Published:Updated:

'ஆக்ட் ஆஃப் காட்’ பாலிசி: இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க!

- செ.கார்த்திகேயன்.

##~##

'ஓ மை காட்’ - சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த இந்திப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. காரணம், இந்தப் படம் எடுத்துச் சொன்ன விஷயம். படத்தில் ஹீரோவின்  வீடு நிலநடுக்கத்தால் உடைந்துவிட, 'ஆக்ட் ஆஃப் காட்’ பாலிசி எடுத்தும், இழப்பீடு தர மறுக்கிறது இன்ஷூரன்ஸ் நிறுவனம். கடைசி வரை போராடி எப்படி இழப்பீட்டை பெறுகிறார் ஹீரோ என்பதே படத்தின் கதை.

அது என்ன 'ஆக்ட் ஆஃப் காட்’ பாலிசி? இதை எடுத்தால் இழப்பீடு கிடைக்குமா, கிடைக்காதா என்கிற கேள்விகளை நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஆர்.சத்யசீலனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆக்ட் ஆஃப் காட்!

''மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியினால் நிகழும் இழப்புகளுக்கு ஈடு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் 'ஆக்ட் ஆஃப் காட்’ பாலிசி. இது ஒரு துணை பாலிசி (ரைடர் பாலிசி). உதாரணத்துக்கு வீட்டு உரிமையாளர் பாலிசி (ஹவுஸ் ஹோல்டர் பாலிசி) எடுக்கும்போது இதை ரைடராக எடுத்துக்கொள்ள முடியும். இந்த பாலிசியில் நிலநடுக்கம், சுனாமி, புயல், நிலச்சரிவு மற்றும் சூறாவளி போன்ற மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியினால் நிகழும் இழப்புகளுக்கு க்ளைம் செய்துகொள்ள முடியும். உயிர் அல்லது உடைமை தொடர்பான இழப்பாக இருந்தாலும், ஒருவரின் உடைமையினால் மற்றவர்களின் உயிருக்கோ அல்லது உடைமைக்கோ பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கான இழப்பீடு கிடைக்கும்.

'ஆக்ட் ஆஃப் காட்’ பாலிசி: இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க!

உதாரணமாக, ஒரு கட்டடம் கட்டும் போது நிலநடுக்கம் அல்லது புயல் காரணமாக அது இடிந்து, பக்கத்தில் உள்ள கட்டடத்தை சேதப்படுத்திவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 'ஆக்ட் ஆஃப் காட்’ பாலிசி எடுத்திருந்து, அதில் மூன்றாம் நபருக்கான இழப்பீடு பிரிவையும் (தேர்டு பார்ட்டி க்ளைம்) சேர்த்திருந்தால், சேதத்திற்கு உண்டான இழப்பீடு உங்களுக்கு கிடைக்கும்.

ஹவுஸ் ஹோல்டர் பாலிசியில் எல்லா வகை இயற்கை சீற்றங்களுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்த துணை பாலிசியின் மூலம் எல்லாவகை இயற்கை சீற்றங்களுக்கும் இழப்பீடு கிடைக்கும்.

எதன் அடிப்படையில்..?

'ஆக்ட் ஆஃப் காட்’ பாலிசி: இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க!

வீடு, நிறுவனம் ஆகியவற்றின் மதிப்பைப் பொறுத்து இந்த பாலிசியை எடுத்துக்கொள்ள லாம். தற்போதைய மதிப்பு அடிப்படையில் பாலிசி எடுத்தாலும் இயற்கை சீற்றங்களால் சேதம் ஏற்படும்போது அன்றைய நிலையில் அந்தச் சொத்துக்கு என்ன மதிப்போ, அந்தத் தொகைக்கு மட்டுமே க்ளைம் கிடைக்கும். பாலிசி எடுக்கும்போதே கட்டடத்திற்கு, உடைமைக்கு, அதில் வாழும் உயிர்களுக்கு என குறிப்பிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். வாகனங்களுக்குகூட இந்த பாலிசி எடுக்கலாம்.    

சாதாரண பாலிசிகளுக்கு வசூலிக்கப்படும் பிரீமியம்தான் இந்த பாலிசிக்கும் வசூலிக்கப் படும். இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் இருக்கும் கட்டடங்கள், இதர உடைமைகளுக்கு வழக்கமான பிரீமியத்தைவிட 0.5 முதல் 1 சதவிகிதம் கூடுதல் பிரீமியம் விதிக்கப்படும்.

விதிமுறைகள்!

யார் இந்த பாலிசியை எடுக்கிறார்களோ, அவர்களின் பெயரில் பாலிசி எடுக்கப்படும் சொத்து இருக்கவேண்டும். பாலிசியை எடுக்கும்போது தரப்படும் விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து, பாலிசியானது கட்டடத்திற்கு மட்டுமா, கட்டடம் மற்றும் கட்டடத்தில் உள்ள பொருட்களுக்கும் சேர்த்தா?, கட்டடத்துக்கு அருகில் இருக்கும் பொருட்களுக்கும் சேர்த்தா என்பதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். அப்போதுதான் க்ளைம் செய்வதில் பிரச்னை எதுவும் வராது.

சமர்ப்பிக்க வேண்டியவை!

இந்த பாலிசியில் இழப்பீடு பெற பின்வரும் விஷயங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக சமர்ப்பிக்கவேண்டும். சுற்று வட்டாரத்தில் எந்தவொரு வீடோ, நிறுவனங்ளோ இயற்கை சீற்றங்களி னால் பாதிப்புக்கு உள்ளாகாமல் ஒருவரின் வீடு மட்டும் இயற்கை சீற்றத்தினால் பாதிப்புக்கு உள்ளானாலோ (இடி போன்ற தாக்குதல்களால்) அல்லது மொத்த ஏரியாவே இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டாலோ நாளிதழில் வெளியான செய்தி, அன்று ஊடகங்களில் வெளியான செய்தி அடங்கிய சி.டி, வானிலை ஆய்வு மையத்திடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ், பஞ்சாயத்து அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழ், இயற்கை சீற்றத்தினால் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் தீயணைப்பு அலுவலகத்திடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் என இதில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிப்பது அவசியம். பாதிக்கப்பட்ட இடம் இயற்கைச் சீற்றத்தால் சேதம் அடைந்ததை நிரூபிக்கவே இந்த சான்றிதழ்'' என்றார் சத்யசீலன்.

இயற்கை சீற்றத்திலிருந்து தப்பிக்க நினைப்பவர் கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாமே!