Published:Updated:

உஷார்! உஷார்!

சிபில் பெயரில் ஒரு சீட்டிங்!

உஷார்! உஷார்!

சிபில் பெயரில் ஒரு சீட்டிங்!

Published:Updated:
##~##

பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருந்தார் சங்கர். ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் அவரால் இரண்டு, மூன்று மாதம் சரியாக இ.எம்.ஐ. கட்ட முடியவில்லை. அந்த இ.எம்.ஐ. தொகை வெறும் 13 ஆயிரம் ரூபாய்தான். அதற்கு  வட்டிக்கு வட்டி போட்டு பெரிதாக ஒரு தொகையைக் கடன் தந்த வங்கி கேட்க, அதையும் கட்டிவிட்டார் அவர். அதற்குள் அவர் பெயர் சிபிலில் இடம் பெற்றுவிட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் சங்கருக்கு ஒரு போன் வந்தது. 'உங்க பெயர் சிபிலில் இருக்கு. அதை எடுக்க நாங்க உதவுறோம்’  என்று சொன்னார் போன் செய்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கர் கொஞ்சம் விவரமானவர் என்பதால், 'நீங்க யார், உங்க போன் நம்பரைத் தரமுடியுமா?’ என்று கேட்டவுடன் எதிர்முனையில் பேசியவர் போனை 'கட்’ செய்துவிட்டார். போன்வந்த நம்பருக்கு சங்கர் தொடர்புகொள்ள முயற்சித்தும் எந்த பலனும் இல்லை.  

சங்கருக்கு மட்டுமல்ல, பலருக்கும் சமீப காலமாக இப்படிப்பட்ட போன்கள் வருகின்றன. இப்படி போன் செய்து பேசுகிறவர்களை நம்பலாமா? அவர்களால் ஒருவரது பெயரை சிபில் பட்டியலில் இருந்து நீக்க முடியுமா? என வங்கி வட்டாரத்தில் விசாரித்தோம்.  

சிபில் பட்டியலில் இருந்து நேரடியாக யாராலும் எந்தப் பெயரையும் எடுக்க முடியாது. பட்டியலில் இருக்கும் பெயரை எடுப்பதற்கான அதிகாரத்தை சிபில் அமைப்பு இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட அமைப்புக்கும் தரவில்லை.  இதுபோன்ற அழைப்புகளை ஆரம்பம் முதலே தவிர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் ஏமாற வேண்டி இருக்கும் என்று எச்சரித்தனர் வங்கி அதிகாரிகள். 

உஷார்! உஷார்!

எனினும், சிபில் பட்டியலில் இருந்து ஒருவரது பெயரை நீக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பேங்க் பஜார் டாட் காமின் சி.இ.ஓ. அதில் ஷெட்டியிடம் கேட்டோம்.

''கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சிபில் அமைப்பிற்கு அனுப்பி வைக்கும். இப்படி அனுப்பும்போது சில சமயத்தில் சிலருடைய தகவல் தவறாக பதிவாக வாய்ப்புண்டு. அதாவது, வாங்கிய கடனை சரியாக கட்ட முடியாத சூழ்நிலை உருவாகும் சமயங்களில், கடனை செட்டில்மென்ட்  செய்திருப்போம். அந்தத்

உஷார்! உஷார்!

தகவலை வங்கி சிபில் அமைப்புக்கு தெரிவிக்காமலே விட்டிருக்கலாம்.  அல்லது உங்கள் பெயர், முகவரி, பான் நம்பர், பிறந்த தேதி என ஏதாவது ஒன்று தவறுதலாக மாறிவிடவும் வாய்ப்புண்டு.

வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு நீங்கள் கட்டவேண்டிய பணம் கட்டிய பிறகும் உங்கள் பெயர் சிபில் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், முதலில் சிபில் ரிப்போர்ட்டை வாங்குங்கள். இதை ஆன்லைன் மூலமே பெற முடியும். https://www.cibil.com/online/credit-score-check.do என்ற இணையதள முகவரியில் சென்று சிபில் ரிப்போர்ட்டை பெற விண்ணப்பிக்கலாம். இதில் உங்களுடைய முழுவிவரம், தொலைபேசி எண், கடன் கணக்கு எண், முகவரி சான்று, அடையாள சான்று ஆகியவற்றை தரவேண்டி இருக்கும். இதற்கு 470 ரூபாய் கட்டணம் ஆகும்.

இப்படி வாங்கும் சிபில் ரிப்போர்ட்டில் கன்ட்ரோல் நம்பர் என்கிற 9 இலக்க எண் இருக்கும். இது மிகவும் முக்கியம். இதை வைத்து, உங்கள் பெயர் ஏன் சிபில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பதை நீங்கள் கடன் வாங்கிய வங்கியில் சுட்டிக்காட்டி அதை சரிசெய்து தருமாறு கேட்கலாம். அவர்கள் தவறை சரிசெய்து சிபிலில் இருந்து உங்கள் பெயரை எடுக்க குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகும். அந்த சமயத்தில் வங்கியிடம் இருந்து நீங்கள் ஒரு கடிதம் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டாலே போதும், உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது'' என்றார் அவர்.

இனியாவது இப்படி வரும் போன்கால்களை நம்பி யாரும் மோசம்போக வேண்டாம்!

  - இரா.ரூபாவதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism