Published:Updated:

''தங்கம் வருமானம் தராத சொத்தா?''

வா.கார்த்திகேயன். படங்கள்: ஆ.முத்துக்குமார்.

##~##

?உங்களைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லுங்களேன்?

''பள்ளி, கல்லூரி படித்ததெல்லாம் கோவையில்தான். அதன்பிறகு ஐ.ஐ.எம். அஹமதாபாத்தில் படித்தேன். 'முத்ரா’ விளம்பர நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் வேலை பார்த்தபிறகு 1990-களில் டைட்டன் நிறுவனத்துக்கு வந்தேன்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

?ஆரம்பத்தில் வாட்ச் மட்டுமே தயார் செய்தீர்கள். பிறகு எதற்காக ஜுவல்லரி பிரிவை ஆரம்பித்தீர்கள்?

''வாட்ச் தயாரிக்க நிறைய பொருட்களை இறக்குமதி செய்யவேண்டி இருந்தது. அந்நிய செலாவணி பெற ஏதாவது ஏற்றுமதி செய்ய நினைத்தோம். அப்போது எங்கள் தலைவர் தேசாய், 'வெளிநாடுகளில் வாட்ச் மற்றும் நகைக் கடைகள் ஒன்றாக இருக்கிறது. அதனால் நகைகளை ஏற்றுமதி செய்யலாம்’ என்றார். துரதிருஷ்டவசமாக அந்த பிசினஸ் வெற்றி பெறவில்லை. ஆனாலும் என்ன, நம் நாட்டிலேயே ஜுவல்லரி மார்க்கெட் என்பது மிகப் பெரிய சந்தை! அதில் ஏன் கவனம் செலுத்தக்கூடாது என்று நினைத்து, உள்நாட்டில் நகை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். இன்று தனித்துவமான பெயரோடு விளங்குகிறோம்!''

?இப்போதும் நகைகளை ஏற்றுமதி செய்கிறீர்களா? வெளிநாட்டில் நகைக் கடைகளைத் திறப்பீர்களா?

''தங்கம் வருமானம் தராத சொத்தா?''

''இப்போதைக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணம் இல்லை. வெளிநாட்டில் செய்கூலி, சேதாரம் போன்ற பிரச்னைகள் இல்லை என்றாலும் அங்கு ஒரு கடையை ஆரம்பித்து மார்க்கெட் செய்வது அதிகம் செலவு பிடிக்கிற விஷயமாக இருக்கிறது!''

?நகை மற்றும் வாட்ச் ஆகிய இரண்டுமே உங்களிடம் இருக்கிறது. ஒரே குடையில் இரண்டையும் விற்பனை செய்யலாமே?

''இரண்டுக்குமான வாடிக்கையாளர்கள் வேறு வேறானவர்கள். அதனால் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது பற்றி இதுவரை யோசிக்கவில்லை. ஆனாலும், இது நல்ல ஐடியாதான்!''

?நேரம் பார்க்க செல்போனை பார்த்தாலே போதும். செல்போனினால், வாட்ச் பிசினஸ் குறைந்திருக்கிறதா?

''செல்போன்கள் எங்களுக்கு போட்டியாக விளங்கினாலும், விற்பனையில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கண்ணாடி, சட்டை, ஷூ என்பதுபோல வாட்சும் ஓர் அணிகலன் என்றாகிவிட்டது. மணி பார்ப்பதற்காக மட்டும் வாட்ச் கட்டுகிறவர்கள் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.''

?நீங்கள் இந்தியா முழுக்க நகைக் கடைகளை வைத்திருக்கிறீர்கள். எல்லா நகரத்து மக்களும் விரும்புகிற மாதிரி, அவர்களின் ரசனையை எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்?

''எங்களிடம் ரிசர்ச் டீம் இருக்கிறது. மேலும், இந்தியா முழுக்க இருக்கும் மக்களை எங்களுடைய மேனேஜர்கள் அடிக்கடி சந்தித்து, அவர்களின் ரசனை குறித்து விவாதிக்கிறார்கள். அதனாலேயேதான் எல்லோ ரும் விரும்பும்படியான டிசைன்களை எங்களால் சிறப்பாக உருவாக்க முடிகிறது!''

''தங்கம் வருமானம் தராத சொத்தா?''

?நகை வாங்குவது பெண்களுக்கு சென்டிமென்டான விஷயம். உங்களைப் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் அந்த சென்டிமென்டை எப்படி நிறைவேற்ற முடிகிறது?

''நீங்கள் கேட்பது சரிதான். தனிஷ்க் பெயரில் நிறைய ஸ்டோர்கள் இருந்தாலும், அதில் கணிசமானவை ஃபிரான்சைஸி மாடலில்தான் நடத்துகிறோம். உதாரணத்துக்கு, சேலத்தில் இருக்கும் எங்களது கடை ஃபிரான்சைஸி மாடலில்தான் இயங்குகிறது. ஆனாலும், வாடிக்கையாளர் விரும்பியபடி எங்கள் சேவையை அவர்களுக்குத் தருவதால்தான் எங்களால் தொடர்ந்து நல்ல பெயரோடு விளங்க முடிகிறது.''  

?இப்போது ஆன்லைன் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறதே, அதை நீங்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறீர்கள்?

''ஆமாம், புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஆன்லைனில் விற்பனை அதிகரித்தபடி உள்ளன. இங்கிலாந்தில்கூட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் 50 சதவிகிதம் ஆன்லைன் மூலம் விற்பனை ஆகிறது. நாங்களும் ஆன்லைன் மூலம் விற்கிறோம். ஆனால், தங்க நகைகளை நேரில் பார்த்து, அனுபவித்து வாங்குவதையே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள்.''

?தங்கத்தை வருமானம் தராத சொத்து (unproductive assets) என்று சொல்கிறார்களே, இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

''தங்கத்தின் விற்பனையில் 5 முதல் 7 சதவிகிதம் வரைக்குமே நாணயங்கள்; மற்றவை, ஆபரணங்கள். அவசரம் என்று வரும்போது அத்தனை பேருக்கும் உதவும் இதை எப்படி வருமானம் தராத சொத்து என்று சொல்ல முடியும். மேலும், தங்கத்தை அணியும்போது ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே, அதற்கு ஏதாவது மதிப்பு இருக்கிறதா? நீங்கள் வாங்கும் டி.வி. உங்களுக்கு சந்தோஷம் தருகிற மாதிரி, தங்கமும் மகிழ்ச்சியைத் தருகிறது.''

?அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்வதால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாகிறது. அதனால் தங்கம் வாங்கவேண்டாம் என்கிறாரே மத்திய அமைச்சர்?

''எங்கள் பிசினஸ் தங்கம் விற்பது. நான் எப்படி தங்கத்தை வாங்கவேண்டாம் என்று சொல்ல முடியும்? இந்தியாவில் மட்டும் 30,000 டன் தங்கம் இருக்கிறது. இதை மறுசுழற்சி செய்வதன் மூலம் தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கலாம். மற்றபடி நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது நம் கையில் இல்லை.''