இனி பங்குகளை மட்டுமல்ல, இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் டீமேட் என்னும் எலெக்ட்ரானிக் வடிவத்தில் வைத்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. இதுபற்றி விளக்கமாக நமக்கு எடுத்துச் சொன்னார் சி.டி.எஸ்.எல். நிறுவனத்தின் சென்னை பிரிவின் மேலாளர் ஏ.ஆர்.வாசுதேவன்.

''ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் பலவகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகம் செய்கின்றன. பாலிசிதாரர்களும் பல சந்தர்ப்பங்களில் பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கிறார்கள். இப்படி எடுக்கும் பாலிசிகள் சிலவற்றில், இரண்டு, மூன்று முறை பிரீமியம் கட்டிவிட்டு, அந்த பாலிசியை அப்படியே மறந்துவிடுகிறார்கள். பாலிசி எடுத்த விவரத்தை சிலர் குடும்பத்து உறுப்பினர்களிடம் சொல்லிக்கூட இருக்கமாட்டார்கள். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமலே போகும். இதனால் க்ளைம் செய்ய முடியாமலே போகும்.

இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வுதான், இப்போது வந்திருக்கும் இந்த எலெக்ட்ரானிக் வடிவத்தி லான இன்ஷூரன்ஸ் பாலிசிகள். லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மட்டும்தான் இந்த டீமேட் வடிவத் தில் இப்போது எடுத்துக்கொள்ள முடியும். ஜெனரல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை இந்த டீமேட் வடிவத்தில் எடுத்துக்கொள்ள முடியாது.

பாலிசிதாரர்கள் இந்த எலெக்ட்ரானிக் வடிவத்திலான கணக்கை இலவசமாக ஆரம்பித்துக் கொள்ளலாம். இதை ஐ.ஆர்.டி.ஏ.வால் அனுமதிக்கப்பட்ட என்.எஸ்.டி.எல். டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட், சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் டெபாசிட்டரி, ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் புராஜெக்ட், கேம்ஸ் ரெப்பாசிட்டரி சர்வீஸ், கார்வி இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி ஆகிய நிறுவனங்களின் கீழ் இயங்கும் முகவர்களின் மூலமாக இன்ஷூரன்ஸ் டீமேட் கணக்கை துவக்கிக்கொள்ளலாம்.

பங்குச் சந்தைக்கான டீமேட் கணக்கைப் போல, ஒருவர் பல இன்ஷூரன்ஸ் டீமேட் கணக்கை ஆரம்பிக்க முடியாது. ஒரு நபரின் பெயரில் ஒரு கணக்குதான் ஆரம்பிக்க முடியும். இதற்கு கே.ஒய்.சி. படிவம் கட்டாயம் தரவேண்டும். 16 இலக்க டீமேட் எண் தரப்படும். இந்த எண்ணை வைத்து அனைத்து பரிமாற்றங்களும் நடக்கும். இனிமேல் எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கு இந்த டீமேட் எண் தரப்படும்.

இந்த டீமேட் கணக்கில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எந்த நிறுவனத்தில் எடுத்திருந்தாலும் அது என்ன வகை பாலிசி, எவ்வளவு கவரேஜ், பிரீமியம் எப்போது செலுத்தவேண்டும்?, பிரீமியம் தொகை எவ்வளவு, நாமினி யார்?, பாலிசி முதிர்வடையும் தேதி, பாலிசியின் தற்போதைய நிலை என்ன? என அனைத்து தகவல்களும் இருக்கும்'' என்றவர், இந்த

இ-பாலிசிகள் எப்படி செயல்படுகிறது என்பதுகுறித்து அவரே தொடர்ந்து விளக்கினார்.

''எலெக்ட்ரானிக் வடிவத்தில் உள்ள பாலிசியை எடுத்திருக்கும் அனைவருக்கும் பிரீமியம் செலுத்தும் தேதிக்கு ஒருவாரம் முன்பாகவே எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். இதில் எந்த தேதியில் எவ்வளவு பிரீமியம் செலுத்தவேண்டும் என்பது போன்ற தகவல் இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை பாலிசிகள் குறித்த அனைத்து தகவல்களும் அறிக்கையாகத் அனுப்பப்படும். இத்துடன் டீமேட் எண்ணை அடிப்படையாக வைத்து, ஒருவருக்கு யூஸர் ஐ.டி., பாஸ்வேர்டு ஆகியவற்றைத் தந்துவிடுவோம். இதைப் பயன்படுத்தி அனைத்து வகையான தகவல்களையும் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.

ஒரு டீமேட் நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை எனில், புதிய கணக்கு ஆரம்பித்து ஏற்கெனவே உள்ள கணக்கின் பாலிசி விவரத்தைப் புதிய கணக்குக்கு மாற்றிக்கொள்ளலாம். அனைத்து பாலிசிகளும் புதிய கணக்கு எண்ணிற்கு மாற்றப்படும். இதனால் பாலிசிப் பத்திரம் இனி பேப்பர் வடிவில் தரமாட்டார்கள் என்பதால் அதைக் கருத்தாக பாதுகாக்கவேண்டிய அவசியமில்லை!

விரைவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள், ஏற்கெனவே எடுத்த லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் டீமேட் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியும்'' என்றார்.

இன்ஷூரன்ஸ் டீமேட் கணக்கு விவரங்களை இனியாவது நம் குடும்ப உறுப்பினர்களுடனும் பகிர்ந்துகொள்வோமாக!

- இரா.ரூபாவதி.