Published:Updated:

கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி..

குறைந்த செலவு,நிறைய லாபம்...!வா.கார்த்திகேயன், படம்: பா.கார்த்திக்.

கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி..

குறைந்த செலவு,நிறைய லாபம்...!வா.கார்த்திகேயன், படம்: பா.கார்த்திக்.

Published:Updated:

தொழில் நுட்பம்

##~##

ஐ.டி. துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இருக்கிறது கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம். அது என்ன கிளவுட் கம்ப்யூட்டிங்? இத்தொழில்நுட்பம் ஐ.டி. துறையை எப்படி மாற்றி வருகிறது? என சென்னையின் முக்கிய நிறுவனமான ஆரஞ்ச்ஸ்கேப் டெக்னாலஜி நிறுவனத்தின் சி.இ.ஓ. சுரேஷ் சம்பந்தத்திடம் கேட்டோம். இத்துறையில் நடந்துவரும் மாற்றங்கள் குறித்தும், இதன் எதிர்காலம் குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாங்கள் கம்பெனி ஆரம்பித்த சமயத்தில் தான் கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி வந்தது. கூகுள் நிறுவனத்துடன் முதன்முதலில் ஒப்பந்தம்போட்டது நாங்கள்தான். அப்போது எங்கள் நிறுவனத்துக்கு சர்வர் அமைப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்தால் 25 கோடி ரூபாயாவது செலவாகி இருக்கும். ஆனால், இந்த டெக்னாலஜி உதவியுடன் சர்வர் அமைக்க மிகக் குறைவான செலவே எங்களுக்கு ஆனது.

இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்த சர்வர் ஏதும் தேவை இல்லை. எங்களுக்குத் தேவையான சர்வர் வசதியை கூகுளே தந்தது. எங்களுக்கு எவ்வளவு தேவையோ, அந்த அளவு மட்டுமே பயன்படுத்திக் கொண்டோம். அதற்கு மட்டுமே பணம் செலுத்தினோம். இதற்கு infrastructure as a service என்று பெயர்.

இதில், Platform as a service மற்றும் Software as a service என்ற இரண்டு நிலைகள் இருக்கிறது. கிளவுட் கம்ப்யூட்டிங் மூலமாக ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை அளிப்பது ப்ளாட்ஃபார்ம் அஸ் எ சர்வீஸ். அடுத்து, உங்களுக்குத் தேவையான சாஃப்ட்வேரை கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் அளிப்பது சாஃப்ட்வேர் அஸ் எ சர்வீஸ். உதாரணமாக, உலகத்தில் எங்கிருந்தாலும் நம் மொபைலில் இருந்து ஒரு அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும். இதை நோக்கிதான் ஐ.டி. உலகம் செல்லப்போகிறது.

கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி..

கிளவுட் கம்ப்யூட்டிங் துறையின் வளர்ச்சியால் சர்வர் தயாரிக்கும், சர்வரை பராமரிக்கும் நிறுவனங்களின் வருமானம் குறையும். இத்துறையில் வேலை இழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன்காரணமாகவே நமது முன்னணி நிறுவனங்கள் சில தடுமாறுகின்றன.

மேலும் இப்போது வாடிக்கையாளர்கள், தனிப்பட்ட சேவையைவிட, பொதுவான சேவையை விரும்புகிறார்கள். நீங்கள் ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கச் சென்றீர்கள் என்றால், உங்களுக்கு என்ன தேவை, என்ன தேவையில்லை என்று தெரிந்துகொண்ட பிறகே காரைத் தயாரிப்பார்கள். இன்றைக்கு வாடிக்கையாளர்களுக்குத் தேவை ஒரு கார் என்றாகிவிட்டதால், தனிப்பட்ட சேவைகளை யாரும் விரும்புவதில்லை. முன்பு ஒரு மருந்து நிறுவனத்திற்காக தயாரான சாஃப்ட்வேரை இன்னொரு நிறுவனத்தினர் பயன்படுத்த மாட்டார்கள். இப்போது அதற்கும் தயாராகி வருகிறார்கள். ஆனால், ஐ.டி. நிறுவனங்கள் மட்டும் பழைய கன்ஸர்வேட்டிவ் நிலையில் இருந்து மாறாமல் இருக்கின்றன. பிரமிடின் மேல் பகுதியில் இருக்கும் சிறிய பகுதியில் மட்டுமே நம் ஐ.டி. நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. கீழே இறங்க இறங்க இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி..

இப்போதைக்கு உலக ஐ.டி. துறையின் மதிப்பு சுமார் 3 டிரில்லியன் டாலர்கள். இந்திய ஐ.டி. துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு மேல். அதாவது, இந்தியாவின் பங்கு 3 சதவிகிதம் மட்டுமே. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் உலக ஐ.டி. துறையின் மதிப்பு சுமார் 9 பில்லியன் டாலராக இருக்கும். இந்த ஏற்றத்தில் நம் பங்கும் இருக்கவேண்டும் எனில், கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தியாகவேண்டும்.

இத்தொழில்நுட்பம் வருவதால் அனைவருக்கும் லாபம்தான். உதாரணமாக, சில நாட்களுக்கு முன், ஒரு அப்ளிகேஷனை நான்

1 டாலர் செலவு செய்து டவுன்லோடு செய்தேன். இந்த சாஃப்ட்வேர்

50 டாலர் என்றிருந்தால், எனக்குத் தேவையாக இருந்தாலும் நான் வாங்கியிருக்கமாட்டேன். அதாவது, மிகக் குறைந்த விலையில் ஒரு அப்ளிகேஷனைத் தந்தால் அனைவரும் வாங்கி பயன் படுத்துவார்கள். இத்தேவையைப் பயன்படுத்தி, நாம் அப்ளிகேஷனைத் தயாரிக்கலாம்.

முன்பு சாஃப்ட்வேரை விற்பது பெரும் பிரச்னை. ஆனால், கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி வந்த பிறகு, சாஃப்ட்வேரை சர்வரில் ஏற்றிவிட்டால், யார் வேண்டுமானாலும், பணம் கொடுத்து டவுன்லோடு செய்ய முடியும். முன்பு நிறுவனங்கள் வழியாக  சேவை சென்றடையும்போது அதிக விலை தர வேண்டியிருந்தது. இப்போது விலையைக் குறைத்து நேராக மக்களையே சென்றடைவதினால், வருமானமும் அதிகமாக இருக்கும். ஆக, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தை நம் ஐ.டி. நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால்தான் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்'' என்று முடித்தார்.

தொழில்நுட்பம் மாற, நாமும் மாறுவதே புத்திசாலித்தனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism