வந்ததும் வராததுமாகப் பரபரத்தார் ஷேர்லக். அவர் இப்படி பரபரத்தால், நிறைய சேதிகள் அவர் ஜோபிக்குள் இருக்கிறது என்று அர்த்தம். அவிழ்த்துவிடும்படி ஆணையிட்டோம்.

புரோக்கர்களின் பேரமைதி!

எஃப்.டி.ஐ.எல்-ன் ஏ.ஜி.எம். மீட்டிங் நடந்தபோது திரண்டுவந்து கோஷம்போட்ட பலரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்தான். நம்மூரில் சென்னையில் உள்ள சில புரோக்கிங் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு இ-சீரிஸில் பணத்தை விட்டிருந்தாலும், போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ளவில்லை. என்.எஸ்.இ.எல். நிர்வாகத்துடன் எப்படியாவது பேசி பணத்தை வாங்கிவிடவேண்டும் என்பதற்காகவே இத்தனை தூரம் அமைதி காக்கிறார்களாம்.

இதற்கிடையே என்.எஸ்.இ.எல். பற்றி அதிகார வர்க்கம் சொன்ன கருத்தைக் கேட்டு அதிர்ந்துபோய்க் கிடக்கிறார்களாம் முதலீட்டாளர்கள். இத்தனை நாளும் ஆக்ஷன் எடுப்போம் என்று சொல்லிவிட்டு, இப்போது வேறு மாதிரி பிளேட்டை போடுகிறார்கள் எனில், இதில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

ப்ரீஸ் ஆன எம்.சி.எக்ஸ்!

எம்.சி.எக்ஸ். பங்குகளை வாங்கவேண்டாம் என்று எஃப்.ஐ.ஐ.களுக்கு ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் திட்டத்தின் கீழ் எம்.சி.எக்ஸ். பங்குகளில் எஃப்.ஐ.ஐ.களின் முதலீட்டு வரம்பு நிறைவு பெற்றுவிட்டதை அடுத்தே ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனப் பங்கில் எஃப்..ஐ.ஐ. முதலீடு சுமார் 38.40% அளவுக்கு உள்ளது. எஃப்.டி.ஐ.எல். பிரச்னையால் இந்தப் பங்கின் விலை சரிந்தாலும் எஃப்.ஐ.ஐ.கள் மட்டும் கொஞ்சம்கூட பயப்படாமல் இதில் முதலீடு செய்வது ஆச்சர்யம்தான்.

பல்டி அடித்த பாட்டியா!

டாடா சன்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சில நாட்களுக்கு முன்பு கத்திக் குவித்த அருண் பாட்டியா, இப்போது டாடாவுடன் மீண்டும் ராசியாகிவிட்டார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடனான ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று பல்டி அடித்திருக்கிறார் பாட்டியா. இப்போது இருக்கும் விமான நிறுவனங்கள் எல்லாம் தடுமாறி, அவற்றின் நெட்வொர்த் ஜீரோ என்கிற நிலைக்குச் சென்றுகொண்டிருக்க, டாடா நிறுவனம் மட்டும் ஏர் ஏசியாவுடனும் சிங்கப்பூருடனும் எப்படி தைரியமாக ஒப்பந்தம் போடுகிறது என்று தெரியாமல் முழிக்கிறார்கள் பலர். பேசாமல் ஏர் இந்தியாவைத் தூக்கி மீண்டும் டாடாவிடமே தந்துவிடலாம்போல!

எஸ்கேப் எஸ்.கே.எஸ்.!

எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ் பங்கின் விலை மீண்டும் இறங்க ஆரம்பித்திருக்கிறது. முடிந்த காலாண்டில், நிகர இழப்பிலிருந்து லாபப் பாதைக்குத் திரும்பியதால் பங்கின் விலை உயரத் தொடங்கியது. இந்நிலையில் சி.எல்.எஸ்.ஏ. (மொரீஷியஸ்). நிறுவனம் அண்மையில் இதன் 51.28 லட்சம் பங்குகள் ஓப்பன் மார்க்கெட்டில் விற்றிருக்கிறது.

செப்டம்பர் மாத ஆரம்பத்தில் செகியூயா கேப்பிட்டல் இந்தியா 15 லட்சம் பங்குகளையும், எஸ்.கே.எஸ். நிறுவனரும் முன்னாள் தலைவருமான விக்ரம் அகுலா 9 லட்சம் பங்குகளையும் விற்றுள்ளனர். அந்த வகையில் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் புதிய முதலீட்டை மேற்கொள்ளாமல் உஷாராக இருப்பது நல்லது.

கண்டிஷனில் 11 பங்குகள்!

முதலீட்டாளர் பாதுகாப்பு நடவடிக்கையாக 11 பங்குகளை வழக்கமான வர்த்தகப் பிரிவி லிருந்து நிபந்தனைக்கு உட்பட்ட வர்த்தகப் பிரிவுக்கு மாற்ற பங்குச் சந்தைகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது. தாக்கர் அண்டு கம்பெனி, வால்டர் லீஸிங் அண்டு ஃபைனான்ஸ், பெட்ரோ லெதர் இண்டஸ்ட்ரீஸ், மிப்சோ சீம்லெஸ் ரிங்க்ஸ் குஜராத், அனுகிரஹா ஜுவல்லர்ஸ், அர்டெக் பவர் புராடக்ட்ஸ், பாக்யஸ்ரீ லீஸிங் அண்ட் ஃபைனான்ஸ், கே.டி.ஜே. ஹாலிடேஸ்கேப்ஸ் அண்டு ரிசார்ட்ஸ், சத்யா மைனர்ஸ் அண்டு டிரான்ஸ்போர்டர்ஸ், பாஸ்டன், டெக்நவ்சிஸ், அர்னால்டு ஹோல்டிங்ஸ் போன்றைவை அந்த நிறுவனங்களாகும், ஜாக்கிரதை!

செல்போனில் மூன்றாம் அணி!

இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதலிடத்தில் ஏர்டெல்-ம் இரண்டாம் இடத்தில் வோடஃபோனும் இருக்கின்றன. இந்நிலையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உருவாக டாடா டெலி, சிஸ்டெமா, ஏர்செல் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து, புதிய நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறதாம்!

இன்னும் எகிறும் சி.ஏ.டி.!

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் 2013-14-ல் ஆயில் மானியம் 0.1-லிருந்து 0.4% அதிகரிக்கும் என்கிறது இந்தியா ரேட்டிங்ஸ். ஜி.டி.பி-ல் நிதிப் பற்றாக்குறை 5%-த்துக்கும் அதிகமாக உயரும் என ஃபிட்ச் நிறுவனம் எச்சரித்துள்ளது.