Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

Published:Updated:

மஞ்சள்! (Turmeric)

அதிக வரத்து காரணமாக கடந்த வாரம் மஞ்சளின் விலை குறைந்தே வர்த்தகமானது. மஞ்சள் ஏலம் விடும் முக்கிய ஸ்பாட் சந்தைகளில் கையிருப்பு அதிகம் உள்ளது. மேலும், உள்நாட்டில் தேவைக் குறைவாகவே உள்ளதாலும், ஏற்றுமதி தேவையும் குறைந்துள்ளதையடுத்து வரும் வாரத்தில் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமாகும். அதேசமயம் ஏற்றுமதி மற்றும் பண்டிகைக் கால தேவைகளால் விலையிறக்கம் தடுக்கப்படலாம்.

அக்ரி கமாடிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஃப்.எம்.சி. (பார்வேர்டு மார்க்கெட் கமிஷன்) ஏப்ரல் 2014 மற்றும் அதற்கு பின் முடியும் கான்ட்ராக்ட்களுக்கு மஞ்சளின் ஈரப்பதத்தை 13-லிருந்து 12 சதவிகிதமாக குறைத்துள்ளது. மேலும், நடப்பில் உள்ள கான்ட்ராக்ட்களுக்கு விலையில் ஒரு சதவிகிதம் குறைத்துள்ளது. 2012-2013 வருடத்தில் மொத்த உற்பத்தி சுமார் 45 லட்சம் பைகளாகும் (1 பை என்பது 75 கிலோ). இதில் சுமார் 80,050 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும், இதில் 10 லட்சம் பைகள் இருப்பு உள்ளதாகவும் ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

ஏலக்காய்! (Cardamom)

ஸ்பாட் சந்தைகளில் வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரம் பெரிய ஏற்றத்தாழ்வு இல்லாமல் வர்த்தகமானது. ஏலக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கேரளாவில் தொடர்மழை காரணமாக ஏலக்காயின் தரம் குறைந்துள்ளது. தரத்தைப் பொறுத்தே விலையும் நிர்ணயிக்கப்படுவதால் இது விலையில் பிரதிபலிக்கும். இனி ஏற்றுமதி தேவை அதிகரித்தால் மட்டுமே விலையிறக்கம் குறையும். கடந்த 12-ம் தேதி அன்று 84 டன் வந்தது. ஸ்பாட் விலையாக 1 கிலோ ஏலக்காய் சராசரியாக ரூ.607 முதல் ரூ.914 வரை வர்த்தகமானது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மட்டும் 505 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுவே, கடந்த ஆண்டில் இதே காலத்தில் 198 டன் ஏற்றுமதி ஆனது.  வரும் நாட்களில் கேரளாவில் மழை இருக்கும் என இந்திய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!

மிளகு! (Pepper)

கடந்த வாரம் உற்பத்தி குறைந்து தேவை அதிகமாக இருந்ததால் மிளகின் விலை அதிகரித்து காணப்பட்டது. மிளகு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் வியட்நாம் ஸ்பாட் சந்தையில் அதிகத் தேவை காரணமாக 3% விலை அதிகரித்து வர்த்தகமானது. தற்போது தமிழ்நாட்டில் மிளகு 9,300 ஏக்கர் அளவில் உற்பத்தியாகிறது. இதையடுத்த 4 நான்கு வருடத்தில் 9,900 ஏக்கராக உயர்த்த ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா திட்டமிட்டுள்ளது. மலேசியாவின் ஏற்றுமதி இந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 14% அதிகரித்துள்ளது.    

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம்! (Jeera)

உள்நாட்டு தேவை காரணமாகவும், ஏற்றுமதி தேவை இருந்ததாலும் ஜீரகம் கடந்த வாரத்தில் சற்று விலை அதிகரித்து வர்த்தகமானது. மேலும், வரத்து குறைந்ததும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாகும்.  

சீனாவில் தேவை அதிகமாக இருப்பதால் வரும் வாரங்களில் இந்திய ஜீரகம் ஏற்றுமதி ஆவது அதிகரிக்கும். 2013-2014 நிதியாண்டில் 1 லட்சம் டன் ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில் நிலவிவரும் போர் கலவரத்தால் ஜீரகம் உற்பத்தி குறைந்துள்ளது. துருக்கியில் 7,000-8,000 டன் வரை உற்பத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

இது கடந்த வருடம் 8,000 முதல் 10,000 டன்னாக இருந்தது. சீனாவில் கடந்த ஆண்டு உற்பத்தியைவிட இந்த வருடம் 5,000 டன் வரை உற்பத்தி குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவில் போர்ச்சூழல் குறைத்தால் அது விலையேற்றத்தைத் தடுக்கும்.

சர்க்கரை! (Sugar)

அதிக வரத்து காரணமாக கடந்த வாரத்தில் சர்க்கரையின் விலை குறைந்து வர்த்தகமானது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து சர்க்கரை விலை உயர வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவில் நல்ல பருவமழை பெய்து வருவதால் கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

இதனால் சர்க்கரை விலை குறையும். இந்தியன் சுகர் மில்ஸ் அசோசியேஷன் செயற்கைகோள் மூலம் எடுத்த கணக்கெடுப்பில், அறுவடை செய்ய இருக்கும் கரும்பு உற்பத்தி அளவின் பரப்பளவு சுமார் 51.50 லட்சம் ஏக்கர். இது கடந்த வருடத்தில் 52.30 லட்சம் ஏக்கராக இருந்தது. 2013-14-ல் மொத்த உற்பத்தி 237 லட்சம் டன்னாக இருக்கும் என தெரிகிறது. இதுவே, கடந்த ஆண்டு 250 லட்சம் டன்னாக இருந்தது. இந்த வருட தேவை 235 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கையிருப்பு அதிகமாகும்.

- சே.புகழரசி

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism