Published:Updated:

பட்டையைக் கிளப்பும் பண்ணைப் பசுமை அங்காடிகள்...

பாதிக்கு பாதி மிச்சம்!

பட்டையைக் கிளப்பும் பண்ணைப் பசுமை அங்காடிகள்...

பாதிக்கு பாதி மிச்சம்!

Published:Updated:
##~##

ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்கும் காய்கறி விலைக்கு கடிவாளம் போட தமிழக அரசு கண்டுபிடித்த புதிய டெக்னிக் பண்ணைப் பசுமை காய்கறி அங்காடிகள். சென்னைவாசிகளில் பலருக்கும் இந்த அங்காடிகள் காய்கறி விலை உயர்வு பற்றிய கவலையைக் கொஞ்சம் மறக்கச் செய்திருக்கிறது. காரணம், வெளிச் சந்தையைவிட குறைந்த விலையில், பண்ணைப் பசுமை கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கிறது!

''கூட்டுறவு சங்கங்களால் விவசாயி களிடமிருந்து நேரடியாக உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், பீட்ரூட், முருங்கை, பச்சை மிளகாய், தேங்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. பொதுமக்களிடையே குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, 31 வகையான காய்கறிகள் விற்கப்பட்ட நிலையில் 41 வகையான காய்கறிகளாக உயர்த்தப்பட்டுள்ளன.  விலையைக் குறைத்து விற்பதால் அரசுக்கு நஷ்டம்தான் என்றாலும் அடித்தட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு விலை குறைத்து விற்கப்படுகிறது. மேலும், வெளி அங்காடிகளில் காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்தவும் இவ்வாறு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது'' என்கிறார் சென்னையின் புறநகரில் அமைந்திருக்கும் பண்ணைப் பசுமை கடையின் தலைமை அதிகாரி ஒருவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிமார்க்கெட்டில் சில காய்கறிகள்  குறைந்த விலையில் கிடைக்கும்போது, பண்ணைப் பசுமை கடைகளில் அதே காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே என அவரிடம் கேட்டோம்.

பட்டையைக் கிளப்பும் பண்ணைப் பசுமை அங்காடிகள்...

''அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் இந்தப் பட்டியலைப் பாருங்கள்'' என்றவர், வெளிமார்க்கெட்டுக்கும், பண்ணைப் பசுமை கடைகளுக்குமான அன்றைய விலைப்பட்டியல் ஒப்பீட்டை எடுத்துக் காட்டினார்.  

மேலும் தாம்பரம் - கிழக்கு, குரோம்பேட்டை, போரூர், பல்லாவரம், ஆலந்தூர் போன்ற 5 இடங்களிலுள்ள அங்காடிகள்

பட்டையைக் கிளப்பும் பண்ணைப் பசுமை அங்காடிகள்...

காஞ்சிபுரம் கூட்டுறவு மொத்த விற்பனைய கத்தின் கீழும், மாத்தூர், ஆர்.வி. நகர் ஆகிய 2 இடங்களிலுள்ள அங்காடிகள் வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழும் செயல்படுகின்றன.  அடையார், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களிலுள்ள அங்காடிகள் தொடக்க கூட்டுறவு பண்டகசாலை  மூலமாகவும்,  அண்ணா நகர், நந்தனம், கீழ்ப்பாக்கம், கோபாலபுரம், இந்திரா நகர் மற்றும் சூளைமேடு ஆகிய ஆறு இடங்களில்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடை களின் கீழ் என மொத்தம் 29 பண்ணைப் பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மயிலாப்பூர் மற்றும் கோயம்பேடு ஆகிய  இடங்களில் டி.யு.சி.எஸ். நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 2 நடமாடும் கடைகள் மூலமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

போரூரைச் சேர்ந்த சாந்தி, ''நான் பண்ணைப் பசுமை கடையின் தினசரி வாடிக்கையாளர், வெளிச்சந்தையைவிட விலை குறைவாக கிடைப்பதோடு, காய்கறிகள் ஃப்ரெஷ்-ஆக  உள்ளன'' என்றார் மகிழ்ச்சியுடன்.

பட்டையைக் கிளப்பும் பண்ணைப் பசுமை அங்காடிகள்...

நெற்குன்றத்தைச் சேர்ந்த உஷா, ''எங்கள் பகுதியில் பண்ணைப் பசுமை காய்கறி அங்காடி இல்லாததால்  போரூருக்கு எனது அம்மா வீட்டுக்கு வரும்போது, தேவையான காய்கறிகளை வாங்கி செல்வேன். வெளியில் உள்ள கடைகளில் 1,000 ரூபாய்க்கு வாங்கும் காய்கறிகளை பண்ணைப் பசுமை நுகர்வோர் அங்காடியில் 600 ரூபாயில் வாங்கிவிட முடிகிறது. இதனால் எனக்கு பாதிக்குப் பாதி பணம் மிச்சம்'' என்று சொல்லுபோது அவர் முகத்தில் முழுமையான மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.

சென்னை மற்றும் அதன் புறநகர்களில் தொடங்கி, இயங்கிவரும் இந்தக் கடைகள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.  தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இந்தப் பண்ணைப் பசுமை கடைகள் திறந்து நடத்த ஆரம்பித்தால் மக்கள் இன்னும் பெரிய அளவில் பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

- சே.புகழரசி,
படங்கள்: பொன். காசிராஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism