Published:Updated:

யூலிப் பாலிசி...

ஆழம் தெரிந்து காலை விடுங்கள்!

யூலிப் பாலிசி...

ஆழம் தெரிந்து காலை விடுங்கள்!

Published:Updated:

கேள்வி-பதில்

##~##

?யூலிப் பாலிசிகளில் முதலீடு செய்யும் போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மருது, தஞ்சாவூர்.  ஆர்.ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

''யூலிப் பாலிசிகள் அனைத்துமே நீண்ட கால முதலீடுகள். இதில் குறைந்தபட்சம்

10 ஆண்டுகளுக்கு பிரீமியம் கட்டவேண்டி இருக்கும். எனவே, எந்தெந்த தேவைக்கு (குழந்தை களின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம்) முதலீடு செய்கிறீர்கள் என்பதைத் தெளிவாகத் திட்டமிட்ட பிறகு யூலிப் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. குறைந்தபட்ச சரண்டர் மதிப்பு எவ்வளவு மற்றும் எத்தனை ஆண்டுகள், சரண்டர் கட்டணம், காப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். குறுகிய கால தேவைக்கு யூலிப் பாலிசிகள் ஏற்றவை அல்ல. வேறு வழியே இல்லை. இதில் முதலீடு செய்துள்ள பணத்தை எடுத்தால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நிலையில் மட்டும் இந்த பாலிசிகளை சரண்டர் செய்வது நல்லது. மேலும், இந்தவகை பாலிசியில் முதலீடு செய்யும்போது தொடர்ந்து பிரீமியம் செலுத்துவது முக்கியம். யூலிப் என்னும் குளத்தில் ஆழம் தெரிந்து காலைவிட்டால், சிக்கல் வரவே வராது!''

?என் அக்கா மெடிக்ளைம் பாலிசி ஒன்றை வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அந்தச் சமயத்தில் அவர் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். இடையில் இரண்டு நாட்கள் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் க்ளைம் பெற முடியுமா?

- சண்முகப்ரியா, சென்னை. கே.மாரியப்பன், மேலாளர், மெட்சேவ் ஹெல்த்கேர், சென்னை.

யூலிப் பாலிசி...

''எத்தனை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார் என்பது முக்கியமில்லை. உடல்நிலை சரியாகி வீட்டிற்கு வந்திருக்கலாம். அல்லது வேறு ஏதாவது நோயின் பாதிப்பால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். அது பிரச்னை இல்லை. 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தால் க்ளைம் பெற முடியும். எனவே, இரண்டு மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்ததற்கான விவரங்கள், பில், மருத்துவர் அறிக்கை ஆகியவற்றை க்ளைம் படிவத்துடன் இணைத்து கொடுத்து க்ளைம் பெறலாம்.''

?கோல்டு இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்துள்ளேன். இதில் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஏற்ப வருமானம் இருக்கும் எனச் சொன்னார்கள். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வாகச் செலவுகளுக்காக 1 சதவிகிதத்தைப் பிடித்துக்கொண்டார்கள். நான் தொடர்ந்து ஐந்து வருடம் முதலீடு செய்ய திட்டமிட் டுள்ளேன். எனவே, வருடத்திற்கு ஒரு சதவிகிதம் என மொத்த வருமானத்தில் 5% பிடித்துக்கொள்வார்களா?

- கிருஷ்ணன், வேலூர். பாலசுப்ரமணியன், ஃபண்ட் மேனேஜர், ஐ.டி.பி.ஐ. அசெட் மேனேஜ்மென்ட்.

யூலிப் பாலிசி...

''கோல்டு இ.டி.எஃப். திட்டத்தைப் பொறுத்தவரை, நிர்வாகக் கட்டணம் என்பது கட்டாயமாக இருக்கும். இதில் சில நிறுவனங்கள் 1.5 சதவிகிதம் வரைகூட நிர்வாகக் கட்டணம் வசூலிக்கின்றன. ஐந்தாண்டு என்கிறபட்சத்தில் மொத்த வருமானத்தில் 5% கட்டாயம் நிர்வாகக் கட்டணமாகப் பிடிப்பார்கள். நீங்கள் பிஸிக்கலாக தங்கம் வாங்கினாலும் அதைப் பாதுகாக்க இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள் அல்லது அதை ஒரு வங்கி லாக்கரில் வைத்து பாதுகாப்பீர்கள். இந்த இரண்டிற்கும் கட்டணம் உண்டு. மேலும், பிஸிக்கல் கோல்டு வாங்கும்போதும் விற்கும்போதும் சேதாரம் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தவகையில், இந்த நிர்வாகக் கட்டணம் பெரிய செலவு இல்லை.''

?என் மனைவி ஒரு நிறுவனத்தில் ஆலோசகராக இருக்கிறார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் கட்டணமாக வாங்குகிறார். இந்தத் தொகைக்கு 10 சதவிகித டி.டி.எஸ். பிடித்தம் செய்திருக்கிறார்கள். இதைத் திரும்பப் பெற முடியுமா?

- விநாயக மூர்த்தி, அரியலூர். சத்திய நாராயணன், ஆடிட்டர்.

''ரூபாய் 20,000 மேல் கட்டணமாக கொடுத்தால் வருமான வரி கட்டாயம் பிடித்தம் செய்யவேண்டும் என்பது சட்டம். அதேநேரத்தில், வரியாக கட்டிய பணத்தைத் திரும்பப் பெறுவது எளிது. அதாவது, உங்கள் மனைவியின் வருமானத்திற்கு வருமான வரித் தாக்கல் செய்து, அவர் வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்றால், பிடிக்கப்பட்ட டி.டி.எஸ். தொகையை ரீஃபண்டாக க்ளைம் செய்துகொள்ளலாம். உங்கள் மனைவி ஆலோசகராக இருக்கும் நிறுவனத்தில் டி.டி.எஸ். பிடிக்காமல் இருக்க, பான் எண்ணுடன், படிவம் 13-ஐ வருமான வரி அலுவலகத்தில் பூர்த்தி செய்துதர வேண்டும். அதன்பிறகு வருமான வரித் துறை, உங்கள் மனைவி ஆலோசகராக இருக்கும் நிறுவனத்திற்கு ஒரு சான்றிதழைக் கொடுக்கும். இதை நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் டி.டி.எஸ். பிடிக்கமாட்டார்கள்.''

யூலிப் பாலிசி...

?வீட்டில் வைத்திருக்கும் பணம் திருடு போனால் ஹவுஸ் ஹோல்டர் பாலிசியில் க்ளைம் பெற முடியுமா?

- மகாலிங்கம், கரைக்குடி. டி.நாகலட்சுமி, மூத்த மேலாளர், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி, சென்னை.

''பொதுவாக ஹவுஸ் ஹோல்டர் பாலிசியில் ரொக்கமாக வைத்திருக்கும் பணத்திற்கு கவரேஜ் இருக்காது. ஆனால், பாலிசி எடுக்கும்போது தினசரி செலவுகளுக்காக வீட்டில் எப்போதுமே பணம் வைத்திருப்போம் என்பதையும், அது எவ்வளவு தொகை என்பதையும் தெரிவித்துவிட்டால் க்ளைம் பெற முடியும். அதிகமான தொகை இருக்கும்போது அந்தப் பணத்திற்கு என்ன செலவு?, என்ன தேவை என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் தொகை என்பது தனிநபருடையதாக இருக்க வேண்டும். பிசினஸுக்காக வைத்திருக்கும் பணத்திற்கு க்ளைம் பெற முடியாது.''

யூலிப் பாலிசி...

?பங்குச் சந்தை சரிவில் உள்ள சமயத்தில் ஆப்பர்ச்சூனிட்டி ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடங்கலாமா?

- மணிகண்டன், திருவாரூர். அபுபக்கர், நிதி ஆலோசகர்.

''ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் என்பது ஏதாவது ஒரு ஃபண்டின் பெயரில் இணைந்து வருவதுதான். உதாரணத்துக்கு, கோல்டு ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் என்றால் தங்கத்தைப் பயன்படுத்தி லாபம்

யூலிப் பாலிசி...

பார்ப்பதாக இருக்கும். பங்குச் சந்தை சரிவில் உள்ள சமயத்தில் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுகளில்  மிட் கேப், டைவர்சிஃபைட் வகை உண்டு. இந்தவகை ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும். ஆனால், இந்தவகை ஃபண்டுகள் நீண்ட  கால அடிப்படையில் மட்டும்தான் பயன் அளிக்கக்கூடியது என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.''

?நான் சமீபத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளேன். அதில் என்னைப் பற்றிய விவரங்கள் சிலவற்றை தவறாக கொடுத்துவிட்டேன். அதை மாற்றம் செய்ய முடியுமா?

 - கணேசன், திருச்சி. ஆர்.ரவி, துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் புரோக்கிங் லிட்.

''நீங்கள் எந்தத் தகவலை தவறாக தந்துள்ளீர்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு முகவரி, நாமினி, பெயரில் எழுத்துப் பிழை என ஏதாவது இருந்தால் அதை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் பாலிசி எடுத்த இன்ஷூரன்ஸ் கிளைக்கு கடிதம் மூலமாக தெரிவிப்பது நல்லது. மது, புகைபழக்கம் போன்றவற்றில் மாற்றம் செய்யும்போது உங்களின் பிரீமியம் அதிகரிக்கும். அதே நேரத்தில் பாலிசியின் நிபந்தனைகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளன. எனவே, பாலிசி எடுக்கும்போது தகவல் அத்தனையும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism