Published:Updated:

எங்களுக்கு யாரும் போட்டி இல்லை!

- வா.கார்த்திகேயன். படங்கள்: பா.காளிமுத்து.

எங்களுக்கு யாரும் போட்டி இல்லை!

- வா.கார்த்திகேயன். படங்கள்: பா.காளிமுத்து.

Published:Updated:
##~##

  பொறியியல் படித்துவிட்டு எம்.பி.ஏ. படிப்பவர்கள் அதிகம். ஆனால், எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, எம்.பி.ஏ. படிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்துவிட்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தவர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். தற்போது அரவிந்த் ஐகேர் சிஸ்டத்தின் திட்டப் பணிகளுக்கான இயக்குநராக இருக்கும் அவரை அவர்  மருத்துவமனையில் சந்தித்தோம். நாம் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னார் அவர். இனி பேட்டியிலிருந்து...

மருத்துவம் படித்தபின் எம்.பி.ஏ. படித்தது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தக் கேள்வியை அமெரிக்காவில் யாரும் என்னிடம் கேட்கவில்லை. காரணம், என்னைப் போலவே மருத்துவம் படித்த சிலர் அங்கு எம்.பி.ஏ. படிக்க வந்திருந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பார்மா நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்ல நினைத்தார்களே ஒழிய, மருத்துவமனை நடத்த அல்ல. நீங்கள் இப்போது என்னிடம் கேட்ட மாதிரியே என் வீட்டில் இருந்தவர்களும் அப்போது நிறைய கேள்வி கேட்டனர். 26 வயது வரை படித்துவிட்டு, மூன்று வருடம் அரவிந்தில் வேலை பார்த்தேன். 29-வது வயதில்தான் எம்.பி.ஏ. படிக்கச் சென்றேன்.

மேனேஜ்மென்ட் குரு சி.கே.பிரகலாத்திடம் படித்தவர் நீங்கள். அவரைப் பற்றி?

''அவரது வகுப்புக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கும். குலுக்கல் முறையில் உங்கள் பெயர் தேர்வானால்தான் அவர் வகுப்புக்குச் செல்ல முடியும். ஆனால், அவர் வகுப்புக்குச் செல்லும் முன்பே வேறு ஒரு மீட்டிங்கில் அவரை சந்தித்து பேசினேன். அரவிந்த் மருத்துவமனை செய்யும் விஷயங்களைப் பற்றி சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டார். அதன்பிறகு அவருடைய புத்தகத்தில் ('பாட்டம் ஆஃப் த பிரமிட்’) எங்களது மருத்துவமனையைப் பற்றி எழுதி இருந்தார். அவர்தான், என் குரு (னீமீஸீtஷீக்ஷீ). என்னை மாற்றிய ரசவாதி (ணீறீநீலீமீனீவீst) என்றுகூட சொல்வேன். அவரிடம் படித்த பல விஷயங்கள்தான், இப்போது முடிவெடுக்க வசதியாக இருக்கிறது.''

எங்களுக்கு யாரும் போட்டி இல்லை!

இப்போது நீங்கள் டாக்டரா, இல்லை நிர்வாகியா?

''வாரத்துக்கு இரண்டு நாட்கள் டாக்டராக இருந்து ஆபரேஷன் செய்கிறேன். மற்ற நாட்களில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட வேலை களில் இருக்கிறேன்.''

சமீபகாலம் வரை உங்கள் மருத்துவமனை மட்டுமே இருந்தது. இப்போது போட்டி அதிகரித்துவிட்டதே?  

''உண்மைதான். மற்ற மருத்துவமனைகளுடன் நாங்கள் போட்டிபோட வேண்டிஇருக்கிறது. எங்கள் மருத்துவமனையைப் பற்றி நாங்கள் விளம்பரம் செய்வதில்லை. அரவிந்துக்கு போனால் குறைவான செலவில் தரமான சிகிச்சை பெறலாம் என்று மக்கள் எங்களுக்காக பேசுவதுதான் விளம்பரம். மேலும், விளம்பரங்கள் மூலம் மற்ற மருத்துவமனைகள் குறிவைப்பது சமூகத்தில் மேல்மட்டத்தில் இருக்கக்கூடிய 10-20 சதவிகித மக்களை  மட்டும்தான். அதனால் யாரும் எங்களுக்கு போட்டி இல்லை.''

'பாட்டம் ஆஃப் த பிரமிட்’ என்கிற கருத்தாக்கம் உங்களுக்கு தெரியாததல்ல. ஏன் இன்னும் சிறு நகரங்களில் நீங்கள் உங்கள் மருத்துவமனையை ஆரம்பிக்கவில்லை?

எங்களுக்கு யாரும் போட்டி இல்லை!

''ஒரு செக்-அப்க்கு 50 ரூபாய்தான் நாங்கள் வசூலிக்கிறோம். இருந்தாலும், இந்த சிகிச்சையைப் பெற மற்ற நகரங்களில் இருந்துவர பஸ் செலவு, சாப்பாட்டு செலவு என மக்களுக்கு அதிக செலவாகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். என்றாலும், சிறுநகரங்களில் மருத்துவனை ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஒரு எம்.எஸ். படித்த டாக்டருக்கு 70,000 ரூபாய் சம்பளம் தரவேண்டி இருக்கிறது. ஆனால், அதற்கு பதிலாக 'விஷன் சென்டர்’களை நிறைய ஆரம்பித்திருக்கிறோம். அங்கிருந்து பெரிய மருத்துவமனைக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைக்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 90 சதவிகிதத்துக்கு மேலான பிரச்னைகளை சரி செய்துவிடுகிறோம்!''.

உங்களது மாணவர்களுக்கு டிரெய்னிங் தேவைப்படுவதால்தான் நீங்கள் இலவச முகாம்கள் நடத்துவதாகவும், உங்கள் மருத்துவமனையில் பெரும்பாலும் சமீபத்தில் படித்து முடித்த மாணவர்கள்தான் வைத்தியம் பார்ப்பதாகவும் சொல்கிறார்களே?

''ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள் இருக்கிறது. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!''  

இதுவரை 40 லட்சத்துக்கு மேல் அறுவை சிகிச்சை செய்திருக்கிறீர்கள். இருந்தாலும், ஒரே அறையில், ஒரே சமயத்தில் பலருக்கும் சிகிச்சை நடக்கும்போது தவறு நடக்க வாய்ப்புண்டே?

''அப்படி எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. இதில் நாங்கள் பயிற்சி பெற்றிருக்கிறோம். ஓர் அறையில் ஒரு டாக்டரை வைத்து ஒரு ஆபரேஷனும் செய்ய முடியும், அதே அறையில் நர்ஸ் மற்றும் டேபிள்களை அதிகரித்து அதிகபட்சம் 6-8 ஆபரேஷன்களையும்கூட செய்ய முடியும். நான் ஒரு நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆபரேஷன்களைச் செய்வேன். இப்படி செய்தால் மட்டுமே குறைந்த கட்டணத்தில் பெரும்பாலானவர்களுக்கு சேவை செய்ய முடியும். மேலும், நாம் அனைவரும் தனித்தனி காரில் செல்வதில்லை; தனித்தனி வீட்டில் வாழ்வதில்லை. ஐந்து, பத்து பேர் என கூட்டமாகத்தான் வாழ்கிறோம்?''

தமிழ்நாட்டின் மற்ற இடங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் போன்றவற்றில் தடம் பதிக்கும் திட்டமில்லையா?

''நாங்கள் அறுவை சிகிச்சை மட்டும் செய்யவில்லை. லென்ஸ் மற்றும் மருந்து தயாரிப்பு, கவுன்சலிங் என பல விஷயங்களை உலகம் முழுக்க செய்கிறோம். வேகமாகச் செல்லவேண்டும் என்று எந்தத் திட்டமும் இல்லை. மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டுவதற்கு 300 வருடம் ஆனது. அதாவது, சுமார் 10 தலைமுறையினர் கட்டினார்கள். அதுபோலவே நாங்களும் வளர விரும்புகிறோம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism