Published:Updated:

கட்டத் தவறிய செல்போன் கட்டணம்...

சிபிலில் பெயர் சேருமா?

##~##

? என் செல்போனுக்கான கட்டணத்தை போஸ்ட் பெய்டு முறையில் செலுத்தி வந்தேன். வேலை காரணமாக வெளிநாட்டிற்கு செல்லும்போது கடைசி மாத பில் தொகை 7,000 ரூபாயைக் கட்டத் தவறிவிட்டேன். இப்போது மீண்டும் சென்னை வந்துவிட்டேன். இந்தக் கடனால் என் பெயர் சிபில் பட்டியலில் சேர்ந்திருக்குமா?

- குமார், ராஜபாளையம்.

ம.பாரி, உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), லட்சுமி விலாஸ் பேங்க்.  

''பொதுவாக, சிபில் ரிப்போர்ட்-ல், வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள் மட்டும்தான் கவனிக்கப்படும். அதாவது, காசோலை பணம் இல்லாமல் திரும்புதல், வங்கியில் வாங்கிய வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றை கட்டத் தவறினால்தான் சிபில் ரிப்போர்ட்-ல் ஒருவரது பெயர் பதிவாகும். தற்போதைய நிலையில், செல்போன் கட்டணத்துக்கும், சிபில் ரிப்போர்ட்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, சிபில் ரிப்போர்ட்-ல் உங்களின் பெயர் பதிவாகாது. ஆனால், நீங்கள் கடன் வைத்துள்ள நிறுவனத்தின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, உரிய கட்டணத்தைச் செலுத்துவதே சரி!''

கட்டத் தவறிய செல்போன் கட்டணம்...

? மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் அவசரத் தேவைகளுக்குப் பணம் எடுக்க முடியுமா? அடிக்கடி பணத் தேவை என்றால் எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்?

- சபரிராஜன், திண்டுக்கல்.

கே.ராமலிங்கம், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்மென்ட் ப்ளானர்ஸ்.

''அடிக்கடி பணம் தேவைப்படுபவர்கள் லிக்விட் ஃபண்ட், அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 3 - 6 ஆறு மாதத் தேவைக்காக இந்த ஃபண்ட் வகைகளில் முதலீடு செய்யலாம். இதிலிருந்து 8 - 9 சதவிகிதம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எளிதில் பணம் எடுக்கக்கூடிய திட்டம் ஒன்றை வைத்திருக்கிறது. மணி மேனேஜர் ஃபண்ட் என்கிற இத்திட்டத்தில் டெபிட் கார்டு வசதியும் உள்ளது. இதன் மூலமாக உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தில் 50 சதவிகித தொகையை ஏ.டி.எம். கார்டு மூலமாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஷாப்பிங் செய்துகொள்ளலாம்.''

? நான் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறேன். மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விவரங்கள் ஓரளவிற்கு எனக்கு தெரியும். என்னால் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் ஆக முடியுமா? இதற்கு ஏதாவது தேர்வு எழுத வேண்டுமா?

- ராமன், அண்ணாநகர், சென்னை.

ஏ.முருகன், மண்டல மேலாளர், புளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்மென்ட் சென்டர்.

''மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் ஆவதற்கு குறைந்தபட்ச தகுதி இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். அந்த வகையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டாக முடியாது. வேண்டுமானால் நீங்கள் ஏதாவது ஏஜென்டிடம் சப் ஏஜென்டாகச் சேர்ந்துகொள்ளலாம்.''

? எல்.ஐ.சி. இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை சில நேரங்களில் கருணைக் காலம் (கிரேஸ் பீரியட்) முடிந்த பிறகே கட்டி வருகிறேன். இந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் க்ளைம் கிடைக்குமா?  

- செந்தில்நாதன், சென்னை.

வி.விஜயராகவன், மண்டல மேலாளர், வாடிக்கையாளர் சேவை பிரிவு, எல்.ஐ.சி.

கட்டத் தவறிய செல்போன் கட்டணம்...

''கிரேஸ் பீரியட் தாண்டி பிரீமியம் கட்டிய நிலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் க்ளைம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, பாலிசி தொடங்கி ஐந்தாண்டுக்குள் இப்படி காலம் கடந்து பிரீமியம் செலுத்தி அசம்பாவிதம் நடந்தால் க்ளைம் கிடைக்காது. அதேநேரத்தில், பாலிசிதாரர் எவ்வளவு ஆண்டு பிரீமியம் செலுத்தியுள்ளார் என்பதைப் பொறுத்துதான் கிரேஸ் பீரியட் முடிந்த பிறகும்  க்ளைம் கிடைக்கும். ஐந்து வருடம் தொடர்ந்து பிரீமியம் கட்டியவர்களுக்கு 6 மாதமும், 10 வருடம் கட்டியவர்களுக்கு 12 மாதமும் கிரேஸ் பீரியட் முடிந்த பிறகு சிறப்புச் சலுகை உண்டு.

கிரேஸ் பீரியட் முடிந்து எவ்வளவு காலத்துக்கு பிரீமியம் செலுத்தவில்லையோ, அந்தத் தொகையைப் பிடித்தம் செய்துகொண்டு மீதமுள்ள  தொகையைத் தருவார்கள். இதைப் பெறுவதற்கு வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. அதாவது, பாலிசிதாரரின் இறப்பு சான்றிதழ், நாமினியாக உள்ளவரின் வங்கிக் கணக்கு தகவல்கள் ஆகியவற்றை க்ளைம் படிவத்துடன் இணைத்து தரவேண்டும்.

15 - 30 நாட்களுக்குள் க்ளைம் கிடைத்துவிடும்.

கட்டத் தவறிய செல்போன் கட்டணம்...

? மாதம் 8,000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 96,000 ரூபாயை வீட்டு வாடகையாகச் செலுத்தி வருகிறேன். இதற்கு எந்தவிதமான ரசீதும் என்னிடம் இல்லை. இந்தத் தொகைக்கு வரி விலக்கு பெற முடியுமா?

- ஆனந்த் விஜய், திருச்சி.

சத்தியநாராயணன், ஆடிட்டர்.

'' நீங்கள் மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால், அலுவலகத்தில் உங்களுக்கு தரும் வீட்டு வாடகை படி தொகை எவ்வளவு என்பதைப் பார்க்கவேண்டும். அதில் நீங்கள் செலுத்தும் வாடகை தொகை போக மீதமுள்ள தொகைக்கு வரி கட்டவேண்டும். வாடகை செலுத்தியதற்கு ரசீது இல்லை என்றால் அதற்கு உங்கள் அலுவலகத்தில் எழுதி வாங்கி, அதை வருமான வரித் துறையில் சமர்ப்பிக்க வேண்டும். சொந்த தொழில் செய்பவர்கள், வீட்டு வாடகைக்காக

கட்டத் தவறிய செல்போன் கட்டணம்...

வருடத்திற்கு 24,000 ரூபாய் வரை மட்டும்தான் வரிவிலக்கு பெறமுடியும்.''

? என் அப்பா ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வந்தார். கடந்த வருடம் மாரடைப்பில் இறந்துவிட்டார். டீமேட் அக்கவுன்ட் அவருடைய பெயரில் உள்ளது. இப்போது அந்தப் பங்குகளை விற்க என்ன வழி?

- ராஜேஸ்வரி, புதுக்கோட்டை.

விவேக் கார்வா, நிதி ஆலோசகர்.

''உங்களின் அப்பா பெயரில் டீமேட் கணக்கு இருந்தால், பங்குகளை உங்கள் பெயருக்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் உங்கள் அப்பாவின் இறப்புச் சான்றிதழையும், அவருக்கு நீங்கள்தான் சட்டபூர்வமான வாரிசு என்பதற்கான சான்றிதழையும் புரோக்கரிடம் தரவேண்டும். வாரிசு சான்றிதழை உங்கள் ஊரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வாங்கித் தரவேண்டும். இந்த சான்றிதழ்கள் தந்தபிறகு உங்களின் பெயரில் டீமேட் கணக்கு ஆரம்பித்து, பங்குகளை விற்றுக் கொள்ளலாம்.''

கட்டத் தவறிய செல்போன் கட்டணம்...
அடுத்த கட்டுரைக்கு