ஒவ்வொரு ஆண்டும் எப்போது நடந்தது ஏ.ஜி.எம். என்று மற்றவர்கள் கேட்டு தெரிந்துகொள்கிற அளவுக்குத்தான் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் இந்தியா லிமிடெட் (சுருக்கமாக எஃப்.டி.ஐ.எல்) நிறுவனத்தின் ஏ.ஜி.எம். நடக்கும். ஆனால், கடந்த வாரம் சென்னை வாணி மஹாலில் நடந்த இந்நிறுவனத்தின் ஏ.ஜி.எம். கூட்டத்தினால் தி.நகரே கலகலத்துப்போனது.

என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்சில் பணம் போட்ட முதலீட்டாளர்கள் எல்லாம் கூட்டமாகக் கிளம்பிவந்து பணத்தைத் திரும்பத் தரச் சொல்லி மீட்டிங் ஹால் முன்பு கோஷம்போட, என்ன செய்து சமாளிப்பது என்று தெரியாமல் திணறியது எஃப்.டி.ஐ.எல். நிர்வாகம்.

என்.எஸ்.இ.எல். என்பது எஃப்.டி.ஐ.எல். நிறுவனத்தின் துணை நிறுவனம். என்.எஸ்.இ.எல்.-யில் பணத்தைப் பறிகொடுத்த முதலீட்டாளர்கள், எஃப்.டி.ஐ.எல்-ன் தலைவர் ஜிக்னேஷ் ஷா அந்த நிறுவனத்தின் ஏ.ஜி.எம். மீட்டிங்கில் அவசியம் கலந்துகொள்வார் என்பதைத் தெரிந்துகொண்டு திரண்டு வந்து விட்டார்கள்.

பொதுவாக ஏ.ஜி.எம். மீட்டிங் நடப்பதற்கு முன்பே ஆண்டு நிதி நிலை அறிக்கை முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கை, பல முதலீட்டாளர்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று மீட்டிங் வாசலில் கூறிக்கொண்டிருந்தார்கள். மேலும், ஆடிட் நிறுவனம் டிலாய்ட் தனது சான்றிதழைத் திரும்ப வாங்கிக் கொண்டது முதலீட்டாளர்களை மிகவும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு மிகச் சில முதலீட்டாளர்களே தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள, டைம் முடிந்துவிட்டது என்று சொல்லி, மற்ற முதலீட்டாளர்களின் பெயரை பதிவு செய்ய மறுத்துவிட்டார்களாம். இதனால்தான் எங்களால் மீட்டிங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்கள் வெளியில் கோஷம் போட்டபடி நின்றுகொண்டிருந்த முதலீட்டாளர்கள்.

பதிவு செய்தவர்களில் இருபதுக்கும் குறைவான முதலீட்டாளர்களே ஏ.ஜி.எம். மீட்டிங் நடக்கும் அரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள். மற்றபடி அந்த நிறுவனத்தின் ஊழியர்களே

பங்குதாரர்கள் போல அரங்கத்தை ஆக்கிரமித்திருந்தார்கள் என்று மீட்டிங்குக்கு சென்ற முதலீட்டாளர்கள் கூறினார்கள். இதனால் வெறுப்பாகிப்போன முதலீட்டாளர்கள் பல்லைக் கடித்தபடி உட்கார்ந்து இருந்தார்கள்.

''ரூ.1,100 க்கு உங்கள் பங்கை வாங்கினேன். இன்றைக்கு 200 ரூபாய்க்கு கீழே போய்விட்டது. நான் அடைந்த நஷ்டத்திற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்'' - இப்படி ஒவ்வொரு முதலீட்டாளரும் ஒவ்வொரு கேள்வி கேட்க, ஜிக்னேஷ் ஷாவிடமிருந்து எந்தத் தெளிவான பதிலும் இல்லையாம்.

இந்தக் கூட்டம் முடிந்தபிறகு என்.எஸ்.இ.எல். முதலீட்டாளர்களைத் தனியாக அழைத்து பேசினார் ஜிக்னேஷ் ஷா. ஆறு மாதங்களுக்குள் உங்கள் பணம் திரும்பக் கிடைப்பதற்கான வழிகளைச் செய்கிறேன் என்றார். ஆனால், அதற்கான எந்தவிதமான தெளிவான திட்டத்தையும் அவர் வெளியிடவில்லை. இ-சீரிஸ் தங்கம், வெள்ளி போன்றவைக் குறித்து சில முதலீட்டாளர்கள் கேள்வி கேட்டதற்கு, ஒரு கிலோவுக்கு குறைவாக வாங்கி வைத்தவர்களுக்கு 15 நாட்களில் டெலிவரி செய்வோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கூடியிருந்த முதலீட்டாளர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்க, ''நானும் உங்களைப்போல் பாதிக்கப்பட்டவன் தான். நானும் பணம் போட்டுள்ளேன்'' என்று வருத்தமான முகத்துடன் சொன்னதைக் கேட்டு, முதலீட்டாளர்கள் சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் தவித்தனர்.

கிட்டத்தட்ட 5,500 கோடி ரூபாய் 23 பேரிடம் முடங்கியுள்ளது. ஆனால், இந்த 23 நிறுவனங்களும் கிடங்கில் பொருள் இருப்பதாகச் சொல்லித்தான் பணம் வாங்கியுள்ளது. மேலும், இந்தப் பொருட்களைக் காண்பித்து கடனும் வாங்கியுள்ளது. கடனை சரியாகச் செலுத்தாததால் அந்தப் பொருட்களை வங்கி கையகப்படுத்திவிட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்காமலே போகிற அளவுக்கு நிலைமை சிக்கலாகி உள்ளது.

என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்சில் தென் மாநிலங்களைச் சேர்ந்த புரோக்கரேஜ் நிறுவனங்களைவிட வட இந்திய நிறுவனங்களே அதிக அளவில் பணத்தைப் போட்டிருக்கின்றன. இந்தியன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் 1,170.10 கோடி இதில் முதலீடு செய்துள்ளது. இந்த அமைப்பில் முக்கிய புரமோட்டரே ஜிக்னேஷ் ஷாதான்.

சாதாரண முதலீட்டாளர்கள் புரோக்கிங் நிறுவனத்தின் மூலம் இதில் முதலீடு செய்திருப்பது ஒருபக்கமிருக்க, அரசுத் துறை நிறுவனமாக எம்.எம்.டி.சி.யும் 220 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது ஆச்சர்யமான விஷயம்தான்.

இந்த ஏ.ஜி.எம். மீட்டிங்கில் கலந்துகொண்ட முதலீட்டாளர்களுக்கு இனிப்பு பாக்கெட் வழங்கப்பட்டது. அதில் இருந்தது லட்டுவா அல்லது அல்வாவா என்றுதான் தெரியவில்லை.

- இரா.ரூபாவதி,
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்.

முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா?

என்.எஸ்.இ.எல் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா என சென்னையைச் சேர்ந்த ஒரு ஆடிட்டரிடம் கேட்டோம். ''என்.எஸ்.இ.எல் என்பது சட்டரீதியாக லிமிடெட் லையபிலிட்டி உள்ள நிறுவனம் என்பதே உண்மை. எக்ஸ்சேஞ்சை சட்டரீதியாக கலைக்கவும் நாட்டின் சட்டத்தை மீறி செய்த வியாபாரத்திற்காக 'லிப்டிங் த கார்ப்பரேட் வீய்ல்’ என்ற பிரிவை பயன்படுத்தி, புரமோட்டர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சொத்துக்களை விற்று நிலுவைத் தொகையை திருப்பித் தரக் கேட்டும் நீதிமன்றத்துக்குப் போக வழி இருக்கிறது.

இதனைச் செய்தால் ஜிக்னேஷ் ஷாவின் எஃப்.டி.ஐ.எல். முதலீடுகள் மற்றும் சொத்துக்களை கைப்பற்றி அதை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை முதலீட்டாளர்களுக்கு செட்டில் செய்ய முடியும். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் (சட்டரீதியாக) வரும் என்பதால் தேவைப்பட்டால் இதற்கென்று ஒரு அவசரச் சட்டம்கூட கொண்டுவந்து (ஹர்ஷத் மேத்தாவின் சந்தை ஊழல் வழக்கை விசாரிக்க தனி கோர்ட் நிறுவ சட்டம் கொண்டுவந்தது போல்) சொத்துக்களை கையகப்படுத்தலாம். ஆனால், இந்த ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு துணிச்சல் இருக்கிறதா என்பதே கேள்வி'' என்றார் அவர்.