Published:Updated:

அதிகரிக்கும் வாராக்கடன்... சிக்கலில் வங்கிகள்!

வா.கார்த்திகேயன்.

பிரீமியம் ஸ்டோரி

 வங்கி

##~##
எந்த
ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாக இருப்பது வங்கிகள்தான். ஆனால், இப்போது இந்தியாவின் முதுகெலும்பில் பெரும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய வங்கிகளின் இந்த நிதி ஆண்டிற்கான நிகர வாராக்கடன் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 51 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
அதிகரிக்கும் வாராக்கடன்... சிக்கலில் வங்கிகள்!

இதில் தனலக்ஷ்மி பேங்க், அலஹாபாத் பேங்க், சௌத் இந்தியன் பேங்க், ஆந்திரா பேங்க் போன்ற வங்கிகள் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது, வாராக்கடன் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஃபெடரல் வங்கி, பஞ்சாப் அண்டு சிந்த் வங்கி போன்றவற்றின் வாராக்கடன் 100% அதிகரித்திருக்கிறது. இதற்கு மாறாக, யெஸ் பேங்க் மற்றும் ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி போன்றவற்றின் வாராக்கடன் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது.

இதற்கிடையில், பொருளாதார மந்தநிலை காரணமாக 106-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடனை மறுசீரமைப்பு (அதாவது, குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், கூடுதல் அவகாசம் கேட்பது!) செய்துள்ளன. 2013-ம் நிதியாண்டில் மட்டும் இத்தொகை 76,470 கோடி ரூபாய். இதற்கு முந்தைய நிதி ஆண்டில் வெறும் 50 நிறுவனங்கள்தான் இதுபோல கடனை மறுசீரமைப்பு செய்தன.

இதுபோல மறுசீரமைப்பு செய்யும் கடன் தொகை (சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtமீ ஞிமீதீt ஸிமீstக்ஷீuநீtuக்ஷீவீஸீரீ) வாராக்கடனில் சேராது. ஆனால், இப்படி மறுசீரமைப்பு செய்யும் கடன் தொகை வாராக்கடனாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால், வரும் ஏப்ரல் 1, 2015-ம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு செய்யும் அத்தனை கடன்களையும் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கச் சொல்லி இருக்கிறது ரிசர்வ் வங்கி. மேலும், ஜூன் 1-ம் தேதி முதல் மறுசீரமைப்பு செய்யும் கடன்களுக்கான புரொவிஷனை 2.75 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக உயர்த்தச் சொல்லி இருக்கிறது.

மறுசீரமைப்பு செய்யும் கடன் களை வாராக்கடன் பட்டியலில் சேர்த்தால்

அதிகரிக்கும் வாராக்கடன்... சிக்கலில் வங்கிகள்!

வாராக்கடன் அதிகமாகத் தெரியாதா? என  கே.பி.எம்.ஜி. நிறுவனத்தின் செயல் இயக்குநர் நாராயண் ராமசாமியிடம் கேட்டோம்.

''ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு நல்லதுதான். கடனை மறுசீரமைப்பு செய்து, திருப்பி வரவில்லை என்றால் அது வாராக்கடன் பட்டியலில்தானே போகும். எனவே, இந்த வாராக்கடன் அளவை தேவைக்குத் தகுந்தபடி ஏற்றி இறக்காமல், உள்ளபடி சொல்வது நல்லதுதானே! சீனாவில்கூட வாராக்கடனின் அளவு 25 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. அதுபோல இங்கேயும் இருக்கட்டுமே!'' என்றார்.

வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக இருப்பதற்கு மூன்று காரணங்களைச் சொன்னார் பொருளாதாரப் பேராசிரியர் சீனிவாசன். ''இப்போது வாராக்கடனாக மாறியிருக்கும் கடன்கள் பெரும்பாலும் ஐந்து வருடங்களுக்கு முன்பு தந்ததாக இருக்கும். அப்போது வட்டி விகிதம் குறைவு; இந்திய ரூபாயும் பலமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். பொருளாதாரம் மந்தமாக இருப்பதால், விற்பனை குறைவு. வட்டி விகிதம் அதிகம் என்பதால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.    

பணவீக்கம் அதிகமாக இருப்பது இரண்டாவது காரணம். இதனால் மக்கள் வேறுவகையான முதலீட்டுக்குச் செல்கிறார்கள். வங்கிக்கு வரும் டெபாசிட்கள் குறைவு. டெபாசிட்களை அதிகரிக்க வங்கிகள் அதிக வட்டி தரவேண்டி இருக்கிறது. இதனால் அதிக வட்டிக்கு கடன் தரவேண்டி இருக்கிறது. இதனால் ரிஸ்க் அதிகமாகி, வாராக்கடன் அதிகரிக்கிறது.

அதிகரிக்கும் வாராக்கடன்... சிக்கலில் வங்கிகள்!

மூன்றாவது காரணம், அதிக ரிஸ்க் இருக்கும் துறைகளில் கடன் தந்திருப்பது. ரியல் எஸ்டேட், இன்ஃப்ரா, மெட்டல் உள்ளிட்ட துறைகளில் அதிகமாக சில வங்கிகள் கடன் தந்திருக்கின்றன.  

என்.பி.ஏ. அதிகரிக்கும்போது, வங்கிகள் மூலதனத்தை அதிகரிக்க வேண்டி இருக்கும். இதனால் வங்கியின் லாபம் குறையும். அதனால் அதிக ரிஸ்க் இருக்கும் தொழில்களுக்கோ அல்லது புதிய தொழில்முனைவோர்களுக்கோ கடன் கிடைக்கும் வாய்ப்பு குறைவு'' என்று முடித்துக்கொண்டார்.

குறைவாக வாராக்கடனை வைத்திருக்கும் சிட்டி யூனியன் வங்கியின் சி.இ.ஓ. காமகோடியிடம் பேசினோம். ''பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது வாராக்கடன் அதிகமாகவே இருக்கும். பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையும்போது, அவை  வசூலாகிவிடும்'' என்றார்.  

அதிகரிக்கும் வாராக்கடன்... சிக்கலில் வங்கிகள்!

ஒரு வங்கி எந்த அளவுக்கு வாராக்கடனை வைத்திருக்கலாம் என சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின்  சி.இ.ஓ. சொக்கலிங்கத்திடம் கேட்டோம். ''சராசரியாக ஒரு வங்கியின் நிகர வட்டி வரம்பு எவ்வளவு இருக்கிறதோ, அந்தளவுக்கு வாராக்கடன் இருந்தால் நல்லது. பொதுவாக, ஒரு வங்கியில் 95 சதவிகிதத் தொகை புழக்கத்தில் இருக்கும். மீதமிருக்கும் ஐந்து சதவிகிதத்தை வைத்துதான் வங்கியின் செயல்பாடுகள் நடக்கும். ஒருவேளை வாராக்கடன் ஐந்து சதவிகிதம் எனில், நிகர வட்டி வருமானம் முழுக்க வாராக் கடனுக்கு போய்விடும்'' என்றார்.

பொருளாதாரம் திரும்ப வேண்டும், வட்டி குறையவேண்டும் என்று வேண்டிக்கொள்வதைத் தவிர வேறுவழி இல்லைபோல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு