Published:Updated:

50 கிராம் தங்க காயின்...

இனி இல்லை கடன் - பகீர் பின்னணி பானுமதி அருணாசலம்.

50 கிராம் தங்க காயின்...

இனி இல்லை கடன் - பகீர் பின்னணி பானுமதி அருணாசலம்.

Published:Updated:
##~##

50 கிராமுக்கு மேல் உள்ள தங்க காயின்கள்பேரில் வங்கிகள் கடன் தரக்கூடாது என ஒரு சுற்றறிக்கையை இம்மாத இறுதியில் ஆர்.பி.ஐ. வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி, பலரையும் கதிகலங்க வைத்திருக் கிறது. இந்தத் தகவல் இன்னும் ஊர்ஜிதமாகவில்லை என்றாலும், இது எப்படி சாத்தியம் என சில வங்கி அதிகாரிகளை அணுகி கேட்டோம்.

''பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை, தங்க ஆபரணங்கள் மீதுதான் கடன் தரப்படுகிறது. தங்க காயின் மற்றும் பார்கள் மீது கடன் தரப்படுவதில்லை. சில வாடிக்கையாளர்கள் தங்க காயின்கள் மீது சிறு வளையங்களைப் பொருத்தி அதனை ஆபரணமாக காண்பித்து பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுகிறார்கள். ஆனால், தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் தங்க காயின்கள் மீது கடன் தருகின்றன'' என்று விளக்கம் தந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விவகாரம் குறித்து சர்ட்டிஃபைட் ஃபைனான்ஷியல் ப்ளானர் ரமேஷ் பட்டிடம் பேசினோம். ''இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை சமீப காலமாக அதிகரிக்கக் காரணம், தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதே. இதன்காரணமாக பணவீக்கமும் கட்டுக்குள் வராமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதனை சரி செய்யும்விதமாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல வழிகளை யோசித்து வருகிறது.

50 கிராம் தங்க காயின்...

பொதுவாக, தங்க காயின் மற்றும் தங்க பார்களை வாங்குபவர்கள் அதனை வங்கிகள் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் 10-12 சதவிகித வட்டி விகிதத்தில் அடகு வைத்து, அந்தத் தொகைக்கு மீண்டும் தங்கம் வாங்குகிறார்கள். இப்படி தங்கம் வாங்கும்போது, இறக்குமதி அதிகரிக்கும் என்பதால் இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க ஆர்.பி.ஐ. முயற்சித்து வரலாம்.

50 கிராம் தங்க காயின்...

இரண்டாவது விஷயம், லண்டனிலிருந்து போலியான தங்க காயின் மற்றும் தங்க பார்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்லப் படுகிறது. அதாவது, 100 கிராம் இரும்பின் மீது 25 கிராம் அளவுக்கு தங்கமுலாம் பூசப்பட்டு விற்கப்பட்டு இருக்கிறதாம். இந்த போலி தங்கத்தின் மீது நம் வங்கிகள் கடன் தந்து ஏமாறக்கூடாது என்கிற எச்சரிக்கையாலும் ஆர்.பி.ஐ. இப்படி யோசிக்கலாம்.  

இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தாலும், அதனால் நடுத்தர மக்களுக்குப் பாதிப்பில்லை. காரணம், நடுத்தர மக்கள் பொதுவாக 5, 10, 15, 20 கிராம் போன்ற குறைந்த எடையுள்ள காயின்களையே வாங்கு கிறார்கள். ஆனால், பெரிய நிதி நிறுவனங்கள், பணக்காரர்களுக்கு இந்த அறிவிப்பினால் சில பாதிப்பு ஏற்படவே செய்யும்'' என்றார்.

எதற்கும் எல்லோரும் உஷாராக இருப்பது நல்லதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism