கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2000-ல் என்னிடம் ஆலோசனைக் கேட்டு வந்தார் அருண். அப்போது அவருக்கு 30 வயது. மார்க்கெட்டிங் வேலையில் இருந்தார். இப்போது அவருக்கு 43 வயது. ஆண்டுகள் பல கடந்தாலும் அவரது குடும்பப் பிரச்னை தீரவே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன், பல பிரச்னைகளில் சிக்கி, அவர் முழி பிதுங்கி நிற்க, மீண்டும் என்னைத் தேடிவந்தார். பிரச்னையின் ஆரம்பத்திலேயே நான் சொன்ன யோசனைகளை அவர் சரியாகப் பின்பற்றாததே, பல சிக்கலில் அவர் மாட்டக் காரணம்.

நிலையான வருமானம் இல்லை!

பதிமூன்று வருடங்களுக்கு முன்பு அவரது மாத வருமானம் 30,000 ரூபாய். ஆனால், அவர் செய்துவந்த வேலை அவருக்குத் தொடர்ந்து நல்ல வருமானம் தந்தது. அந்த சமயத்தில் அவர் வேலை பார்த்த நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக வேலையில் இருந்து விலகினார். பிறகு சேர்ந்தார், மீண்டும் விலகினார்.

அருணுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த மகள் இப்போது கல்லூரி முதலாமாண்டும், இளையவள் 11-ம் வகுப்பும் படிக்கிறார்கள். மனைவி இல்லத்தரசி. இரண்டு பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு நிலையான வருமானம் இல்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை நிறுத்துங்கள், நிலையான வருமானத்திற்கு வழி செய்யுங்கள் என்றேன். வேலையை ஸ்விட்ச்ஓவர் செய்ய நினைத்தால் அதை 35 வயதுக்குள் செய்து முடித்துவிட வேண்டும். 35 வயதிற்கு மேலும் வேலையை மாற்றுவது நல்லதல்ல என்று சொன்னேன். ஆனால், அவர் கொஞ்சம் முன்கோபி. எனவே, அடிக்கடி சண்டைபோட்டு வேலை மாறி வந்தார். இதனால் நகையை அடமானம் வைத்தோ அல்லது வட்டிக்குப் பணத்தை வாங்கியோதான் குடும்பத்தை நடத்தி வந்தார்.

ஆபத்துக்கு வித்திட்ட வீட்டுக் கடன்!

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் என்னிடம் நிதி ஆலோசனைக் கேட்டு அவர் வந்தபோது, வீட்டுக் கடன் வாங்கவேண்டும் என்றார். சென்னை வளசரவாக்கத்தில் 6 லட்சம் ரூபாய்க்கு வீடு இருப்பதாகவும், அட்வான்ஸ் பணம் கையில் இருப்பதாகவும் 3.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார். குடியிருக்க ஒரு வீடு அவசியம் என்பதால் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியாயிற்று. இதுவரை வாடகையாக தந்துவந்த பணத்தை வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.-யாக செலுத்தச் சொன்னேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் வீட்டை வைத்து 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் தரச் சொல்லி வந்தார். எதற்கு என்று கேட்டேன். ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வருவதால், கோவையில் இரண்டு மனை வாங்கிப் போடத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். ஆனால், மேலும் மேலும் கடன் வாங்கினால் இ.எம்.ஐ. சுமை கூடுமே தவிர, குறையாது என்று சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.

கடன் வாங்குவதில் அவர் தீர்மானமாக இருந்ததால், அவருக்கு ஒரு யோசனை சொன்னேன். ''நீங்கள் கடனாக பெறும் 20 லட்சம் ரூபாயில் ஒரு மனையை வாங்கிக்கொண்டு, மீதிப் பணத்தைக்கொண்டு சொந்தமாக தொழில் தொடங்குங்கள். உங்களுக்கு 15 வருடம் அனுபவமுள்ள தொழிலில் முதலீடு செய்வதன் மூலம் 35 சதவிகிதம் லாபம் கிடைக்கும்'' என்றேன். நான் சொன்ன இந்த யோசனையை அருணின் குடும்பத்தார் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். எனவே, அவர்களின் வற்புறுத் தலினால் கோவையில் 10 லட்சம் தந்து ஒரு மனையையும், 3 லட்சம் தந்து இன்னொரு மனையையும் வாங்கினார். மீதிப் பணத்தை பயன்படுத்தி அடமானத்தில் இருந்த நகையைத் திருப்புதல், உறவினர் திருமணத்திற்கு உதவுதல் என்று செலவழித்தார்.

தொடர்பில் இருங்கள்!

அதன்பிறகு எட்டு மாதம் அவரைப் பார்க்கவே முடியவில்லை. அவரைத் தொடர்பு கொண்டபோதும் சரியான பதிலில்லை. எட்டு மாதம் கழித்து திடீரென ஒருநாள் என்னைத் தேடி வந்தார். ஏற்கெனவே வாங்கின வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.யையும், சமீபத்தில் வாங்கின 20 லட்சம் ரூபாய் கடனுக்கான இ.எம்.ஐ.-யையும் தன்னால் முறையாக கட்ட முடியவில்லை என்றார். இடைப்பட்ட எட்டு மாதங்களில் வருமானம் கிடைப்பதற்காக கார் லோனில் இரண்டு காரை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்திருக்கிறார். இதைச் சொன்னவுடன் எனக்கு ஆத்திரம்தான் வந்தது. காரணம், ஏற்கெனவே கடன் தொல்லை யால் தத்தளிக்கும்போது மீண்டும் கடன் வாங்கி, கார் வாங்கி இருக்கிறாரே என்று நொந்து கொண்டேன்.

நடந்தது நடந்துடுச்சி, இனி என்ன தீர்வு என்று கேட்டார். கோவையில் உள்ள இரண்டு காலி மனையில் குறைந்த விலையில் வாங்கிய மனையை விற்று, மனை வாங்குவதற்காகப் பெற்ற கடனை திருப்பிக் கட்டச் சொன்னேன். பின்னர் மற்றொரு காரை விற்று, ஒரு கார் கடனை கட்டி முடிக்கச் சொன்னேன். இன்னொரு மனையை மூத்த மகளின் திருமணத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் திட்டம் போட்டுத் தந்தேன்.

முதலில், நிலையான வருமானத்திற்கு ஏதாவது வழி செய்துகொள்ளுங்கள் எனவும் சொன்னேன். அப்போதுதான் வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.யை முறையாக கட்ட முடியும் என்றும், ஓய்வுக்காலத்திற்கு முதலீடும் செய்ய முடியும் என்றும் சொன்னேன். அதன்பிறகு அவர் செய்யும் செயல்களிலும், சிந்திப்பதிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தார். பிழைப்பிற்காக ஆரம்பித்த டிராவல்ஸ் தொழிலில் முன்னேற முயற்சி செய்து இன்று அதிக வருமானத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மூத்த பெண்ணுக்காக வைத்திருந்த நிலத்தை விற்காமல் (அந்த நிலத்தை ஓய்வுக்கால தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டம்!) பணத்தைச் சேமித்தே அவளின் திருமணத்தையும் நடத்த முதலீடு செய்து வருகிறார். இரண்டாவது பெண்ணின் திருமணத்திற்கும் தொகையை சேமித்து வருகிறார்.

இரு பெரும் தவறு!

இவர் செய்த பெரும் தவறு தனது சிறு வயதில் நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது. 30,000 ரூபாயில் ஆரம்பித்து, கடைசி வேலையில் மாதம் 1.15 லட்சம் ரூபாய் வரை மாதச் சம்பளம் வருமானம் பெற்றார். இதிலிருந்து கணிசமான தொகையை அவர் சேமித்திருக்கலாம். அதை செய்யாதது அவர் செய்த பெரிய தவறு. கோவையில் மனை வாங்க கடனாக பெற்ற 20 லட்சம் ரூபாயில் குறிப்பிட்ட தொகையை அவருக்கு நன்கு தெரிந்த தொழிலில் முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்காமல் விட்டது இரண்டாவது பெரிய தவறு. கடனுக்கான வட்டி 15 சதவிகிதம், தொழில் மூலம் கிடைக்கும் லாபம் 35 சதவிகிதம். இந்த இரண்டையும் கணக்கிட்டுப் பார்த்து முடிவெடுக்காமல் குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்தால் அந்த வாய்ப்பையும் நழுவவிட்டார்.

மொத்தத்தில் இவரது போக்கு ''வட்டிக்கு பணம் வாங்கி அட்டிகை வாங்கினாங்களாம்; வாங்கின பணத்துக்கு வட்டி கட்ட, அட்டிகையை வட்டிக்கு வச்சாங்களாம்'' என்கிற சொலவடை போலத்தான் இருந்தது. இன்று அந்த மனப்பாங்கிலிருந்து நூறு சதவிகிதம் அவர் வெளிவந்திருப்பதைப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.