Published:Updated:

எடக்கு மடக்கு - வயசான காலத்துல ஏன் பேரைக் கெடுத்துக்கிறாரு ?

எடக்கு மடக்கு - வயசான காலத்துல ஏன் பேரைக் கெடுத்துக்கிறாரு ?

எடக்கு மடக்கு - வயசான காலத்துல ஏன் பேரைக் கெடுத்துக்கிறாரு ?

எடக்கு மடக்கு - வயசான காலத்துல ஏன் பேரைக் கெடுத்துக்கிறாரு ?

Published:Updated:
##~##

உண்மையைப் பேசுறதுக்கும் பொய் பேசுறதுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்குன்னு சொல்வாரு எங்க அப்பா. உண்மையைப் பேசுறப்ப, நீங்க என்ன சொல்றேங்கிறதை ஞாபகத்துல வச்சுக்க வேண்டியதில்லை. ஆனா, பொய் பேசினா, அதை மறக்காம ஞாபகத்துல வச்சுக்கணும். ஒருவேளை திரும்பவும் கேட்டா, ஏற்கெனவே சொன்ன பொய்யைத் திரும்பச் சொல்லணும் இல்லையா!

இது ரொம்ப கஷ்டமான விஷயமுன்னு சாதாரண மனுஷனான எங்க அய்யாவுக்கே தெரியுறப்ப, நாட்டை ஆளுற மன்மோகன்சிங் அண்ட் கோவுக்கு ஏங்க புரியமாட்டேங்குது? நிலக்கரி பிரச்னைல சுப்ரீம் கோர்ட்ல ஏடாகூடமா எதையோ சொல்லி, இப்ப எல்லாரும் மாட்டிகிட்டு முழிக்கிறாங்கலே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருத்தரு பொய் பேசினா சமாளிச்சிடலாம். ஆனா, நாட்டை ஆளற அத்தனைபேரும் பொய் பேச முயற்சி செய்யலாமா? அதிகாரம் கையில இருக்குதுங்கிறதுக்காக ஒட்டுமொத்தமாப் பொய் பேசினா என்னவாகும்? இப்படி கோர்ட்ல போய் சிக்கி, திட்டுவாங்கிட்டுதான் வரணும்.

இவங்க கையில நம்ம நாடு இருக்கிறதை நெனைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமாத்தாங்க இருக்குது. நிறைய இளைஞர்களைக்கொண்ட நாடுங்க இது. அதுவும், வளரணும் சுபிட்சமா இருக்கணுமுன்னு கனவோட இருக்குற நாடும்கூட. இந்த நாட்டை ஆளரவங்க எப்படியிருக்கணும்? திட்டங்களைப்போட்டு பொருளாதாரத்தை முடுக்கிவிட்டு, இளைஞர்களோட திறமையைக் கூட்டி வளம்பெறச் செய்ற வேலையைப் பார்க்காம, எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஊழல் பிரச்னையிலே சிக்கிக்கிட்டு வெளியே வர முடியாம திணறுவதே வழக்கமாயிடுச்சு இந்த அரசாங்கத்துக்கு.

எடக்கு மடக்கு - வயசான காலத்துல ஏன் பேரைக் கெடுத்துக்கிறாரு ?

அதுலயும், எல்லா ஊழலுமே மன்மோகன் சிங்கை இணைச்சுப் பேசுற அளவுக்கு மோசமாயிடுச்சு. 1990-களிலே ஒரு வளமான, வலிமையான பாரதத்தைக் கொண்டுவர்றதுக்கான அடிப்படை வேலைகளைச் செஞ்சவருன்னு பலபேரு சொல்லி கேள்விப்பட்டிருக்கேங்க. நான் அப்ப சின்னப்பையன். ஆனா, இப்ப இவரோட நடவடிக்கையைப் பார்த்தா, ரொம்ப பயமா இருக்குதுங்க. 2ஜி, நிலக்கரின்னு எல்லா ஊழலிலேயும் இவரு பேரு சிக்கிக்கிட்டு சின்னாபின்னமாகுது. எல்லாப் பிரச்னையும் கோர்ட்டுலேயே வெட்டவெளிச்சத்துக்கு வருது.

நான்கூட எதிர்க்கட்சிங்க கத்திக் கூப்பாடு போடறப்ப, அவங்க அரசியல் பண்றாங்கன்னு நினைப்பேங்க. ஆனா, சமீபகாலமா இந்த நினைப்பே மாறிடுச்சு. ஏன்னா எல்லாமே பிரதமரை நோக்கிப் போகுது. பழைய மந்திரி, பிரதமருக்கு தெரிஞ்சுதான் எல்லாமே நடந்துச்சுன்னு சேலஞ்ச் பண்றாரு. இப்ப இருக்கிற மந்திரி அறிக்கையைப் பார்த்தாருன்னு சிபிஐ சொல்லுது. இப்படி பல விஷயங்கள் பிரதமரோட இமேஜை கிழிச்சுப் போடுதுங்க.

ஊழல் பிரச்னையில நிர்வாகம் தத்தளிக்குது. இவரு கன்ட்ரோலுல எதுவுமே இல்லேங்குறது தெளிவா தெரியுது. வயசான காலத்துல ஏன்தான் இப்படி பேரைக் கெடுத்துக்கிறாரு?   இவங்கல்லாம் வாழ்க்கையோட நீண்ட நெடிய பாதையில சக்ஸஸ்ஃபுல்லா பயணிச்சு கடைசி அத்தியாயத்துல இருக்கிறவுங்க. ஆனா, கண்ணுல கனவோட இருக்கற இளைஞர்களையும், எதிர்பார்ப்போட திரிஞ்சுகிட்டிருக்கிற நண்டுசிண்டுகளையும் பார்த்தா, மனசுல பயம் கவ்வுதுங்க.

எடக்கு மடக்கு - வயசான காலத்துல ஏன் பேரைக் கெடுத்துக்கிறாரு ?

ஊழல் பண்ணி நாட்டைச் சுரண்டியதா வர்ற குற்றச்சாட்டுலேயும் அதுல சிக்கிக்காம இருக்கறது லேயும், அதைவிட்டு வெளியே வர்றதுலேயுமே பெரும்பான்மை நேரத்தை மன்மோகன் சிங் அரசு செலவழிச்சா, நாடு வளர்ச்சிப்பாதையில போறது எப்படிங்க?

இன்னைக்கு அஞ்சு வயசுல இருக்கற பச்சைப்புள்ளைங்க, இருபது வருடம் கழிச்சு நாட்டை முன்னேற்றத் தயாரா இருக்கறப்ப,  அவங்களுக்கான வாய்ப்பைத் தர ரெடியா இருக்கணுமேங்க. அதை விட்டுட்டு ஆக்கப்பணி எதையுமே செய்யாம ஊழல் குற்றச்சாட்டிலேயிருந்து தப்பிக்கிறதே தினப்படி வேலையா இருந்தா, அவங்க எப்படி உருப்படுவாங்க? அவங்களை நம்பி இருக்கிற எதிர்கால சந்ததி எப்படி உருப்படுங்க?  

'ஏகாம்பரம் உனக்கு என்ன தெரியும்? ஆட்சி நடத்துறது, அதுவும் கூட்டணி ஆட்சி நடத்துறது ரொம்பக் கஷ்டம்’ அப்படீம்பீங்க. ஏங்க, அப்படி என்ன அடிபிடிக் கட்டாயம் இவங்களுக்கு?  ரொம்ப முதலீடு பண்ணிட்டோம். எப்படியாவது தொழிலை நடத்து வோமுன்னு நடத்துறதுக்கு. நாட்டுக்கு நல்லது செய்வோமுன்னு சொல்லி ஆட்சிக்கு வர்றீங்க. கூட்டணியிலே குழப்பமுன்னா, ஆட்சியைக் கலைச்சுட்டு மக்களிடம் போயிடலாமே!

அது எப்படி சரிப்படும்னு நீங்க கிராஸ் பண்ணலாம். எலெக்ஷன் வைக்கணுமின்னா, எவ்வளவு செலவாகும் தெரியுமாங்கிறாரு எனக்குத் தெரிஞ்ச ஒரு பொருளாதார நிபுணரு. அட! எலெக்ஷன் செலவு இத்தனை ரூபான்னு இன்னைக்கே தெளிவாத்தெரிஞ்சுடும். இப்படி நித்தம் நித்தம் செயல்பட முடியாம இருக்கற அரசாங்கத்தால எவ்வளவு நஷ்டம் எத்தனை வருஷத்துக்கு இருக்குமுங்குறதை யாராலும் சொல்ல முடியாது.

எனக்கென்னவோ பதவின்னு வந்துட்டா எல்லாருமே இப்படி ஆயிடுவாங்கன்னு தோணுது. பதவிக்கு வரவைக்கிறது நம்ம கையில இருந்தாலும், அஞ்சு வருசத்துக்கு நாம அவங்க கையிலேல்ல சிக்கிக்கிறோம். இவருகிட்ட ஒட்டுமொத்தமா பத்து வருஷத்துக்குல்ல சிக்கிக்கிட்டோம்! வர தேர்தல்லயாவது சிக்கிக்காம தப்புவோமான்னு பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism