Published:Updated:

திரண்டுவந்த டிரேடர்கள்!

பானுமதி அருணாசலம், பி. விவேக் ஆனந்த். படங்கள்: என்.ஜி. மணிகண்டன்.

திரண்டுவந்த டிரேடர்கள்!

பானுமதி அருணாசலம், பி. விவேக் ஆனந்த். படங்கள்: என்.ஜி. மணிகண்டன்.

Published:Updated:

 திருச்சி கருத்தரங்கம்

##~##

கோவை, சென்னையை அடுத்து மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் குட்வில் கமாடிட்டீஸ் நிறுவனம் மற்றும் நாணயம் விகடன் இணைந்து நடத்திய கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்! முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடந்தது. கொளுத்தும் வெயில் ஒருபக்கம், கொழுத்த முகூர்த்தநாள் இன்னொருபக்கம் என்றாலும், அவற்றை பொருட்படுத்தாமல் திரளாக வாசகர்கள் வந்து கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன், கமாடிட்டி சந்தையில் வர்த்தகத்தின் அடிப்படை விஷயங்களை பகிர்ந்துகொண்டார். 'லாபத்திற்கு திட்டமிடுவதுபோல், நஷ்டத்தைச் சமாளிக்கவும் திட்டமிடவேண்டும். இந்தக் கூற்றை தெரியாதவர்கள் கமாடிட்டி வர்த்தகத்திற்கு வரவேண்டாம்’ என கூறியபோது வாசகர்களிடமிருந்து கைத்தட்டல் பறந்தது.  

அடுத்து, எம்.சி.எக்ஸ். தென் பிராந்திய ஹெட் செந்தில்வேலன் பேசும்போது, நேரடியாக சந்தையில் நிலவும் நிலவரங்களைக் குறிப்பிட்டு அதற்கு எப்படியெல்லாம் நாம் கவனமாக இருக்கவேண்டும் என கூறினார். கமாடிட்டி சந்தையில் சில பொருட்கள் செய்திகளின் அடிப்படையில் எப்படி ஏறி, இறங்குகிறது என்ற விவரத்தைச் சொன்னார்.  

திரண்டுவந்த டிரேடர்கள்!
திரண்டுவந்த டிரேடர்கள்!

அதன்பிறகு, எம்.சி.எக்ஸ். - எஸ்.எக்ஸ். பங்குச் சந்தையின் தென் மண்டல ஹெட் செபஸ்டின் பங்குச் சந்தை பற்றி பேசினார். குட்வில் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் சரவணபவன், அந்நிறுவனம் டிரேடர் களுக்கு அளித்துவரும் பல்வேறு வசதிகள் பற்றி எடுத்துச் சொன்னார்.

அதற்குப் பிறகு கேள்வி நேரம் துவங்கியது. அப்போது ஒரு வாசகர், 'புதிதாக கமாடிட்டி சந்தைக்கு வருபவர்கள் முதலில் எந்த வகை கமாடிட்டியை வர்த்தகம் செய்யத் தொடங்கலாம்?’ என்று கேட்டார். ''ஆரம்ப கட்டத்தில் இருக்கும் டிரேடர்கள் அதிக ஏற்ற, இறக்கம் இல்லாத கமாடிட்டிகளை வாங்கிப் பழகலாம். அதன்பிறகு ரிஸ்க்கான கமாடிட்டிகளை வர்த்தகம் செய்ய பழகிக்கொள்ளலாம்'' என்றார் செந்தில்வேலன்.  

ஆக, புதிதாக சந்தையில் நுழைபவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது இந்நிகழ்ச்சி!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism