இந்தியா முழுக்க பல லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எஸ்.எம்.இ.) இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்கள் நிதித் தேவைக்கு வங்கிகளையே நம்பி இருக்கின்றன. ஆனால், வங்கிகளிடம் தொழில் கடனை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுவதாகப் புலம்புகின்றனர் எஸ்.எம்.இ. நிறுவனங்களை நடத்துபவர்கள்.

எஸ்.எம்.இ. துறை சார்ந்த தொழில் முனைவோர்கள் வங்கிக் கடன் விஷயத்தில் செய்யத் தவறுவது என்ன? கடன் கேட்டு வங்கியை அணுகும்போது என்னென்ன விஷயங்களை சிறு தொழில்முனைவோர்கள் கவனிக்க வேண்டும்? என்பதைத் தெரிந்துகொள்ள பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் பேசினோம். நாம் முதலில் சந்தித்தது எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தொழில் ஆலோசகர் எஸ்.சிவஞானம்,

''வேலை கிடைக்கவில்லை அதனால் சொந்தத் தொழில் தொடங்குகிறேன் என்கிற எண்ணத்தோடு சிறு, குறு தொழிலில் இறங்கி னால் தொடர்ந்து நிற்க முடியாது. சொந்தத் தொழில் செய்துதான் சம்பாதிக்கவேண்டும் என்கிற உறுதியோடு தொழில் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டால் சிறு தொழிலில் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதைத் தொழில் முனைவோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல, தொழிலுக்கு என வாங்கிய கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்பதும் அடிப்படையான விஷயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று தொடங்கினார் சிவஞானம்.

எந்தத் தொழில் தொடங்கப்போகிறோம், அதில் நமது அனுபவம், பயிற்சி இவற்றில் தெளிவாக இருந்தால் வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல் இருக்காது. குழப்பமான நிலையில், உங்களுக்கு தெரியாத தொழில் அல்லது கூட்டுசேர்ந்து செய்யப்போகிறீர்கள் என்றால் தெளிவாக இருக்கவேண்டும். கடனை வாங்கிய பிறகு தொழிலைவிட்டுச் செல்லும் போக்கு இருக்கக்கூடாது. மனைவிக்குதான் தொழில் தெரியும். ஆனால், தொழிலின் அனைத்து வெளிநடவடிக்கைகளையும் கணவர் தான் மேற்கொள்வார் என்கிற மாதிரியான நிலையில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிக் கடன் பெற செல்வதற்கு முன், உங்கள் தொழிலை சிறு, குறு தொழில்கள் பதிவாளரிடத்தில் பதிவு செய்துகொள்வது அவசியம். குடும்பத் தொழிலோ, அல்லது சிறிய அளவில் செய்யப் படும் தொழிலோ முறையான கணக்கு ஏடுகள், ஆடிட்டிங் போன்றவை செய்து வைத்துக்கொள்ள வேண்டும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உங்களது நன்மதிப்பை

நிச்சயம் கூட்டும். இது தொழிலில் கடன் வாங்கும் மதிப்பை அதிகரிக்கும். இதுபோன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால் நீங்கள் தொழில் கடன் கேட்டு செல்லும் எந்த வங்கியும் உங்களுக்கு கடன் தர மறுக்காது'' என்றார்.

இது தொடர்பாக மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்க மேலாளர் சந்திரனுடன் பேசினோம்.

''சிறு, குறு தொழில் முனைவோர் களிடத்தில் தெளிவான திட்டம் இருந்தால் வங்கிகள் கடன் தர மறுப்பதில்லை. எனவே, முதலில் திட்ட அறிக்கையில் தெளிவாக இருக்க வேண்டும். திட்டத்தின் அடிப்படையில் சிறு, குறு தொழில்ளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை எந்தவித சொத்து ஜாமீனும் இல்லாமல் கடன் தர வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக, சிறு, குறு தொழில் முனைவோர் வங்கிகளோடு எப்படி நல்லுறவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் தொடர்ச்சியாக வழிகாட்டுதல் தந்து வருகிறோம்'' என்றவர், அந்த வழிகாட்டுதலை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

''தொழில் முனைவோர் வங்கிகளோடு நல்ல நட்புறவு அடிப்படையில் செயல்பட வேண்டியது முக்கியம். கடன் தொகையைத் தாமதமாகக் கட்டுவது அல்லது கட்டாமல் விடுவது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது. இதனால் வங்கி உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும். அடுத்த முறை கடன் கேட்டு போனால் வங்கியானது கடன் தர மறுக்கவே அதிக வாய்ப்புண்டு.

கணக்கில் உள்ள இருப்பின் அடிப்படையில் காசோலை வழங்குவது முக்கியம். வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை வழங்க கூடாது. முன்தேதியிட்ட காசோலையாக இருந்தால் குறிப்பிட்ட தேதியில் வங்கிக் கணக்கில் பணம் இருப்பதுபோல பார்த்து கொள்ளுங்கள்.வங்கி மேலாளர்களுடன் நல்லுறவுடன் இருப்பது அவசியம். ஓ.டி. கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் வங்கி கேட்கும்போது தேவையான இருப்பு விவரங்களைக் கொடுக்க வேண்டியதும் அவசியம்.

முடிந்தவரை ஒரே முகவரியில் நிரந்தர அலுவலகம் அமைத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, ஒரு வங்கிக் கிளையை முதன்மையாக கொண்டு பரிவர்த்தனைகளை வைத்துக்கொள்வது நல்லது. அப்படி வைத்துக்கொள்ளும்போது உங்களது நடவடிக்கைகளை அந்த வங்கி கண்காணித்து மதிப்பிட்டு வைத்திருக்கும். இது உங்கள் கடன் மதிப்பை அதிகரிக்கும்.

மேலும், உங்களது தொழிலில் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளையும் வங்கிகள் மூலமே மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் தொழில் கடன் பெறுவது, திட்ட விரிவாக்கங்களுக்கு கடன் பெறுவது போன்றவை இதன்மூலமே சாத்தியம் என்பதை ஒவ்வொரு சிறு தொழில் முனைவோரும் அறிந்து நடக்கவேண்டும்'' என்றார்.

தொழில் தொடங்குவதும் அதை வெற்றிகரமாக கொண்டு செல்வதும் நமது நிதி ஆதாரங் களைப் பொறுத்ததுதான். புதிய தொழில் முனைவோராக இருந் தாலும், ஏற்கெனவே தொழில் செய்பவர்களாக இருந்தாலும் வங்கிகளிடத்தில் நன்மதிப்பை பெறும்போதுதான் நமது நிதி ஆதாரம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதை எஸ்.எம்.இ. துறையைச் சார்ந்தவர்கள் உணர வேண்டும்.

- நீரை. மகேந்திரன்,
படங்கள்: மகா. தமிழ்பிரபாகரன்.