Published:Updated:

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?

Published:Updated:

கேள்வி - பதில்

##~##

கிராமத்தில் உள்ள எனது பழைய வீட்டை இடித்து புதிய கட்டடத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கட்டட ப்ளான் அப்ரூவல் வாங்கவேண்டுமா? எங்கு வாங்குவது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கதிரவன், மதுராந்தகம்.

மணிசங்கர், தலைவர். ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.

''கிராமப் பகுதிகளில் வீட்டை இடித்துக் கட்டினாலும், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் அனுமதி பெற்று கட்டுவதே முறையானது. ஆனால், கிராமப் பகுதிகளில் வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் இந்த அனுமதியை வாங்குவதில்லை. இது தவறான நடைமுறை. மேலும், வீட்டுக் கடனுக்கு முயற்சி செய்தால் முறையான கட்டட அனுமதி இருந்தால் மட்டும்தான் கிடைக்கும். கிராமப் பஞ்சாயத்து பகுதி எனில், ஒன்றிய அளவில் இருக்கும் திட்ட அலுவலரிடத்தில் இந்த அனுமதி வாங்கவேண்டும். 2.5 கிரவுண்டு அளவுக்குமேல் கட்டடம் கட்டுவது என்றால் டி.டி.சி.பி அனுமதி வாங்கவேண்டும். இந்த நடைமுறைகள் இல்லாமல் கட்டடம் கட்டும்பட்சத்தில் பின்னாட்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.''  

ஆதார் அடையாள அட்டை வாங்க ரேஷன் கார்டு அவசியமா? வெளிமாநில முகவரியில் உள்ள ரேஷன் கார்டு அடிப்படையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா?

- கீதா, சென்னை.

ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளானர்.

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?

''ரேஷன் கார்டை மட்டுமே ஆதாரமாக வைத்து ஆதார் கார்டு வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட முகவரியில் வசிப்பதற்கான இதர ஆதாரங்கள், அதாவது வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு சான்று இருந்தால் போதும். ஆனால், வெளிமாநில முகவரியில் ரேஷன் கார்டு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெளிமாநில ரேஷன் கார்டு இங்கு பயன்படுத்த முடியாது என்பதால் அதன் அடிப்படையில் ஆதார் அட்டையைத் தரமாட்டார்கள். உங்களிடம் வேறு சான்றுகள் இல்லாதபட்சத்தில் ரேஷன் அட்டையை இங்கு மாற்றிக்கொண்டு அதன்பிறகு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும்.''  

ஏற்றுமதி தொழில் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்கான ஐ.இ.சி. எண் பெறுவதற்கான நடைமுறை என்ன?

- வி.இளங்கோவன், ஈரோடு.

உன்னிகிருஷ்ணன், இயக்குநர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (தென் மண்டலம்).  

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?

''ஐ.இ.சி. எண் வாங்குவதற்கு உங்களது பான் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் தேவை. இதன் அடிப்படையில், ஜாயின்ட் டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஃபாரின் டிரேட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என மூன்று இடங்களில் இந்த அலுவலகம் உள்ளது. அல்லது லீttஜீ://பீரீயீt.ரீஷீஸ்.வீஸீ என்கிற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கேற்ப ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.250. விண்ணப்பம் பெறப்பட்டு ஏழு நாட்களுக்குள் ஐ.இ.சி. எண் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறையில் தாமதம் அல்லது இதுதொடர்பாக கூடுதல் ஆலோசனைகள் பெற ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன் (FIEO) அலுவலகத்தை அணுகலாம்.

முகவரி:

Unit No.706, Spencer Plaza, 7th Floor, 769, Anna Salai, Chennai - -600 002
தொலைபேசி எண்:
044- 28497766/28497755/ 28493333.
இ மெயில் முகவரி: Email:fieosr@fieo.org

நான் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனது வருமானத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். எந்த ஃபண்டை தேர்ந்தெடுப்பது?

- சந்தானம், சென்னை.

ராமகிருஷ்ணன் வி.நாயக். முதன்மை துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல்.

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?

''உங்கள் வருமானத்திலிருந்து மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீட்டுக்குத் திட்டமிடுவது சரியான யோசனைதான் என்றாலும், பொதுவாக முதலீடு என்பதைவிட உங்கள் முதலீட்டுக்கு பயனுள்ள வகையில் ஓர் எதிர்கால இலக்கை வைத்துக்கொள்ளவும். அப்போதுதான் நீண்டகால நோக்கில் தொடர்ந்து முதலீடு செய்வீர்கள். மேலும், முதலீட்டி லிருந்து சிறந்த வருமானத்தையும் பெறமுடியும். மாதாமாதம் கட்டுவதற்கேற்ப எஸ்.ஐ.பி. முறையில் ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் போன்ற ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீண்டகால நோக்கில் ஆண்டுக்கு சுமார் 12 முதல் 15 சதவிகிதம் வரை வருமானம் எதிர்பார்க்கலாம்.''

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?

எனது வீட்டில் குடி இருக்கும் வாடகைதாரர் இரண்டு வருடமாக வாடகை தராமல் இருக்கிறார். அவரிடம் வாடகையை வாங்குவது எப்படி? மேலும், வீட்டை காலி செய்ய வைக்க என்ன வழி?

- கதிரவன், கோயம்புத்தூர்.

வைதேகி, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு, முறையாக வாடகையை செலுத்தவேண்டிய பொறுப்பு உள்ளது. இதற்கு வாடகை ஒப்பந்தம் போட்டிருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. அப்படி வாடகை தராமல் இருப்பவரை வீட்டை காலி செய்ய சொல்ல முடியும். தமிழ்நாடு வீட்டு வாடகைக் கட்டுபாடு சட்டத்தின்படி, இது நியாயமான காரணங்களில் ஒன்று.

எனவே, உங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவரிடமிருந்து வாடகை வசூலித்துத் தரவும்; அவரை உடனடியாக வீட்டை காலி செய்ய வலியுறுத்தவேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். சென்னையில் சிறு வழக்கு நீதிமன்றத்திலும், பிறநகரங்களில் மாவட்ட முன்சீப் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கலாம். இதன்படி நீதிமன்றம் உடனடியாக அவரிடமிருந்து வாடகையை வசூலித்துத் தரும்''

பழைய வீட்டை இடித்துக் கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்கணுமா..?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism