Published:Updated:

முதல் காலாண்டு முடிவுகள் !

முதல் காலாண்டு முடிவுகள் !

முதல் காலாண்டு முடிவுகள் !

முதல் காலாண்டு முடிவுகள் !

Published:Updated:
##~##

பொதுவாக நிதி நிலை முடிவு என்கிற போது சந்தையில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முடிவாகத்தான் இருக்கிறது. 2013-14ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன்) நிகர லாபம் 3.7% அதிகரித்து ரூ.2,374 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய சாஃப்ட்வேர் சேவை நிறுவனமான டி.சி.எஸ்., சந்தை எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்கும் விதமாக விற்பனையில் 4.1% வளர்ச்சி கண்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னொரு முக்கிய ஐ.டி. நிறுவனமான மைண்ட்ரீ-ன் நிகர லாபம் 72 சதவிகிதம் கூடி இருக்கிறது.  

இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஐ.டி. நிறுவனமான ஹெச்.சி.எல்-ன் முதல் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி சிறப்பாக வந்துள்ளது. அதன் நிகர லாபம் 11% அதிகரித்துள்ளது.

ஐ.டி. நிறுவனங்களின் நிகர லாப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு குறைவே ஆகும். நடப்பு காலாண்டில் ரூபாய் மதிப்பு, வெகுவாக குறைந்திருப்பதால் ஐ.டி. கம்பெனிகளின் வருமானம் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

முதல் காலாண்டு முடிவுகள் !

பொருளாதார மந்த நிலை, அதிக வட்டி விகிதம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் பல முன்னணி நிறுவனங்களின் லாபம் கணிசமாக குறைந்து போனது.  இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப்-ன் நிகர லாபம் முதல் காலாண்டில் 38 சதவிகிதம் குறைந்துள்ளது.  ஜூன் காலாண்டில் கட்டுமானம் மற்றும் மால்கள் மூலமாக கிடைத்த நிகர லாபம் ரூபாய் 181 கோடி. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் இது 293 கோடி ரூபாயாக இருந்தது.

தென்னிந்தியாவின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் முதல் காலாண்டில் 73% வீழ்ச்சிகண்டுள்ளது. அந்நியச் செலாவணி பரிமாற்றம் மூலம் சுமார் 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் நிகர லாபம் குறைந்தது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ-ன் நிகர லாபம் 14% குறைந்துள்ளது. பணியாளர்  ஓய்வூதியத்துக்கு செல்லும் தொகை சுமார் 110% அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 75% குறைந்திருக்கிறது. வாராக் கடன் அதிகரிப்பதே இதற்கு மூலகாரணமாக உள்ளது. வங்கித் துறை செயல்பாடு முதல் காலாண்டில் மோசமாக இருந்தாலும், இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.-ன் நிகர லாபம் 25% உயர்ந்து ரூ.2,274 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. காரணம், கருவூல வருமானம் அதிகரிப்பு, மற்றும் சில்லறைக் கடன் அதிகமாக வாங்கப்பட்டிருப்பதே..!

முதல் காலாண்டில்  ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம், 382 கோடி ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. இதன் ஃபாரக்ஸ் மூலமான இழப்பு ரூ.862 கோடி ரூபாய்.

முதல் காலாண்டு முடிவுகள் !

வாகனத் துறை, மந்தநிலையில் இருந்தாலும் மாருதி சுசூகியின் நிகர லாபம் முதல் காலாண்டில் 49% அதிகரித்துள்ளது. நிகர லாபம் 423.77 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  

இதேபோல் மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் நிகர லாபம் 29% உயர்ந்துள்ளது. பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் டிராக்டர்களின் தேவை அதிகரித்ததால் லாபம் கூடி இருக்கிறது.

எதிர்பார்ப்புகளை எல்லாம்  தாண்டி ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் 18% அதிகரித்துள்ளது. பிரபல அனலிஸ்ட்கள் இதன் நிகர லாபம் 10% அளவுக்குதான் உயரும் என மதிப்பிட்டிருந்தார்கள். ஆனால், இதை எல்லாம் மீறி எஃப்.எம்.சி.ஜி. மற்றும் வேளாண் வணிக விற்பனை மற்றும் லாபம் அதிகரித்ததால், நிகர லாபம் 1,891 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. .

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ்  நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாப வரம்பு கூடியதால் நிகர லாபம் முதல் காலாண்டில் 19% அதிகரித்து ரூ.5,352 கோடியாக உயர்ந்திருக்கிறது.

- சி.சரவணன், சே.புகழரசி.

முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !
முதல் காலாண்டு முடிவுகள் !

  இ.பி.எஸ். (Earning per share)

ஒரு பங்கு சம்பாதித்து தரும் லாபம்தான் இ.பி.எஸ். ஒரு நிறுவனத்தின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை வாங்கினால் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

 பி/இ விகிதம்  (Price to Earnings Ratio)

நிறுவனப் பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கினால் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 புத்தக மதிப்பு (Book Value)

நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்பு இது. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன விலை கிடைக்குமோ, அதுதான் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு.

 பி/பி.வி (Price to book Value)

பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம் இது. அதாவது, பங்கின் சந்தை விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது.

இவ்விகிதம் குறைவாக இருந்தால் லாபம்!

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (Market Capitalization)

நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டாளர்கள் வசம் உள்ள மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு. ஒரு நிறுவனம் எந்த அளவுக்குப் பெரியது என்பதை இது சுட்டிக்காட்டும்.

செயல்பாட்டு லாப வரம்பு (Operating Profit Margin)

கம்பெனி வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப் பொருட்கள் விலை, பணியாளர் சம்பளம், வரிகள் மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை அதன் விற்பனை வருமானத்திலிருந்து கழித்தபின் கிடைக்கும் லாபமே செயல்பாட்டு லாபம். இந்த லாபம் விற்பனை வருமானத்தில் எத்தனை சதவிகிதம் என்பதுதான் செயல்பாட்டு லாப வரம்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism