இந்திய பங்குச் சந்தை படிப்படியாக இறங்கி சென்செக்ஸ் 19164 புள்ளிகளில் கடந்த வெள்ளியன்று முடிவடைந்தது. அதுவும் கடந்த வாரத்தில் தொடர்ந்து சந்தை இறங்கவே செய்தது. இன்று சரியாகிவிடும், நாளை ஏறிவிடும் என்கிற எதிர்பார்ப்புக்கு மாறாக சந்தை இறங்கி, எல்லோரையும் நோகடிக்கவே செய்தது.

இந்நிலை இன்னும் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும்?, சந்தை சரியும் இந்த சமயத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும் என்கிற கேள்விகளை மும்பையைச் சேர்ந்த சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி சொக்கலிங்கத்திடம் கேட்டோம். தெளிவான விளக்கம் தந்தார் அவர்.

''அண்மைக் காலமாக இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கிறது என்றாலும், சென்செக்ஸ், நிஃப்டி போன்ற இண்டெக்ஸ்களின் வீழ்ச்சி 10 சதவிகிதமாக இருந்தால், பல தனிப்பட்ட பங்குகளின் வீழ்ச்சி 30 முதல் 70 சதவிகிதமாக இருக்கிறது. இந்தப் பிரிவில் பொதுத் துறை வங்கிகள், ஐ.டி. பார்மா, எஃப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் அதிகமாக உள்ளன.

இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரையில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி இருக்கின்றன. இதில், அதிக தொகை திரும்ப வராமல் போக வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை எச்சரிக்கையுடன் கையாளவும்.

இப்போதைய நிலையில் இண்டெக்ஸில் இடம் பெற்றிருக்கும் முக்கிய 15 - 20 பங்குகளில் முதலீடு செய்யவே பலரும் விரும்பு கிறார்கள். இவைதவிர, இதர பங்குகளில் முதலீடு செய்ய மிகவும் பயப்படுகிறார்கள்.

கடந்த ஓராண்டுகாலத்தில் 50 - 60 மிட்கேப் நிறுவனப் பங்குகளின் விலை 60 - 70% வரை இறங்கியுள்ளன. கடந்த ஓராண்டு காலத்தில் பி.எஸ்.இ. 500 பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் சுமார் 10% அதிகரித்துள்ளது. இதில் 14 பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் மட்டும் 5.50 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில்,, இதர பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் மதிப்பு அதிகரிப்பு வெறும் 5.30 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதிலிருந்து இண்டெக்ஸ்களின் குறிப்பிட்ட பங்குகளில் மட்டுமே அதிக வர்த்தகம் நடக்கிறது என்பது உறுதியாகிறது'' என்றவர், பங்குச் சந்தையில் தற்போது என்ன நடக்கிறது என்பதையும் சொன்னார்.

''இந்திய பங்குச் சந்தை இன்னும் ஆறு மாத காலத்தில் பெரும் இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரை இதே நிலைமை நீடிக்கலாம். தற்போதைய நிலையில், ஒருவரின் மொத்த முதலீட்டில்

20 - 25% - க்கு மேல் பங்குச் சந்தையில் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அப்படியே அதிகமாக முதலீடு செய்தாலும், குறைந்தது ஓராண்டுகாலத்திற்கு காத்திருப்பது அவசியம்.

ஒருவரின் நிதி சார்ந்த முதலீட்டில் 40 முதல் 50% தொகையை ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் சந்தை இறங்கும்போது லாபம் பார்க்க முடியும்.

சிறு முதலீட்டாளர்களை பொறுத்தவரையில், ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை எனில், சந்தையில் நடப்பதை வேடிக்கைப் பார்ப்பதே நல்லது. அப்படி முதலீடு செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தால், தங்கள் மொத்த முதலீட்டில் சுமார் 20 சதவிகிதத்தை மட்டும்தான் பங்குச் சந்தையில் வைத்திருக்க வேண்டும்' என்றவர் சற்று நிறுத்தி, இந்திய பங்குச் சந்தையில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நிலை பற்றியும் விளக்கிச் சொன்னார்.

''கடந்த 18 மாதங்களில் இந்தியாவைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் உள்ளிட்டவை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கின்றன. 2013, ஜூலை 30-ம் தேதி வரையில், இவை சுமார் 42,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளன. இதற்கு மாறாக வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நிலை உள்ளது.

இந்திய பங்குச் சந்தையின் செயல்பாட்டை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிப்பது அந்நிய நிதி நிறுவனங்களாக (எஃப்.ஐ.ஐ.) இருக்கின்றன. நடப்பு 2013, ஜூலை 30-ம் தேதி வரையில் எஃப்.ஐ.ஐ.கள், கிட்டத்தட்ட 46,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்.

எஃப்.ஐ.ஐ.கள் இந்திய பங்குச் சந்தையில் செய்திருக்கும் மொத்த முதலீட்டில் 75 சதவிகிதத்தை 2011 ஜூலை மாதத்துக்கு முன்பே செய்துள்ளனர். சராசரியாக ஒரு அமெரிக்க டாலர் 43.80 ரூபாயாக இருக்கும்போது அவர்கள் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். தற்போது 60 அளவுக்கு ரூபாய் மதிப்பு குறைந்துள்ள நிலையில் அவர்கள் பங்குகளை விற்றால் சுமார் 35% இழப்பு ஏற்படும்.

மேலும், எஃப்.ஐ.ஐ.கள் முதலீடு செய்துள்ள பங்குகளில் பலவற்றில் பங்கின் விலை 10 - 70% வரை விலை குறைந்துள்ளது. அந்தவகையில் எஃப்.ஐ.ஐ.கள் இப்போதைக்கு அதிக அளவில் பங்குகளை விற்கமாட்டார்கள். இதனால் இந்தியச் சந்தை இறங்குவது தடுக்கப்படும்

தற்போதைய நிலையில் பல மதிப்பு மிக்க பங்குகள் (வேல்யூ ஸ்டாக்ஸ்) குறைந்த விலையில் கிடைக்கிறது. இவற்றில் நீண்ட கால முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 30% முதலீடு செய்து ஓராண்டு வைத்திருந்தால் தங்கள் ரிஸ்க்கை வெகுவாகக் குறைக்கலாம்'' என்றார்.

- சி.சரவணன்.