Published:Updated:

மறக்க முடியாத ஜாலி டூர்!

மறக்க முடியாத ஜாலி டூர்!

மறக்க முடியாத ஜாலி டூர்!

மறக்க முடியாத ஜாலி டூர்!

Published:Updated:
##~##

அனுபவங்கள்

ஹாலிடே சீஸனில் பல வீடுகளிலும் தீவிரமாகப் போடும் ப்ளான்களில் முக்கியமானது டூர் போவது. அப்படி ப்ளான் பண்ணி சமீபத்தில் சென்றுவந்த சுற்றுலா அனுபவங்களை சிலரிடம் கேட்டோம். அவர்களின் ஜாலிடே அனுபவம் இதோ...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்ஜெட் அவசியம்!

பாண்டியன், தேனி.

மறக்க முடியாத ஜாலி டூர்!

''முதலில் டூர் செல்லும் இடம் தீர்மானமான பிறகு, பணம் எவ்வளவு தேவைப்படும் என்பதைக் கணக்குப் போட்டுத் திட்டமிடுவோம். நண்பர்களுடன் சேர்ந்து செல்லும்போது செலவு கூட - குறைய ஆகலாம். டூர் போகும் இடம் குறித்த விவரங்களை சேகரித்து தெரிந்துகொண்ட பின்னர் கிளம்புவது நல்லது. இதனால், செல்லும் இடத்தில் நேரம் விரயம் ஆகாமல் பார்த்துக்கொள்வோம். செலவுகளை மிச்சப்படுத்த முன்கூட்டியே ரயில் டிக்கெட் மற்றும் செல்லும் இடங்களில் தங்குவதற்கு தேவையான ரூம்களை புக் செய்துகொள்வோம். எல்லா முன்னேற்பாடுகளையும் நாங்கள் கச்சிதமாகச் செய்துவிடுவதால் டூர் சென்ற இடத்தில் நிம்மதியாக ஜாலியாக இருந்துவிட்டு வருவோம்.''

 சேமித்து, செல்கிறோம்!

சுப்பிரமணி, சென்னை.

மறக்க முடியாத ஜாலி டூர்!

''நாங்க போனதுலயே வாழ்க்கை முழுவதுக்கும் மறக்கமுடியாத ட்ரிப்னா சிம்லா, குலுமனாலி டூர்தான். பத்து குடும்பங்கள் சேர்ந்து போனோம். ஒவ்வொரு இடமும் அவ்ளோ அழகு. நாங்க பத்து குடும்பங்களும் சேர்ந்து போனதால பண விஷயத்துல சரியா ப்ளான் பண்ணி போனோம். ஒவ்வொரு வருஷமும் இந்த மாதிரி ரெண்டு ட்ரிப் கண்டிப்பா டூர் போவோம்.  இதுக்கு மாதாமாதம் தவறாம சீட்டு போட்டு காசு சேர்த்துட்டு இருக்கேன். போகப்போற ட்ரிப்புக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ, அதுக்கு ஏத்தமாதிரி பணத்தைச் சேர்த்து வைக்கறது என்னுடைய பழக்கம். நாங்க சிம்லா போறதுக்குத் திட்டம் போட்டுடிருந்தப்ப அங்க தங்கறதுக்கு ரூம் பத்தி சென்னையில விசாரிச்சப்ப 2,000 ரூபாய்ன்னு சொன்னாங்க. ஆனா, அங்க போயி ரூம் விசாரிச்சா 900 ரூபாய்க்கெல்லாம் ரூம் அருமையாக் கிடைச்சதை நெனைச்சா இன்னைக்கும் சந்தோஷமா இருக்கு!''

முன்னரே திட்டமிடணும்!

பாஸ்கரன், திருச்சி.

மறக்க முடியாத ஜாலி டூர்!

''சமீபத்துல   கொல்லி மலைக்கு குடும்பத்தோட கார்ல போனோம். 180 கி.மீ. பயணம். இடையிடையே கார் பிராப்ளம்... மலை உச்சியில் இருக்கிற கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு, வீட்டுக்கு திரும் பினப்ப  இரவு மணி 11.  சரியா சாப்பாடு கூட கிடைக்காம கஷ்டப்பட்டோம். தேவையான பொருட்களை எடுத்துக்காதது, காரின் கண்டிஷனை கவனத்தில்கொள்ளாதது, நேரத்தைத் திட்டமிடாததுதான் டூர்ல ஏற்பட்ட சிரமத்துக்குக் காரணம். கொஞ்சம் ப்ளான் பண்ணியிருந்தா மகிழ்ச்சியாகப் போய் வந்திருப்போம்.'

ஜாலி + அறிவு!

திரவியநாதன், மதுரை.

மறக்க முடியாத ஜாலி டூர்!

'போன வருஷம் லீவுக்கு நான்கு நாள் பெங்களூரு, மைசூர் போனோம். திப்பு சுல்தான் அரண்மனை, பிருந்தாவனம், கிருஷ்ணராஜசாகர் அணை, மைசூர் மகாராஜா பேலஸ்ன்னு எல்லாம் பார்த்தோம். அதேமாதிரி மைசூர் மிருகக் காட்சி சாலை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டோம். நாங்க டூர் போகும்போது எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப்  பொழுதுபோக்காகவும், அறிவுப்பூர்வமாகவும் இருக்கற மாதிரி பார்த்துக்கொள்வோம்.''

- ரா.அண்ணாமலை,  த.பிரியங்கா, ச.பா.முத்துகுமார், சங்கவி,
படங்கள்: பா.காளிமுத்து,  தே.தீட்ஷித்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism