Published:Updated:

இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்டு பாண்டுகள்...லாபமா, நஷ்டமா?

இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்டு பாண்டுகள்...லாபமா, நஷ்டமா?

இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்டு பாண்டுகள்...லாபமா, நஷ்டமா?

இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்டு பாண்டுகள்...லாபமா, நஷ்டமா?

Published:Updated:

 முதலீடு

##~##

வளர்ந்த நாடுகளைப்போல பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் தரும் பாண்டுகளை அறிமுகப்படுத்துவோம் என கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். அவர் அறிவித்ததுபோலவே, வரும் ஜூன் 4-ம் தேதி முதல் பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் தரும் பாண்டுகளை (Inflation Indexed Bonds) மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த பாண்டுகள் மூலமாக நடப்பு நிதி ஆண்டில் 12,000 கோடி முதல் 15,000 கோடி வரை பணத்தைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போதைய நிலைமையில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதைத் தவிர்க்க பொதுமக்கள் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய முதலீடுகளையே நாடுகிறார்கள். இதனால் ரியல் எஸ்டேட்டின் விலை சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விண்ணை எட்டி நிற்கிறது. தங்கமும் வரலாறு காணாத உச்சத்தை எட்டிவிட்டு, கடந்த சில வாரங்களாகத்தான் விலை குறையத் தொடங்கி இருக்கிறது.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் வேறு முதலீடுகளில்  கிடைக்கும்பட்சத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு குறையும்; அதேபோல, அளவுக்கதிகமாக இருக்கும் ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சியை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு.

(இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், அதிகளவு தங்கத்தை இறக்குமதி செய்வதுதான்! தங்கம் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க இறக்குமதி வரியைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது மத்திய அரசாங்கம்!)

ஏற்கெனவே 1997-ம் ஆண்டு கேப்பிட்டல் இண்டெக்ஸ் பாண்ட் என்ற பெயரில் ஐந்து வருட பாண்ட் வெளியிடப்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் இந்தவகையான பாண்டுகளை வெளியிடுகிறது மத்திய அரசாங்கம்.

இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்டு பாண்டுகள்...லாபமா, நஷ்டமா?

வரும் ஜூன் மாதம் வெளியிடபோகும் பாண்டுகளில் சிறு முதலீட்டாளர்களுக்கு 5 முதல் 20 சதவிகிதம் வரை முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த பாண்டுகளின் அடுத்த வரிசை (சீரிஸ்) வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. அது முழுக்க முழுக்க சிறுமுதலீட்டாளர்களுக்குத்தான். இப்போது வெளியிடப்பட இருக்கும் பாண்டுகளில் அந்நிய முதலீட்டாளர்களே கணிசமாக முதலீடு செய்ய முடியும்.

எந்த பணவீக்கம்?

பணவீக்கத்தில் மொத்த விலை குறியீட்டு எண், சில்லறை விலை குறையீட்டு எண் என இரண்டு வகை உண்டு. இதில் மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக்கொண்டு இந்த பாண்டுகள் இருக்கும். ஆனால், மொத்த விலை குறியீட்டு எண்ணைவிட சில்லறை விலை குறியீட்டு எண் அதிகமாக இருப்பதால் (ஏப்ரல் 2013-ல் மொத்தவிலை குறியீட்டு எண் 4.89 %, சில்லறை விலை குறியீட்டு எண் 9.39%) சிறுமுதலீட்டாளர்களுக்கு இதனால் பெரிய லாபம் இல்லை. இதை பல அனலிஸ்ட்களும் எடுத்துச் சொல்ல, கூடிய விரைவில் சிறுமுதலீட்டாளர்களுக்கும் பயன் தரும் வகையில், சில்லறை விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக்கொண்ட பாண்டுகளை வெளியிடப்போவதாக ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது.

இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்டு பாண்டுகள்...லாபமா, நஷ்டமா?

வருமானம் எப்படி கணக்கிடப்படுகிறது?

இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்டு பாண்டுகள்...லாபமா, நஷ்டமா?

சாதாரண பாண்டுகளில் குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வளவு வட்டி என்று சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அந்த பாண்டுகள் குறிப்பிட்ட அந்த வட்டியை தந்துகொண்டே இருக்கும். ஆனால், இந்தப் பணவீக்க பாண்டுகள் செயல்படும்முறை வேறு. இப்போது வரப்போகும் பாண்டுகள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை வட்டி கொடுக்கும். நான்கு மாதத்துக்கு முந்தைய மொத்த விலை குறியீட்டு எண்ணை இதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணத்துக்கு, ஜூன் மாதம் இந்த பாண்டினை வாங்கும்பட்சத்தில், பிப்ரவரி மாத மொத்த விலைக் குறியீட்டு எண்ணை எடுத்துக்கொள்வார்கள்.

மேலும், பணவீக்கத்துடன் சேர்ந்து சிறிதளவு வட்டியையும் தருவார்கள். இதற்கு கூப்பன் ரேட் என்று பெயர். இந்த கூப்பன் விகிதத்தை ஏலமுறையில் சந்தை நிர்ணயம் செய்யும். உதாரணத்துக்கு, 1,000 ரூபாய் பாண்டு வாங்குகிறோம். பணவீக்கம் ஐந்து சதவிகிதம் என்றால் 1,050 ரூபாய் கிடைக்கும். இந்த 1,050 ரூபாயுடன் கூப்பன் விகிதத்தைச் சேர்க்கும்போது 105 ரூபாய் கிடைக்கும். ஆனால், சாதாரண பாண்டுகளில் உத்தரவாதம் தரப்பட்டிருக்கும் வட்டித் தொகை (100 ரூபாய்) மட்டும் கிடைக்கும்.

இந்த பாண்டுகளை சிறுமுதலீட்டாளர்கள் வாங்கலாமா, இதன் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பதுகுறித்து  பாண்ட் மார்க்கெட்டில் முக்கியமான அனலிஸ்ட்டான அர்ஜுன் பார்த்தசாரதியிடம் பேசினோம்.

''இந்தவகை பாண்டுகளில் சிறுமுதலீட்டாளர் கள் முதலீடு செய்யலாம். ஆனால், இப்போது முதலீடு செய்வதைவிட சிறுமுதலீட்டாளர்களுக்கென பிரத்யேகமான பாண்டுகள் வரும்போது தாராளமாக முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதால் அசலுக்கு என்றும் மோசம் வராது. அதேசமயம், பணவீக்கத்துக்கு சமமான வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்'' என்றார்.

இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்டு பாண்டுகள்...லாபமா, நஷ்டமா?

பணவீக்கம் இப்போது குறைந்துகொண்டு இருக்கிறதே, ஒருவேளை பணவீக்கம் மறைந்து பணவாட்டம் (Deflation) வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? என்று அவரிடம் கேட்டோம். ''நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் பணவாட்டம் வர வாய்ப்பு குறைவுதான். அதேசமயம், மொத்த விலை குறியீட்டு எண்ணுக்கும் சில்லறை விலை குறியீட்டு எண்ணுக்குமான வித்தியாசம் அதிகமாக இருக்கிறது'' என்றார்.

இதுகுறித்து மும்பையில் பிரபலமாக இருக்கும் இன்னொரு அனலிஸ்டிடம் கேட்டோம். அவர் சொன்னார்: ''வெளிநாடுகளில் இந்தவகையான பாண்டுகள் பெரும் வெற்றி அடையவில்லை. கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்வார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, கார்ப்பரேட் பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தைகள் போன்றவற்றில் முதலீடு செய்தால், இந்த பாண்டுகள் தரும் வருமானத்தைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு'' என்று முடித்துக்கொண்டார்.

சிறுமுதலீட்டாளர்களுக்கு இந்த பாண்டுகள் ஏற்றவை என்றாலும், சில்லறை விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக்கொண்டு பாண்டுகளை பரிசீலிக்கலாம்.

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism