மிட் அண்டு ஸ்மால் கேப் பங்குகளின் விலை கடந்த சில ஆண்டுகளில் ஏகத்துக்கும் இறங்கிய நிலையில், அப்பங்குகள் வாங்கக்கூடிய கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கின்றன. இந்தப் பங்குகளில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் கொண்டவையாக இருந்தாலும் பொருளாதாரம் மீண்டு வருகிற சமயத்தில் லாபத்தையும் அள்ளித் தருபவை. இந்தவகை பங்குகளில் நாமே நேரடியாக முதலீடு செய்வதைவிட, மிட் அண்டு ஸ்மால் கேப் ஃபண்டுகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வதன்மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

ரிஸ்கும் ரிவார்டும் கலந்தது இந்தவகை ஃபண்டுகள். பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பெரும்பகுதியை லார்ஜ் கேப் பங்குகளிலும், ஒரு சிறிய பகுதியை மிட் அண்டு ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தே இந்தவகை ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும் (பார்க்க அட்டவணை 1). அதையும் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்வது உத்தமம். ஆனால், பொறுமை இல்லாதவர்களும் ஒவ்வொரு வருடமும் நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களும் இந்த ஃபண்டுகள் பக்கம் வரவே வேண்டாம்.

மிட் அண்டு ஸ்மால் கேப் கேட்டகிரியில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஃபண்டுகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட சில ஃபண்டுகளே தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நாம் கீழ்க்கண்ட ஃபில்டர்களைப் பயன்படுத்தினோம்.

1. ரூ.200 கோடிக்கு மேல் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு இருக்கவேண்டும்; 2. ஐந்து ஆண்டுகளுக்குமேல் திட்டம் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்; 3. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கு 10 சதவிகிதத்திற்கு மேல் வருமானம் தந்திருக்க வேண்டும்; 4. கடந்த ஒரு வருடத்தில் மற்ற மிட் அண்டு ஸ்மால் கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிட்டால் அதிகமான நஷ்டத்தைத் தந்திருக்கக் கூடாது.

இப்படி நாம் ஃபில்டர் செய்தபிறகு நமக்குக் கிடைத்த ஃபண்டுகள் 10 (பார்க்க அட்டவணை 2). இந்தப் பத்திலிருந்து எனக்கு பரிட்சயமான, நல்ல வருவாயைத் தரும் என்று நான் நம்பக்கூடிய மூன்று ஃபண்டுகளைப் பற்றி இதோ:

ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி: இந்த ஃபண்ட் கிட்டத்தட்ட 23.50 சதவிகிதத்தை மிகப் பெரிய மற்றும் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. மீதியை நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. தரமான நிறுவனப் பங்குகளை தனது போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது. இந்த ஃபண்டில் எஸ்.ஐ.பி. மூலமாக தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ டிஸ்கவரி ஃபண்ட்: இந்த ஃபண்ட் ரூ.2,600 கோடிக்கு மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. 30 சத விகிதத்திற்கு மேலாக மிகப் பெரிய மற்றும் பெரிய நிறுவனப் பங்குகளிலும், மீதியை நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. 2006-லிருந்து 2008 வரை இந்த ஃபண்டின் செயல்பாடு சுமாராக இருந்தது. கடந்த சில வருடங்களாக ஐ.சி.ஐ.சி.ஐ. ஃபண்ட் நிறுவனத்தில் உள்ள பல ஃபண்டுகள் நன்றாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.டி.எஃப்.சி. மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்: ஹெல்த்கேர், ஃபைனான்ஷியல், கெமிக்கல்ஸ், டெக்னாலஜி, மற்றும் இன்ஜினீயரிங் துறைகள் இதன் டாப் ஹோல்டிங்-ஆக உள்ளது. நிஃப்டி 50 குறியீட்டுடன் ஒப்பிடும்போது, தொடர்ச்சியாக நன்றாகச் செயல்பட்டு வருகிறது. சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், இப்கா லேபாரட்டரீஸ், மைண்ட் ட்ரீ போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.