ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்துவது சாதாரண விஷயமில்லை. ஆனால், அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிசினஸில் கலக்குகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா..? உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் கிராமத்தில் உள்ள அந்த நடுநிலைப் பள்ளியில், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தில் ஒரு கடையை நடத்துவதோடு, அதற்கான கணக்குவழக்குகளையும் தாங்களே பராமரித்து வருகிறார்கள். இது தொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணியிடம் பேசினோம்.

''கடந்த இரு ஆண்டுகளாக இந்தக் கடை செயல்பட்டு வருகிறது. எங்கள் பள்ளி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது என்பதால் மாணவர்கள் பேனா, பென்சில், நோட்டு போன்றவற்றை வாங்க சாலையைக் கடந்து செல்லவேண்டி இருக்கிறது. இதனால்தான் இப்படி ஒரு கடை நடத்த முடிவு செய்தோம். இதை மாணவர்களே நடத்தினால் நிதி சார்ந்த புரிதலும், நிர்வாகத் திறனும், பணம் தொடர்பான விஷயங்களில் பக்குவமும் கிடைக்கும் என்று நினைத்தோம். இதன்படி ஆசிரியர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.1,000 திரட்டி தந்தோம். மாணவர்கள் இந்தக் கடையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்'' என்றார்.

இந்தக் கடையை நிர்வாகம் செய்துவரும் எட்டாம் வகுப்பு மாணவிகள் யுவதர்ஷினி, தமிழரசி, மதுமிதா, வினோதினியிடம் பேசினோம். ''ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரம்தான் கடை நடத்துறோம். தேவைப்படும் பொருட்களை லிஸ்ட் போட்டு ஆசிரியரிடம் தருவோம். அவர்கள் வாங்கிக் கொண்டுவந்து தந்துவிடுவார்கள். இதை லாபம் இல்லாமல் அடக்க விலைக்கே விற்பனை செய்கிறோம்'' என்றனர். மற்ற பள்ளிகளும் பின்பற்றவேண்டிய நல்ல திட்டம் இது!

கி.விக்னேஷ்வரி,
படங்கள்: சி.யமுனை செல்வன்.