Published:Updated:

மாருதியை உயர்த்திய யென்!

மாருதியை உயர்த்திய யென்!

மாருதியை உயர்த்திய யென்!

மாருதியை உயர்த்திய யென்!

Published:Updated:
##~##

''கொடைக்கானலில் வெதர் பிரமாதம்! வெள்ளைவெளேர் என்று மேகங்கள் சூழ்ந்து, பார்ப்பதற்கே படுரம்மியமாக இருக்கிறது!'' என அக்னிவெயிலில் காய்ந்துகொண்டிருக்கும் நமது வயிற்றெரிச்சலைக் கிளப்பியபடி மேட்டரை ஆரம்பித்திருந்தார் ஷேர்லக். கடந்த வாரம் சொன்னபடி கொடைக்கானலுக்குப் போனவர் அங்கிருந்து இ மெயிலில் அனுப்பிய ரிப்போர்ட் இனி:

என்.எஸ்.சி.யின் கடன் சந்தை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்மைக் காலத்தில் இந்திய முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய ஏராளமான புதுப்புது திட்டங்கள் கிடைத்து வருகின்றன. ரிஸ்க் உள்ள திட்டங்களும் ரிஸ்க் இல்லாத திட்டங்களும் ஒரே இடத்தில் இருப்பதால் சிறு முதலீட்டாளர்கள் இடையே குழப்பம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், கடன் திட்டங்களுக்கான தனிச் சந்தையைத் தொடங்கி இருக்கிறது. இதில் 398 விதமான புராடக்ட்கள் முதலீட்டுக்குக் கிடைக்கும். இதில் 376 திட்டங்கள் சிறு முதலீட்டாளர்களுக்கும், 22 திட்டங்கள் நிறுவனங்களுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.  

அடகு வைத்த பங்கு நிறுவனங்கள்!

பங்குகளில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும். காரணம், இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஐந்தில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2013, மார்ச் மாத இறுதி நிலவரப்படி, இந்திய நிறுவனங்களின் நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

மாருதியை உயர்த்திய யென்!

அடகு வைத்த நிறுவனங்களின் பட்டியலில் எஸ்ஸார் போர்ட்ஸ், பிபாவவ் டிபென்ஸ், வொக்கார்ட், ஜே.பி. இன்ஃப்ராடெக், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், சுஸ்லான் எனர்ஜி, யூனிடெக், இந்தியா சிமென்ட்ஸ், ஃப்யூச்சர் ரீடெய்ல், லான்கோ இன்ஃப்ராடெக், ஓமெக்ஸ், டிஷ் டிவி, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை அடமானம் வைத்திருக்கின்றன.  

உயரும் மாருதியின் பங்கு!

வெள்ளிக்கிழமையான இன்று சில முக்கியமான பங்குகள் 52 வார அதிகபட்ச விலையை எட்டியது. அதில் முக்கியமான நிறுவனம், மாருதி சுசூகி. அண்மைக் காலம் வரை மாருதியில் நடக்காத குளறுபடிகளே இல்லை. ஹெச்.ஆர். கொலை வரைக்கும் பிரச்னை சென்றது. என்றாலும், இந்தப் பங்கு விலை உயரக் காரணம், ஜப்பான் நாணயமான யென் சரிந்து வருவதுதான். யென் சரிந்துவருவதால் சுசூகி நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய தொகை குறையும் என்பதுதான் அதன் பங்கு விலை உயர முக்கிய காரணம். தன்னுடைய அதிகபட்ச விலையைத் தாண்டுவதற்கு இன்னும் 10 ரூபாய்தான் பாக்கி. அதை உடைத்துக்கொண்டு மேலே செல்லும்பட்சத்தில் இன்னுமொரு 300 ரூபாய்கூட உயர வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, யென் சரிவால் ஆதாயமடையும் இன்னொரு நிறுவனம் லூபின். இந்த நிறுவனமும் 52 வார அதிகபட்ச விலையில் இருக்கிறது. இந்தப் பங்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தாலும் சரிவடையும் வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை. அதேசமயம், அதற்கு இலக்கு விலையும் தரமுடியாது என்பதால் ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டும் வாங்கலாம்.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்டில் முதலீடு செய்த பிரமல்!  

மாருதியை உயர்த்திய யென்!

பிரமல் நிறுவனத்தின் கைவசம் நிறைய பணம் இருக்கிறது. இந்த நிறுவனம் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 10 சதவிகிதப் பங்குகளை வாங்கி இருக்கிறது. காரணம், ஸ்ரீராம் நிறுவனத்துக்கு வங்கி லைசென்ஸ் கிடைக்க வாய்ப்பு இருப்பதுதான். வங்கி லைசென்ஸ் கிடைக்கும் முன்பே அதில் முதலீடு செய்வது நல்லது என்று நினைக்கிறது பிரமல். தனியார் வங்கிப் பங்குகள் அடுத்து இரண்டு, மூன்று வருடத்தில் இரட்டிப்பாக வாய்ப்பு இருப்பதால், அதை விடாமல் ஃபாலோ பண்ணுவது நல்லது.

கேப்டன் இல்லாத கப்பல்!

பொதுத்  துறை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமை செயல் அதிகாரி இல்லாமல் இயங்கி வருகிறது. ஆனால், கிரிசில் தரக்குறியீட்டில் இந்நிறுவனத்தின் 7 ஃபண்டுகள் டாப் இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கேப்டனே இல்லை என்றாலும், இந்தக் கப்பல் மட்டும் எப்படி சரியாகச் செல்கிறது என்று நினைத்து பலர் அதிசயிக்கிறார்கள். சரியான ஃபண்ட் மேனேஜர்கள் இருப்பதால்தான் இப்படி சாதிக்க முடிகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஆனாலும்கூட, இந்த நிறுவனத்துக்கு ஒரு தலைமை அதிகாரியை நியமிக்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அரசாங்கத்துக்கு வரவே மாட்டேன் என்கிறது.

ரிலையன்ஸின் புதிய முயற்சி!

மாருதியை உயர்த்திய யென்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் கே.ஜி. டி.6-ல் கேஸ் எடுப்பது மிகவும் குறைந்துவிட்டது. இதில் கேஸ் உற்பத்தியை அதிகரிக்க 500 கோடி டாலரை முதலீடு செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பிறகாவது ரிலையன்ஸ் பங்குகளின் விலை கணிசமாக அதிகரிக்குமா என சிறு முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இ.டி.எஃப்.பில் நுழையுமா பி.எஃப்.!

பி.எஃப். அமைப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இதில் ஒரு பகுதியை விரைவில் உருவாக்கப்பட உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்கும்படி பி.எஃப். அமைப்புக்கு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு மேம்படும் என்பதோடு பி.எஃப். முதலீட்டாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆனால், இதற்கு பி.எஃப். அமைப்பு ஒப்புதல் தருமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. காரணம், சுமார்

8 கோடி பேரின் ஓய்வூதிய தொகையில் அது ரிஸ்க் எடுக்க தயங்குவதாகத் தெரிகிறது.

சரியும் தங்கம் விலை!

தங்கம் விலை 1991-லிருந்து 2001-ம் ஆண்டு வரை உலக அளவில் எந்த ஏற்றமும் இல்லை. ஆனால், இந்தியாவில் ஏறியதற்கு காரணம் டாலர் சரிவு. 2001-ம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸில் இருந்துவந்த  அனலிஸ்ட் ஒருவர், கோல்டு இ.டி.எஃப். கான்செப்டை உருவாக்கினார். ஆனால், அந்த கான்செப்ட் 10 வருடம்தான் இருக்கும் என்று சொல்லி இருந்தார். அந்தப் பத்து வருடம் முடிந்துவிட்டது. ஏற்றத்துக்குப் பிறகு மூன்று வருடங்களுக்கு மேல் சரிவு இருக்கும். இன்னும் அந்த மூன்று வருடங்கள் முடியவில்லை. தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 1,000 டாலர் வரை சரியக்கூடும் என்பது உலகின் முக்கியமான பல அனலிஸ்ட்களின் கருத்தாக இருக்கிறது. தங்கம்தான் சிறந்த முதலீடு என்று நினைப்பவர்கள் இந்தக் கருத்தையும் மனதில் வைத்துக்கொள்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism