Published:Updated:

ஐ.ஆர்.டி.ஏ. -ன் அதிரடி... பாலிசிதாரருக்கு என்ன பயன்..?

இரா.ரூபாவதி, படம்: பா.கார்த்தி.

ஐ.ஆர்.டி.ஏ. -ன் அதிரடி... பாலிசிதாரருக்கு என்ன பயன்..?

இரா.ரூபாவதி, படம்: பா.கார்த்தி.

Published:Updated:
##~##

புது பாலிசி எடுக்க விரும்பினால் அக்டோபர் மாதத்திற்கு முன்பே எடுத்துவிடுங்கள். அதன்பிறகு இன்ஷூரன்ஸ் பாலிசியில் அதிக மாற்றங்கள் வர உள்ளன. இதில் பாலிசிதாரர்களுக்கான பயன் மிகவும் குறைவாக இருக்கும் என்று சொல்கிறார் களே! இது உண்மையா? என்கிற கேள்வியை சில இன்ஷூரன்ஸ் நிறுவனங் களிடம் கேட்டோம்.

வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்ஷூரன்ஸ் பாலிசியில் அதிக மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியமான ஐ.ஆர்.டி.ஏ. இந்தப் புதிய மாற்றங்களினால் பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்று தெரிவித்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னென்ன நன்மைகள் பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும் என எல்.ஐ.சி.யின் வணிகப் பிரிவின் பிராந்திய மேலாளர் எம்.ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.  

''அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்திலும் பாலிசிதாரரின் ரிஸ்க் கவர் அதிகரிக்கப்படுகிறது. தற்போதுள்ள இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பெரும்பாலானவை முதலீட்டு நோக்கிலேயே உள்ளன. இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புக் காகத்தான். எனவே, இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் பெரும்பகுதி இனி ரிஸ்க்கை கவர் செய்யும் வகையில் இருக்கும். முதலீட்டு பகுதி குறைவாக இருக்கும்'' என்றவர், வேறு என்னென்ன

ஐ.ஆர்.டி.ஏ. -ன் அதிரடி... பாலிசிதாரருக்கு என்ன பயன்..?

மாற்றங்கள் வருகிறது என்பதையும் குறிப்பிட்டார்.

''இப்போது பாலிசி எடுத்த ஒரு வருடத்திற்குள் பாலிசிதாரர் தற்கொலை செய்து கொண்டால் குடும்பத்தினருக்கு  க்ளைம் கிடைக்காது. ஆனால், இனிமேல் இப்படி நடந்தால் செலுத்திய பிரீமியத்தில் 80 சதவிகிதம் வரை க்ளைம் பெற முடியும். இன்ஷூரன்ஸ் பாலிசிக்கும் சேவை வரி உண்டு. இந்த வரியை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே செலுத்தி வந்தன. பாலிசிக்கு போனஸ் தரும்போது இந்த வரிக்கான தொகையைப் பிடித்தம் செய்துவிடுவார்கள். ஆனால், இனிமேல் இந்த சேவை வரியை பாலிசிதாரர்களே செலுத்த வேண்டும். எனவே,  இனி பிரீமியத்துடன் சேவை வரி 3.4% செலுத்தவேண்டியிருக்கும்'' என்றவர், உத்தரவாத சரண்டர் மதிப்பு குறித்தும் விளக்கினார்.

''குறைந்தபட்ச சரண்டர் மதிப்பு காலம் என்பது தற்போது எல்லா பாலிசிகளுக்கும்

3 ஆண்டுகளாக இருக்கிறது. இனி குறுகிய கால (7 வருடம்) பாலிசிகளுக்கு ஒரு வருடமும், நீண்ட கால (20 வருடம்) பாலிசிகளுக்கு மூன்று வருடம் எனவும் சரண்டர் மதிப்பு காலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சரண்டர் செய்யப்படும் பாலிசிகளில் 30 சதவிகிதம் வரைதான் செலுத்திய தொகையைத் திரும்பப் பெறும் வகையில் இருந்தது. ஆனால், இனி 50%  வரை திரும்பப் பெற முடியும். உதாரணமாக, 20 வருட பாலிசியை 4 வருடத் தில் சரண்டர் செய்தால் 50% வரையும், அதே பாலிசியை 7-8-வது வருடத்தில் சரண்டர் செய்தால் செலுத்திய பிரீமியத்தில் 70% வரையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஐ.ஆர்.டி.ஏ. -ன் அதிரடி... பாலிசிதாரருக்கு என்ன பயன்..?

சில பாலிசிகளில் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை 2, 3 வருடங்களுக்கு அட்வான்ஸாகச் செலுத்தலாம். ஆனால், இப்போது ஐ.ஆர்.டி.ஏ. இதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, ஒரு பாலிசி ஆண்டிற்கான பிரீமியத்தை மட்டும்தான் அட்வான்ஸாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

தவறான தகவல்களைச் சொல்லி பாலிசியை விற்பனை செய்யும் ஏஜென்டின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். ஏஜென்ட் கமிஷன்  பாலிசி பிரீமியம் செலுத்தும் காலம் வரை பிரித்து தரும் வகையில் புதிய பாலிசிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன'' என்றார்.

இதேபோல ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பல புதிய நடைமுறைகளை ஐ.ஆர்.டி.ஏ. வகுத்துள்ளது. அது குறித்து யுனைடெட் இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஆர்.சிவக்குமாரிடம் கேட்டோம்.

''லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த 15 நாட்களில் அந்த பாலிசியை ரத்து செய்ய முடியும். இதுவரை இந்த வசதி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இல்லாமல் இருந்தது. இந்த ப்ரீ-லுக் பீரியட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் கொண்டு வரப்பட இருக்கிறது. பாலிசி பிடிக்கவில்லை என கேன்சல் செய்தால் பாலிசியின் பிரீமியத்தில் நிர்வாகச் செலவுகள்போக மீதமுள்ள தொகை பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும். சிகிச்சைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவமனைகளை இதுநாள்வரை டி.பி.ஏ.களே தேர்வு செய்து வந்தன. இனிமேல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், டி.பி.ஏ. இணைந்து இந்த வேலையைச் செய்யும் எனவும் ஐ.ஆர்.டி.ஏ. தெரிவித்துள்ளது'' என்றார்.

பாலிசிதாரர்களுக்கு நல்லது நடந்தால் சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism