பொதுத் துறை வங்கிகள் இனி தங்க காசுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தவுடனே, வங்கிகள் உடனடியாக அதை அமல்படுத்தின. இதனைத் தொடர்ந்து, நாங்களும் இனி தங்க காசுகளை விற்கமாட்டோம் என மத்திய அரசுக்கு ஆதரவாக தானாகவே முன்வந்து அறிவிப்பு செய்திருக்கின்றன தங்க நகைக் கடைகள்.

மத்திய அரசாங்கம் வங்கி மற்றும் தபால் நிலையங்களில்தான் தங்க காசு விற்கக்கூடாது என்று சொன்னது. ஆனால், தங்க நகைக் கடைகளும் ஏன் தங்க காசுகளை விற்பதை நிறுத்திக்கொண்டன? என மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்டு டைமண்ட் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜெ. சலானியிடம் கேட்டோம்.

''டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும்போது அதிகமான டாலர் நம் நாட்டி லிருந்து வெளியேறுகிறது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து ரூபாயின் மதிப்பு சரிகிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது. இது நம் நாட்டின் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கிறது. நகைக் கடைகளில் விற்பனையாகும் ஆபரணத் தங்க நகைகளின் விற்பனைகூட 25-லிருந்து 30 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது'' என்றார் அவர்.

இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே தங்க காசுகளை வாங்கி வைத்திருப்பவர்கள் இனி அவற்றை விற்க முடியுமா என்று கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். தங்க காசு விற்பனைக்கு மத்திய அரசாங்கம் தடை விதித்திருக்கும் இந்தச் சமயத்தில், தங்க நகை செய்யும் கடைக்காரர்களும் தங்க காசுகளை வேண்டாம் என்று சொன்னால் நஷ்டம் ஏற்படுமே என்று பயப்படுகின்றனர் மக்கள். இந்தப் பின்னணியில் தங்க நகைக் கடைகள் பக்கம் ஒரு நீண்ட விசிட் அடித்தோம்.

'தங்க காசுகளை விற்பதைதான் நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர, வாடிக்கையாளர்களிடமிருத்து காசுகளை வாங்கிக்கொள்ளமாட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லையே’ என பல நகைக் கடை உரிமையாளர்கள் எதிர்கேள்வி கேட்டார்கள். ஆனால், பெரும்பாலான நகைக் கடைகள் தங்க காசுகளுக்கு பணம் கொடுப்பதற்கு தயக்கம் காட்டவே செய்கின்றன. தங்க காசுகளை வாங்கிய கடையிலேயே பில்லுடன் கொண்டுபோய் கொடுத்தால்தான் அந்தத் தங்கத்திற்கு இன்றைய மதிப்பில் பணம் தருகிறார்கள். அதிலும்,

பணமாகப் பெறும்போது 3 முதல் 5 சதவிகிதம் வரை கழித்துகொண்டுதான் பணம் தருகிறார்கள். ஆனால், மற்ற கடைகளில், வங்கி, தபால் அலுவலகங்களில் வாங்கிய தங்க காசுகளையும் பார்களையும் விற்று பணமாக்குவது மிகவும் கடினம். அதற்கு பதிலாக ஆபரணமாக மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும்.

'மற்ற கடைகளில் வாங்கிய தங்க காசுகளை நாங்கள் வாங்கிக்கொள்வதற்கு மறுக்க காரணம், அதில் லாபம் அதிகம் இல்லை என்பதால்தான்’ என்கிறார்கள் சில நகைக் கடைக்காரர்கள். இதுகுறித்து ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம்.

''ஒரு கடையில் வாங்கிய தங்க காசை இன்னொரு நகைக் கடையினர் வாங்கிக்கொள்ள மறுப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளன. மற்ற கடையில் வாங்கிய தங்க காசை தந்துவிட்டு, அதே கடையில் புதிய நகை வாங்கினால் நகைக் கடைகளுக்குதான் லாபம். தங்க காசுகளுக்கு பணம் தரும்போது, கையில் இருக்கும் பணம் வெளியே போவதோடு, நகைகளையும் விற்க முடியாது என்பதால்தான் நகைக் கடைகள் தங்க காசுகளை வாங்கிக்கொள்வதில்லை. ஆனால், எந்த கடையில் வாங்கிய தங்க காசையும் நீங்கள் விரும்பும் கடையில் தந்து ஆபரணமாக வாங்கிக்கொள்ள முடியும்'' என்றவர், மேலும் இப்படி தங்க காசுகளை தந்து ஆபரணம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்கவேண்டும் என்பதையும் விளக்கினார்.

''தங்க காசுகளை வாங்கிய கடையிலேயே திரும்ப விற்கும்போது விலையில் 2 - 3 சதவிகித மதிப்பைக் குறைத்துக்கொள்வார்கள். இதற்கு காரணம், தங்கத்தின் விலை என்பது லாபத்தையும் சேர்த்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் அன்றைய விலையில் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகைக்குதான் நீங்கள் ஆபரணம் வாங்க முடியும். அந்த நகைக்கு செய்கூலி, சேதாரம் என தனியாக கழித்துக்கொள்வார்கள். நீங்கள் வாங்கும் நகைக்கான சேதாரம் சரியானதா என்பதைப் பார்த்துக்கொள்வது நல்லது. பெரும்பாலான நகைக் கடைகள் இந்த சேதாரத்தில்தான் லாபம் பார்க்கின்றன'' என்றார் அவர்.

இதுபற்றி நகைக் கடை வட்டாரங்களில் விசாரித்தோம். வேறு கடையில் வாங்கிய காசுகளை தந்து நகை வாங்கும்போது 5-லிருந்து 7 சதவிகிதம் வரை எடையைக் கழித்துக்கொள்வது வழக்கமான விஷயமாகத் தெரிந்தது. இது அந்த காசுகளின் தரத்திற்கேற்ப மாறும். அதேபோல எடையில் கழிவு என்பதும் கடைக்குக் கடை மாறுபடும். மேலும், 'வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வாங்கிய தங்க காசுகளையும், பார்களையும் தந்து ஆபரணத் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், பணம் கிடைக்காது. 24 கேரட் தங்கத்தின் விலையிலிருந்து 3 முதல் 5 சதவிகிதம் வரை விலை குறைத்துதான் வாங்கிக் கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கி மற்றும் தபால் நிலையங்களில் அதிக விலை தந்துதான் 24 கேரட் தங்க காசுகளை வாங்கி இருப்பார்கள் மக்கள். 99.9 சதவிகிதம் தரம் அதற்கான சான்றிதழ் என அனைத்திற்கும் சேர்த்து விலை தந்து வாங்கி இருப்பார்கள். ஆனால், இப்போது அந்த 24 கேரட் தங்கத்தைத் தந்து

நகைகள் வாங்கும்போது நஷ்டம்தான் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். இப்படி 24 கேரட் தங்கத்தை விற்கும்போது அதை வாங்கிய ரசீது வைத்திருப்பதும் அவசியம்’ என்று சொல்கிறார்கள் நகைக் கடை அதிபர்கள்.

''இன்றைய நிலையில் கட்டாயம் ஆபரணம் தேவை என்பவர்கள் மட்டும் காயின்களை கொடுத்து நகையாக மாற்றிக்கொள்ளலாம். இப்போது தேவை இல்லாதவர்கள் அந்த காயின்களை வைத்திருப்பது நல்லது. இனிவரும் காலத்தில் தங்கத்தின் விலை கட்டாயம் உயரும்'' என்கிறார் ஜெயந்திலால் ஜெ. சலானி.

பெரும்பாலான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்கம் வாங்குவதற்கு முக்கிய காரணமே அதை எளிதில் பணமாக்க முடியும் என்பதால்தான். ஆனால், இப்போதுள்ள

சூழ்நிலையில் தங்க காசுகளை தந்து பணம் வாங்குவது முடியாத காரியமாக உள்ளது. மேலும், இந்த தங்க காசுகளை வங்கிகளில் அடமானமாக வைத்து பணம் பெறமுடியாது. இதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, இப்போது காசுகளை வைத்திருப்பவர்கள் முதலீட்டு நோக்கில் தொடர்ந்து அப்படியே வைத்திருக்கலாம். அடிக்கடி பணம் தேவைப்படும் என்று நினைப்பவர்கள் மட்டும் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து காசுகளை தந்து ஆபரணமாக மாற்றிக்கொள்ளலாம்.

கடந்த சில மாதங்களாக தங்கத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல தங்க நகைக் கடைகள் பழைய தங்கத்திற்கு போனஸ் தந்து வாங்கிக்கொள்கிறது. வாடிக்கையாளர் கொண்டுவரும் ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் குறிப்பிட்ட அளவு தொகையை நகைக் கடைகள் போனஸாக தரும். இந்த போனஸ் தங்க காசுகளை மாற்றும்போது கிடைக்காது.

முதலீட்டு நோக்கில் எதிர்காலத்தில் பிள்ளை களுக்கு தேவைப்படும் என்று நினைப்பவர்கள் மட்டும் தங்க காசுகளை அப்படியே வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். உங்கள் தேவை என்ன என்பதைத் தெரிந்து முடிவு எடுப்பது நல்லது.

- இரா.ரூபாவதி.

தங்கம் விலை உயருமா?

தங்கத்தின் விலை இன்னும் உயருமா, சரியுமா, இந்த விலையிலே அப்படியே இருக்குமா என மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம். ''இப்போது, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய ரூபாயின் மதிப்புதான். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை என்பது அப்படியேதான் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு பெரும் விழ்ச்சி அடைந்துள்ளதால்தான் தற்போது தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 33,500 வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ரூபாயின் சரிவை கட்டுப்படுத்தினால் மட்டும்தான் தங்கத்தின் விலை குறையும். ஆனால், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை அனைத்தும் தற்காலிகமானதாகத்தான் இருக்கின்றன. இந்த முடிவுகளால் ரூபாயின் மதிப்பு இன்னும் சரிவடைவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.

ஆளுக்கு 18 கிராம்!

இந்திய குடும்பங்களில் மொத்தம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டன் வரை தங்கம் உள்ளது. இதன்படி ஒரு நபரிடம் சுமார் 18 கிராம் தங்கம் உள்ளது.

2013, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தங்கத்தின் இறக்குமதி 215 டன்னாக உள்ளது. இது தேவையைவிட 5.7 சதவிகிதம் குறைவு. உண்மையாக 256.5 டன் தங்கம் தேவை என வேர்ல்டு கோல்டு கவுன்சில் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 228 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த ஜனவரி - மார்ச் வரை 32 சதவிகிதம் உயர்ந்தது. இதன் மதிப்பு என்பது 72,889.4 கோடி ரூபாய் ஆகும். இதே கடந்த ஆண்டு இதன் மதிப்பு 55,148.7 கோடி ரூபாய் ஆகும். இதில் தங்க நகைகளின் தேவை என்பது 45,331 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டைவிட 20 சதவிகிதம் அதிகம். கடந்த ஆண்டு 37,739 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஆபரணத் தங்கத்தின் தேவை இருந்தது.