Published:Updated:

கணினி வழி வங்கிப் பரிமாற்றம்!

ட்ரோஜன்ஸ் சாஃப்ட்வேர், ஜாக்கிரதை!

கணினி வழி வங்கிப் பரிமாற்றம்!

ட்ரோஜன்ஸ் சாஃப்ட்வேர், ஜாக்கிரதை!

Published:Updated:
##~##

கணினி வழி வங்கிப் பணப் பரிமாற்றம் செய்யும்போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பான வழிமுறைகளை இந்த வாரம் தொடர்ந்து சொல்கிறேன்.

கணினி வழி வங்கிச் செயல்பாடுகளுக்கு பொது இடத்தில் அமைந்துள்ள சைபர் கஃபேக்களைப் பயன்படுத்தக்கூடாது. அங்கு அமைந்துள்ள கணினிகளை பலபேர் பயன்படுத்துவதால் பலவித வைரஸ்களால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். குறிப்பாக,  ட்ரோஜன்ஸ் சாஃப்ட்வேர் மூலம் உங்களது அனைத்து ரகசியத் தகவல்களையும் மோசடிப் பேர்வழிகள் கையகப்படுத்திவிட வாய்ப்புண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டில் இருக்கிற உங்கள் கம்ப்யூட்டரையும் பாதுகாப்பாக வைத்திடவும். சில சமயங்களில் நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து

மின்னஞ்சல் வந்தால், அதனைத் திறக்க வேண்டாம். அதன்மூலம் நமது விவரங்களை ரகசியமாக அவர்கள் அறிந்துகொள்ள வழிபிறந்துவிடும். அவ்வப்போது ஆன்டிவைரஸ் போட்டு கணினியைத் தேவையற்ற தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வைக்கவும். விரும்பத் தகாத இடங்களிலிருந்து கணினிக்கு வரும் இடர்பாடுகளை சரியான முறையில் தடுத்திட தேவையான பாதுகாப்பு செய்துவைத்துக்கொள்ளவும்.

இரண்டு வழிமுறைகள்!

உங்களது வங்கிக் கணக்கு விவரங்களையோ அல்லது சில தனிப்பட்ட தகவல்களையோ இணையதளத்தில் சமர்ப்பிக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வழிகள் மூலம் கண்டறியலாம்.

கணினி வழி வங்கிப் பரிமாற்றம்!

இணையதளத்தினைத் திறக்கும் முன்னர் 'அட்ரஸ் பார்’-ல் (address bar) ‘https://’’ என ஆரம்பமானால் அது பாதுகாப்பானது. அட்ரஸ் பார்  வெளிப்படையாக கண்ணில் தென்படாமல் போனால், ‘lock icon’-னை ப்ரௌஸர் ஸ்டேட்டஸ் பார் (browser status bar)160; மூலம் தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பிக்கவும். அதன்மூலம் நமக்குத் தேவையான ரகசியக் குறியீடுகள் உள்ளதா என அறிய முடியும். மேலும், ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தும் அனைத்து இணையதளங்களுமே சட்டப்பூர்வமானவை என எண்ணிவிடக்கூடாது. நாம் அனுப்பும் விவரங்கள் ரகசியக் குறியீடுகளில் அனுப்பப்படுகிறது அவ்வளவே.

முக்கியமான விஷயம்!

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புகிறோம் என்று சொல்கிறவர்களின் பேச்சை நம்பி பணத்தை இழந்த பலரது கதையை அறிவோம் நாம். இது மாதிரி வருகிற மெயில்களை நம்பி, உங்கள் வங்கிக் கணக்கு, தனிப்பட்ட விவரங்களைச் சொல்லிவிடாதீர்கள்.

* உங்கள் வியாபாரத்திற்கு பணஉதவி செய்கிறோம். திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குகிறோம் என வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்/ நபர்கள் எழுதும் கடிதங்களுடன் வரும் மின்னஞ்சல்களை நம்பி மோசம் போகாதீர்கள்.

கணினி வழி வங்கிப் பரிமாற்றம்!

* பெரிய தொகை அனுப்ப, சிறிய தொகையை முன்பணமாக கேட்பார்கள், தந்துவிடாதீர்கள்.

* இந்திய ரிசர்வ் வங்கியிடம் கணக்கு வைத்துள்ளோம்; மிகக் குறைந்த வட்டியில் ஏராளமாகக் கடன் வழங்க முன் வந்துள்ளோம் என போலியான சான்றுகள், பத்திரங்கள், டெபாசிட் ரசீதுகளை வைத்து ஏமாற்ற முயற்சிப்பார்கள். இந்திய ரிசர்வ் வங்கியில் எந்தவொரு தனிநபர், நிறுவனம், அறக்கட்டளை போன்றவைகள் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது என்பதை மறக்காதீர்கள்.

* பல்வேறு பெயர்களில் நடைபெறும் லாட்டரி, பணப்பரிமாற்றத் திட்டம் பரிசுப் பணம் என்று சொல்லி ஏமாற்றும் நயவஞ்சகர்களின் மாயவலையில் சிக்காதீர்கள். இவையெல்லாம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் - 1999-ன் கீழ் தடை செய்யப்பட்ட செயல்களாகும்.

நாம் என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், மோசடிப் பேர்வழிகள் நம்மைவிட புத்திசாலிகளாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களிடம் அகப்பட்டு பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, அதை மீட்க அலைவதைவிட, விழிப்பு உணர்வோடு கணினியில் பணப் பரிமாற்றம் செய்தால் பிரச்னையே வராது. கிராமப்புறங்களில் கள்வன் பெரிசா? காப்பவன் பெரிசா? என்பார்கள். நாம் பாதுகாப்பாக நடந்துகொண்டு,  காப்பவன்தான் பெரிசு என்று நிரூபிப்போம்.

(இன்னும் சொல்கிறேன்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism