Published:Updated:

எடக்கு மடக்கு - பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை பக்காவா பண்ணுங்க!

எடக்கு மடக்கு - பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை பக்காவா பண்ணுங்க!

எடக்கு மடக்கு - பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை பக்காவா பண்ணுங்க!

எடக்கு மடக்கு - பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை பக்காவா பண்ணுங்க!

Published:Updated:
##~##

'ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டுடுங்க பெரியப்பா!’ன்னு தம்பி மகன் திடீருன்னு அடம் பிடிச்சான். சரின்னு ஆபீஸ் போறவழியில ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டேங்க.

அந்தக் காலத்திலெல்லாம் ஒரே ஒரு கேட்டுதான் ஸ்கூல்ல. இன்னைக்கு மூணு கேட்டு. ஸ்கூல் பஸ், டூவீலர், காருக்குன்னு தனித்தனியா கேட்டைப் போட்டுட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டூவீலர் கேட்டுல ஒரு பய இல்லை. நான் மட்டும் போய் அவனை இறக்கி விட்டுட்டு கொஞ்ச நேரம் நின்னு பார்த்தேன். அப்பா, அம்மா, டிரைவருன்னு காரில கொண்டுவந்து பிள்ளைகளை இறக்கி விட்டுட்டு போய்க்கிட்டு இருந்தாங்க.

சரி, பஸ்ல எப்படி இருக்குன்னு பார்த்தா, 10 வருஷத்துக்கு முன்ன ஏழு பஸ் இருந்த இடத்துல இப்ப 12 பஸ். ஆனா, ஸ்கூலோட கெப்பாசிட்டி மூணு மடங்காகியிருக்குது. டூவீலரா வந்துபோய்க்கிட்டு இருந்த இடத்துல காரா வந்துபோகுதேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு காரிலேயும் ஒவ்வொரு குழந்தைதான் வருது. எவ்வளவு பெட்ரோல்/டீசல் வேஸ்ட்டுன்னு நினைச்சுட்டு ஸ்கூலைவிட்டு வெளியே வந்தேங்க.

மெயின்ரோட்டுக்கு வந்து சிக்னல்ல நிக்கும்போது எதேச்சையா பார்த்தா, எல்லா காருலேயும் ஒரே ஒரு ஆளுதான். இப்படி ஒருத்தர் ஒருத்தரா போறதுக்கு எவ்வளவு எரிபொருள் விரயமாகுதுங்கிறது ஏன் இந்த ஜனங்களுக்கு புரியமாட்டேங்குது?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மாதிரியான நாடுகள்லகூட இதே நிலைமைதான். ஆனா, எழுபதுகளில நடந்த தாறுமாறான குருடாயில் விலை ஏற்றத்துக்கு அப்புறமா அங்குள்ள அரசாங்கங்கள் புத்திசாலித்தனமானதாகவும், நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் நிறைய

எடக்கு மடக்கு - பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை பக்காவா பண்ணுங்க!

நடவடிக்கை எடுத்திருக்குங்க.

உதாரணத்துக்கு, ஹைவேயில தனி ஆள் ஓட்டீட்டுப் போற காரு டோல்கேட்டுல பணம் கட்டணும். ஆனா, மூணுபேரா ஒரே காருல போனா பணம் கட்டவேண்டியதில்லை. ஹைவேயில இரண்டுபேரும் அதுக்கு மேலே யுமா போற காருக்கு தனி லேன்ங்கிற மாதிரி அரசாங்கம் பல சலுகை தந்துது!  

ஆனாலும் பாருங்க, அங்கேயும் பெட்ரோலை இன்னும் தண்ணி மாதிரி செலவழிக்கதான் செய்றாங்க. குரூட் ஆயில்ங்கிறது கிடைக்காத ஒரு விஷயம். அதைச் சிக்கனமா செலவழிக்கணும்னு அரசாங்கங்கள் நினைச்சாலும் அமெரிக்காவில 2009-வது வருஷ சென்சஸ்படி கிட்டத்தட்ட 76% பேரு காருல தனியாத்தான் போறாங்களாம். 10% பேருதான் ஷேரிங்கில போறாங்களாம். அரசாங்கம் ஷேரிங்குன்னு சொல்லியும் அங்கே கேட்கமாட்டேங்குறாங்க. இங்க இருக்கிற அரசாங்கம் அப்படி எதையும் சொல்றதும் இல்ல, யோசிக்கிறதும் இல்லை.

அடப் போ ஏகாம்பரம்... மந்திரிக்கு பின்னாடி வெட்டியா 40 காரு வர்ற ஊரில இருந்துகிட்டு இப்படி உளறிக்கிட்டு இருக்கியே!ன்னு நீங்க சொல்லுறது எனக்கு கேட்குது. ஆனாலும் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மற்றும் கணிசமான ஆயில் ரிசர்வ்களை வச்சிருக்கிற நாடுகளே பெட்ரோல், டீசலை சிக்கனமா செலவழிங்கன்னு சொல்றப்ப, சின்னப் பொருளாதாரமான இந்தியா போன்ற நாடுகள் ரொம்பவே ஜனங்களுக்கு அட்வைஸும் பண்ணனும், நிறைய சலுகையும் தரணும்.

இந்த எரியுற பிரச்னைல நாம  என்ன எடுத்துகிட்டு ஓடலாம்னு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு. பெட்ரோல்/டீசலைக் குடிக்கிற எஸ்.யூ.வி.க்கு டூட்டியைக் குறைக்கணுமிங்கறாரு. 2008-ல பொருளாதாரம் மந்தநிலைக்கு வந்தப்ப கார் கம்பெனிகளுக்கு சலுகைகளை (ஸ்டிமுலஸ்) அள்ளி வழங்குனாங்க. பொருளாதாரம் ஓரளவு சரியான பிறகும் இதை நிறுத்தல. சமீபத்துலதான் நிறுத்தினாங்க. இப்ப திரும்பவும் விற்பனை படுத்துக்கிச்சுன்னவுடனே கார் கம்பெனிங்க மறுபடியும் லாபி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

பற்றாக்குறை (CAD) குறைஞ்சுகிட்டே போகுதுங்கறதை மனசுல வச்சுக்கிட்டு செயல்படணும். தனியரு ஆளா ஆபீஸுக்கு காரில போனா, அதைத் தடுக்கற மாதிரியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கணும். ஃப்யூயல் எஃபிஷியன்சி இல்லாத கார்களுக்கு டூட்டியைப் போடணும். நீண்ட கால அடிப்படையில இந்தப் பிரச்னையைத் தீர்க்கறதுக்கு நல்ல பப்ளிக் டிரான்ஸ்போர்ட் சிஸ்டமும், சிட்டிக்குள்ளார போறதுக்கு சௌகரியமா ஆட்டோ/டாக்ஸி கட்டணத்தையும் அமல்படுத்தி நிர்வகிக்கணும். இதையெல்லாம் விட்டுட்டு, தங்கம் வாங்காதே, நைட்ல பெட்ரோல் பங்கை பூட்டு!ன்னு சொல்லப்படாது.

இதெல்லாம் மந்திரிமார்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாதா?ன்னு நீங்க கேக்கலாம். மக்களுக்கு எது நல்லதுங்கிறதைப் பார்க்கிறதைவிட தங்களுக்கு எது நல்லதுன்னுதானே அவங்க பாக்குறாங்க!

அவங்களைத் திருத்த முடியாது! அட்லீஸ்ட் நாம திருந்துவோம். நாளையில இருந்து உங்க நண்பர் யாரையாவது உங்க காருல ஆபீஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க! பக்கத்துல போய்வர்றதுக்கு முடிஞ்ச வரைக்கும் பஸ் அல்லது சைக்கிளைப் பயன்படுத்துங்க! என்னங்க, நான் சொல்றது சரிதானே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism