1. ஹெச்.டி.எஃப்.சி. கேஷ் மேனேஜ்மென்ட் ஃபண்ட் - டிரஸரி அட்வான்டேஜ் ப்ளான்,

2. ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ ஃப்ளெக்ஸி இன்கம் ப்ளான்,

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

3. யூ.டிஐ. டிரஸரி அட்வான்டேஜ்,

4. டி.எஸ்.பி-பி.ஆர். மணி மேனேஜர்,

5. பிர்லா சன் லைஃப் கேஷ் மேனேஜர்.

இனி, பயணத்தை எப்படி ப்ளான் செய்யலாம் என்று பார்ப்போம். ஒவ்வொருமுறை நாம் சுற்றுலாச் செல்லும்போதும், பொதுவாக நாம் இதுவரை சென்றிராத புதிய இடங்களுக்குத்தான் செல்வோம். டூருக்கு செல்வதைவிட, அதற்காக திட்டம் போடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதி. பிக்னிக் செல்வதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பு திட்டமிடுங்கள். உள்நாட்டு டூர் செல்வதற்கு குறைந்தது ஆறு மாத காலத்திற்கு முன்பும், வெளிநாட்டு டூர் செல்வதற்கு ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் திட்டமிடலைத் தொடங்கிவிடுங்கள்.

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

பிக்னிக் செல்லும்போது சொந்த கார் வைத்திருப் பவர்கள், வசதிக்காகவும், சேமிப்பிற்காகவும் அதிலேயே சென்று வந்துவிடலாம். கார் இல்லாதவர்கள் பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை உபயோகித்துக்கொள்ளலாம். உள்நாட்டு டூருக்கு ரயில் பிரயாணம் கச்சிதமாக அமையும். வெளிநாட்டிற்கு விமானம் ஒன்றுதான் வழி - கப்பல் பயணம் (குரூயிஸ்) சென்றால் தவிர.

எங்கு செல்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதுதான் பெரிய வேலை. இக்கட்டத்தில் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துரையாடலில் பங்கேற்கச் சொல்லுங்கள். பொதுவாக பெரியவர்கள், கோயில்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், குழந்தைகளுக்கு ஃபன் (கேளிக்கை/ ஜாலி) வேண்டும். இரு தரப்பினரையும் சமன் செய்யும் வகையில் உங்கள் புரோகிராமை அமைத்துக்கொள்ளுங்கள்.

பார்க்காத இடங்களில் நல்ல டீல் எங்கு கிடைக்கிறது என்பதையும் ஆராயுங்கள். ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, கூர்க், டார்ஜிலிங் போன்ற மலைவாசஸ்தலங்களில் சீஸன் ஆரம்பிப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு அல்லது முடியும் தருவாயில் ஓட்டல்கள் மிகவும் சீப்பாக இருக்கும். இதைப்போலவே வெளிநாட்டு டூர்களுக்கு அட்வான்ஸாக புக் செய்யும்போது நல்ல டீல் கிடைக்கும். இதுபோல் நல்ல திட்டமிடலினால், பணத்தை நன்றாகச் சேமிக்கலாம்.

உங்கள் நண்பர்கள் அல்லது சொந்தபந்தங்களுடன் ஒரு குரூப்பாகச் செல்லமுடியும் என்றால், தனியாக உங்களுக்கென்றே டூரை அமைத்துத் தர நிறைய டூர் ஆபரேட்டர்கள் முன்வருவார்கள். செலவும் குறையும். உங்களது விருப்பம்போல் டூரையும் அமைத்துக்கொள்ளலாம். அதேபோல, அலுவலக நண்பர்கள் ஒன்றாகச் செல்வதும் உண்டு. சிலர் டூர் தனியாகச் செல்வதை விரும்புவர். உங்கள் ரகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

இணையதளங்கள் மூலம் இன்று பெரும்பாலான தகவல்கள் கிடைத்துவிடுகின்றன. ஆகவே, செல்லும் இடங்களைப் பற்றி முன்பே அறிந்து கொள்வதுடன், அந்த இடங்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள். சீஸனுக்கு ஏற்றாற்போல் துணிமணிகள், அவசரத்திற்கு மருந்து மாத்திரைகள், அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் போன்றவற்றை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் செல்லும் இடம் நகரத்தைவிட்டு உள்வாங்கியிருக்கும் பொழுது, பக்கத்தில் இருக்கும் மருத்துவ வசதி, கார் வொர்க்ஷாப், போலீஸ் ஸ்டேஷன் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். சிறு குழந்தைகளை வைத்துள்ளவர்கள் டூர் செல்லும்போது அதிக கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். ஓரிரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ளவர்கள், குழந்தைகள் சற்று பெரிதாகும் வரை டூரை தள்ளிப்போடலாம்.

நீங்கள் செல்லும் நாட்களுக்குள் நினைத்த அனைத்தையும் பார்த்துவிட முடியும் என்று சொல்ல முடியாது. ஆகவே, எந்தெந்த இடங்களுக்கு/ எந்தெந்த அயிட்டங்களுக்கு முன்னுரிமை என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துவிடுவீர்கள். இதை மிஸ் செய்துவிட்டேன், அதை மிஸ் செய்துவிட்டேன் என்ற புலம்பல், டூர் சென்றுவந்த பிறகு இருக்காது.

டூர் செல்வதற்கு முன் பணத்தை முழுவதுமாக கட்டிவிடுவது, பலருக்கு டென்ஷனைக் குறைக்கும். அவ்வாறு செய்யும்போது, எதிர்பாராதவிதமாக உங்களால் டூர் செல்ல முடியவில்லை என்றால், கேன்சல் செய்ய வேண்டிவரும். அதைப்போல, டூர் ஆபரேட்டரும் எதிர்பாராதவிதமாக கேன்சல் செய்யலாம். அதுபோன்ற சமயத்தில் கேன்சலேஷன் சார்ஜஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். மேலும், டூர் செல்வதற்கு ஒரு நாள் முன்பே உங்களின் பேக்கிங்கை முடித்து விடுங்கள். அது கடைசி நிமிட அவசரத்தைக் குறைக்கும்.

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

இன்றைய இன்டர்நெட் உலகில், இன்டர்நெட் வசதி இல்லாமல் பலரால் ஒருநாள்கூட இருக்க முடியாது. ஆகவே, நீங்கள் சுற்றுலாச் செல்வதற்கு முன்பே, எவ்வளவு நாட்கள் விடுப்பில் செல்கிறீர்கள் என்பதை இ மெயில் மூலம் அறிவித்துவிடுங்கள். உங்களுடைய இடத்தில் அவர்கள் வேறு யாரைத் தொடர்புகொள்ளலாம் என்பதையும் தெரிவித்துவிடுங்கள். அவசரத்திற்கு மட்டும் உங்களைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள். டூரிலும் சென்று போனில் பேசிக்கொண்டும், கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டும் இருந்தால், உங்களுடன் வருபவர்களுக்கு தர்மசங்கடமாகிவிடும். வேண்டுமென்றால் நீங்கள் டூரில் இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை போன், இ மெயிலுக்காக ஒதுக்கிக்கொள்ளலாம்.

உள்ளூர் முதல் வெளிநாடு வரை:

நீங்கள் செல்லும் இடங்களில் நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல் இருக்கலாம், இன்டர்நெட் வசதி இல்லாமல் இருக்கலாம்; அதைவிட மோசம் தமிழ்நாட்டில் சென்னை அல்லாத பிற இடங்களில் உங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்ய மின்சாரம்கூட இல்லாமல் இருக்கலாம். இவற்றையெல்லாம் பற்றி திட்டமிட்டுக் கொண்டீர்கள் என்றால், உங்கள் விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கலாம்.

என்ன நீங்கள் டூருக்கு ரெடியா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism