Published:Updated:

பி.எஸ்.யூ. இ.டி.எஃப்.: சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?

சி.சரவணன்.

பி.எஸ்.யூ. இ.டி.எஃப்.: சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?

சி.சரவணன்.

Published:Updated:
##~##

மத்திய அரசு நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கொரு தீர்வாக பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் அடிப்படையில் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (இ.டி.எஃப்.) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறது.

தற்போதைய நிலையில் நடப்பு மாத ஆரம்பத்தில் இந்த பி.எஸ்.யூ. இ.டி.எஃப். உருவாக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. பங்கு விலக்கல் துறை, இந்த இ.டி.எஃப்.-ல் எந்த பொதுத் துறை பங்குகளை எல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்து முன்னணி சொத்து நிர்வாக கம்பெனிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்த பி.எஸ்.யூ. இ.டி.எஃப்-ல் எந்த பொதுத் துறை நிறுவனப் பங்குகளை சேர்ப்பது, பங்குகளின் விகிதாசார அளவு என்பது குறித்து வரும் ஜூன் மாத இறுதியில் மத்திய பங்கு விலக்கல் துறை முடிவு செய்ய இருக்கிறது. 2013-14-ல் பங்கு விலக்கல் மூலம் இந்தியன் ஆயில், இன்ஜினீயர்ஸ் இந்தியா, கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் தனக்குச் சொந்தமான பங்கில் குறிப்பிட்ட அளவை விற்பனை செய்வது மூலம் 40,000 கோடி ரூபாய் திரட்ட திட்ட மிட்டுள்ளது மத்திய அரசாங்கம். கடந்த 2012-13-ல் பங்கு விலக்கல் மூலம் ரூ.23,920 கோடி மட்டுமே திரட்டப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுத் துறை பங்குகளின் மொத்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அல்லது பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் மதிப்பின் அடிப்படையில் இந்த பி.எஸ்.யூ. இ.டி.எஃப்-க்கான பங்குகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன. கோல்டுமேன் சாக்ஸ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், இந்த பி.எஸ்.யூ. இ.டி.எஃப்-ஐ நிர்வகிக்க தேர்வு செய்யப் பட்டுள்ளது.

பி.எஸ்.யூ. இ.டி.எஃப்.: சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?
பி.எஸ்.யூ. இ.டி.எஃப்.: சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?

இதில், சிறுமுதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், எஃப்.ஐ.ஐ.கள் முதலீடு செய்வார்கள் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதனால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் மீதான வர்த்தகம் மேம்படும் எனவும் மத்திய அரசு எண்ணுகிறது.

ஃபண்ட்ஸ் இந்தியா டீம் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் இயக்குநராக இருக்கும் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம், இது சிறுமுதலீட்டாளர்களுக்கு ஏற்றதா என்று கேட்டோம். ''முதலில் பி.எஸ்.யூ. இ.டி.எஃப். என்பது புதுமையான விஷயம் இல்லை. ஏற்கெனவே எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் பி.எஸ்.யூ. மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றை கொண்டுள்ளது. இந்த ஃபண்ட் சராசரியான வருமானத்தைதான் தந்திருக்கிறது. அதுவும் அதன் பெஞ்ச்மார்க் மற்றும் சென்செக்ஸ் வருமானத்தைவிட குறைவான வருமானத்தைத்தான்

பி.எஸ்.யூ. இ.டி.எஃப்.: சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?

தந்திருக்கிறது.

இந்த பி.எஸ்.யூ. இ.டி.எஃப்.ஐ. கொண்டுவர முக்கிய காரணம், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் மீதான வர்த்தகம், லிக்விட்டி போன்றவற்றை அதிகரித்து அதன் விலையை உயர்த்துவதே. அதாவது, பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரித்து, அப்படி விலை உயர்ந்து காணப்படும் நிலையில் அந்த பங்குகளை விற்று அதன்மூலம் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது'' என்றவர், இது சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா என்கிற முக்கிய கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

''இந்த பி.எஸ்.யூ. இ.டி.எஃப்-ல் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா என்பதை இப்போது உறுதியாகச் சொல்லமுடியாது. சிறுமுதலீட்டாளர்களைப் பொறுத்தவரையில், இந்த பி.எஸ்.யூ. இ.டி.எஃப். நடைமுறைக்கு வந்து, அது லாபமாகச் செயல்படும்பட்சத்தில் அதில் முதலீடு செய்யலாம். அதுவரைக்கும் காத்திருப்பதே நல்லது'' என்றார்.

புது ஃபண்ட் என்று பரபரப்படையாமல் கொஞ்சம் பொறுமை காப்பது பணத்தை இழக்காமல் இருக்க சிறந்த வழி இல்லையா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism