எதிர்காலத்தை தீர்மானிக்கும்
அணுகுமுறை வித்தியாசங்கள்!

மத்திய வர்க்க அல்லது வசதி படைத்த குடும்பத்துக் குழந்தைகளின் பெற்றோரும்... ஏழைக் குழந்தைகளின் பெற்றோரும் கொண்டிருக்கும் பார்வை வித்தியாசங்களை ஆனெட் லாரேவ் ஆராயப் புகுந்தது பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு உதாரணம் இப்போது...

அலெக்ஸ் வில்லியம்ஸ் என்கிற ஒன்பது வயதுச் சிறுவனும் அவனுடைய அம்மா கிறிஸ்டினாவும் டாக்டரிடம் செல்கிறார்கள். வில்லியம்ஸ் குடும்பம் மிகவும் பணக்காரக் குடும்பம்.

'அலெக்ஸ், டாக்டரிடம் என்னென்ன கேள்விகளெல்லாம் கேட்கலாம் என்று யோசித்து விட்டாயா?'' என்று காரில் போகும்போதே கிறிஸ்டினா கேட்கிறார். ''நீ என்னவெல்லாம் நினைக்கிறாயோ அதைப் பற்றியெல்லாம் அவரிடம் கேள். சங்கோஜப்படாதே. நீ என்ன வேண்டுமென்றாலும் கேட்கலாம்!' என்று அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லாதபடி தயார்படுத்துகிறார் அந்தத் தாயார்.

அலெக்ஸ் ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு, 'நான் புதிய 'டியோடெரண்ட்’ உபயோ கிப்பதால் எனது அக்குளில் சிறு, சிறு பொறிகள் வந்திருக்கின்றன. அதுபற்றிக் கேட்கப் போகிறேன்'' என்று சொல்ல... இதற்கு கிறிஸ்டினா, ''நிஜமாகவா? உன்னுடைய புதிய டியோடெரண்ட்டில் அப்படி ஒரு பிரச்னையா?'' என்று கேட்டுவிட்டு, ''அப்படியானால் கட்டாயம் நீ இதுபற்றி டாக்டரிடம் கேட்க வேண்டும்' என்று ஊக்கப்படுத்துகிறார்.

லாரேவ் மேற்கொண்டு நடந்ததாகச் சொல்லுவது...

. அவன் டாக்டரைச் சந்திக்க தன் அம்மாவின் துணையோடு சென்றாலும், அங்கே தானாக கேள்வி கேட்டு தன்னையும் இதன் மூலம் நிலைநிறுத்திக் கொள்ளும் கலையை அறிந்தே செல்கிறான். அவர்கள் டாக்டரைச் சந்தித்தனர். அவருக்கு வயது நாற்பதுகளின் ஆரம்பத்திலிருக்கலாம். அவர் அலெக்ஸைப் பார்த்து ''நீ உயரத்தில் 95 பர்சன்டைல் இருக்கிறாய்'' என்றார். உடனே அவரை இடைமறித்து, ''என்ன சொன்னீர்கள்?'' என்று கேட்கிறான். டாக்டர், ''இதற்கு அர்த்தம் என்னவென்றால், பத்து வயதில் உள்ள சிறுவர்களில்... நீ 95 சதவிகிதமானவர்களைவிட கொஞ்சம் அதிக உயரமாகவே இருக்கிறாய்'' என்றார்..
உடனே அலெக்ஸ், ''எனக்கு 10 வயதில்லை'' என்றதும்... டாக்டர், ''உனக்குத் தற்சமயம் 9 வருடம் 10 மாதம் ஆகிறது. ஆனால், அவர்கள் அட்டவணையில் குறிப்பதற்காக அதற்கு அருகில் முழுமையான வருடமான 10-ஐ குறிப்பிட்டிருக்கின்றனர்'' என்று விளக்குகிறார்.

எவ்வளவு எளிதாக அலெக்ஸ் டாக்டரை இடைமறித்து பேசினான் என்று பாருங்கள். இது அவனுக்குள்ள உரிமை என்று உணர்த்தப்பட்டுள்ளது. அவனுடைய அம்மா, அதிகாரம் உள்ளவர்கள் மத்தியில் அவன் தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் அவனுக்கு இதற்கு அனுமதியளித்தார்.

டாக்டர், அலெக்ஸின் பக்கம் திரும்பி, ''இப்பொழுது மிகவும் முக்கியமான கேள்வி. நான் உன்னை உடல்ரீதியாக பரிசோதனை செய்வதற்கு முன்பு ஏதாவது கேள்விகள் இருக்கிறதா?'' என்றார்.

அலெக்ஸ், ''ஆமாம்... ஒரேஒரு கேள்வி. எனக்கு இங்கு சிறு, சிறு பொறிகளாக இருக்கிறது'' என்று தன் அக்குள் பகுதியைக் காட்டி பெரிய மனுஷன்போல பேசினான். மேற்கொண்டும் அதுகுறித்த டாக்டரின் கேள்விகளுக்கு அவனேதான் விளக்கங்கள் சொன்னான். லாரேவ் இதுபற்றி கூறுகையில், ''இந்த மாதிரியான ஒரு பளீரென்ற கருத்துப் பரிமாற்றம் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் மிகவும் அமைதியாகவும், பணிவடக்கத்துடனும் ஒருவித தயக்கத்துடனும் இருப்பதையே நான் கண்டேன்'' என்கிறார். அலெக்ஸ் தன்னால் கேள்விகள் கேட்க முடியும், அதற்கான உரிமை இருக்கிறது என்று தாயார் மூலம் தெரிந்துகொண்டதால், டாக்டரின் முழு கவனமும் தன்மீது படும் அளவுக்கு பார்த்துக் கொண்டான்' என்றும் லாரேவ் விளக்குகிறார்.

இதன் விளைவு, அலெக்ஸ் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டான். பெரியவர்களின் கவனம் தன்மீது படும்படியும் பார்த்துக் கொண்டதே இதற்குக் காரணம். இதுதான் ஒருங்கிணைந்த வளர்ப்பு முறையின் செயல்திட்டம் (ஷிtக்ஷீணீtமீரீஹ்)! அவன் தன்னை பிஞ்சில் பழுத்த கேஸாக காட்டிக் கொள்ளவில்லை. அவன் தனது பெற்றோர்களிடம் எப்படி தயக்கமின்றி சகஜமாக நடந்து கொள்வானோ... அதேபோல் டாக்டரிடமும் நடந்துகொள்ள அவனால் முடிந்தது. இதனால், அவன் நினைத்த தீர்வையோ, ஆலோசனையையோ அடைவது அவனுக்கு எளிதாக இருந்தது.

கறுப்பினம் - வெள்ளையினம் என்ற பாகுபாடெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது. அலெக்ஸ் என்னவோ கறுப்பினத்தைச் சேர்ந்த சிறுவன்தான். தானாகவே முயற்சியெடுத்து விரும்பியபடி 'கொயர்' குழுவில் சேர்ந்து பாடிய கேத்தி பிரிண்ட்டல் வெள்ளை இனத்தைச் சேர்ந்த சிறுமி! ஆக, இது மரபு வழி வருவதில்லை. இதில் நிறவேற்றுமை தொடர்பான ஏற்ற இறக்கங்களுக்கும் இடமில்லை. இது ஒரு பண்பாட்டு அனுகூலம்.

இந்த 'வகுப்பு’ (மத்தியதர மற்றும் ஏழ்மை) மீதான அனுகூலங்களைப் பற்றி தொடர்ந்து பேசும்போது, ''அலெக்ஸ், அந்த சிறுமி கேத்தி பிரிண்ட்டலைவிட நடைமுறை புத்திசாலித் தனத்தில் சற்று உயரத்தில் இருக்கிறான். கூடவே அவன் கேத்தியைவிட வசதி படைத்தவன், அதனால் அவனால் நல்ல பள்ளிக் கூடத்திற்கும் செல்ல முடிகிறது. அந்தப் பள்ளியிலும் தனக்கு உள்ள 'அதிகாரப்பூர்வமான உரிமை’யை தைரியமாக அவனால் நிலைநாட்டி, மேலும்மேலும் தனக்கான நன்மைகளை அவனால் அடைய முடிகிறது'' என்று சுட்டிக் காட்டுகிறார் லாரேவ்.

கடந்த அத்தியாயங்களில் நாம் கண்ட கிறிஸ் லாங்கன் - ஓபன்ஹெமர் ஆகிய மேதைகளின் அணுகுமுறையில் உள்ள வித்தியாசங்களின் பின்னணி இப்போது புரிகிறதா?

கிறிஸ் லாங்கனின் இளமைப் பருவம் மிகக் கடுமையான ஏழ்மையிலேயே கழிந்தது என்பதை முன்பே பார்த்தோம். அதுவே, மற்றொரு மேதாவியான ஓபன்ஹெமர்..? இவருடைய அப்பா மிகவும் சிறந்த ஆடை தயாரிப்பாளர். பணக்காரர்கள் நிரம்பிய மன்ஹாட்டன் பகுதியில் வாழ்ந்த குடும்பம் அது. இவருடைய இளமைப் பருவம், அம்மாவுடன் டாக்டர் வீட்டுக்குப் போன சிறுவன் அலெக்ஸ் வில்லியம்ஸ் போலவே, 'ஒருகிணைந்த வளர்ப்புமுறை’யில் அமைந்திருந்தது. வார இறுதி நாட்களில் ஓபன்ஹெமர் தங்கள் நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களுக்கு காரில் ஏறி, டிரைவர் ஓட்ட... அடிக்கடி வட்டமடித்தார். கோடைகாலங்களில் தனது தாத்தா, பாட்டியைப் பார்க்க ஐரோப்பா சென்றார். அவர் 'சென்ட்ரல் பார்க் வெஸ்ட்’டில் உள்ள 'எத்திக்கல் கல்ச்சர் ஸ்கூல்’ என்ற முற்போக்கான ஒரு பள்ளியில் படித்தார்.

பிற்காலத்தில் ஓபன்ஹெமரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள், இந்த பள்ளிக்கூடம்

பற்றியும் எழுதி இருக்கிறார்கள். 'இங்கு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் இவர்கள்தான் இந்த உலகத்தை மாற்றப் பிறந்தவர்கள் என்பதாகவே சொல்லிச் சொல்லி உத்வேகம் ஏற்படுத்தும் பள்ளி' என்று

கூறுகிறார்கள். இந்த பள்ளியில் ஓபன்ஹெமர் படித்துக் கொண்டிருக்கும்போது, கணக்குப் பாடம் 'போரடிக்கிறது’ என்று இவர்

சொன்னதற்கு உடனே கணக்கு வாத்தியார் செவி சாய்த்தாராம். ஒரு மாற்றம் பெற வேண்டி இவரை தனியாக ஒரு வேலை செய்யும்படி அனுப்பி வைத்தாராம். அந்த அளவுக்கு தனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு சூழ்நிலையில் வளர்ந்திருக்கிறார் ஓபன்ஹெமர்.

அவர் சிறுவனாக இருக்கும் போது கற்களைச் சேகரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். பன்னிரெண்டு வயதாக இருக்கும் போது, அந்தப் பகுதியில் இருந்த 'நிலவியலாளர்’ களுடன் (நிமீஷீறீஷீரீவீsts) தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அது தொடர்பான பல அரிய விஷயங்களை விவாதித்தார். இவருடைய ஆர்வத்தில் மகிழ்ச்சி கொண்ட அவர்கள், இவரை 'நியூயார்க் மினராலாஜிக்கல் கிளப்’ என்ற அமைப்பில் உரையாற்ற அழைத்தனர். இதுபற்றி ஒரு புத்தகத்தில்

கூறும்போது, ''ஓபன்ஹெமரின் இந்த ஆர்வம் பற்றி அறிந்ததுமே அவரது பெற்றோர் ஒருங்கிணைந்த வளர்ப்பு முறை தத்துவப்படியே விரைந்து செயல்புரிந்தார்கள்'' என்று சொல்லப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கனிமவள ஆராய்ச்சி கிளப்பில் தன்னைப் பேச

அழைத்தபோது, ஓபன்ஹெமர் சற்று பயந்துதான் போனாராம். 'அவர்களிடம் எனக்கு 12 வயதுதான் ஆகிறது என்று சொல்லுங்க அப்பா’ என்று இவர் கேட்டுக்கொள்ள... இவருடைய தந்தையான ஜூலியஸ் தனது மகனை உத்வேகப்படுத்தி அவர் களுடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். அவர் கூட்டத்தில் பேச வேண்டிய நாளும் வந்தது. அன்றைக்கு, அவர் தனது பெற்றோர்களுடன் கிளப்பிற்குச் சென்றார். அங்கிருந் தவர்களிடம் பெற்றோர், 'எங்கள் மகன்

ஜே. ராபர்ட் ஓபன்ஹெமர் ரொம்ப புத்திசாலி' என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தினர்.

இருந்தாலும் இவர் மேடையில் ஏறியபோது, பார்வையாளர்

பகுதியில் இருந்த சிலர் சிரித்தார்களாம். மைக் வைத்திருந்த மேஜையே இந்த சின்னப் பையனுக்கு எட்டாதே என்று யோசித்து, மரத்தினால் ஆன ஒரு சிறிய பெட்டியை அதன் முன்பு கொண்டு வந்து வைத்தார்கள். மிகவும் வெட்கத்துடன் இருந்தாலும், தான் தயார் செய்து கொண்டு வந்திருந்ததை ஓபன்ஹெமர் தங்கு தடையில்லாமல் படித்தார். அதற்குப் பிறகு பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரே கைதட்டல்தான்!

உங்கள் அப்பாவும் வியாபார உலகத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவராக இருக்கும்பட்சத்தில், இந்த மாதிரியான சூழ்நிலையை அவர் சமாளிக்கும் விதத்தை நீங்கள் ஏற்கெனவே கண்கூடாகப் பார்த்திருக்கும் பட்சத்தில், நீங்களும் அந்த மாதிரி எளிதாக சமாளிக்க முடியும். எத்திக்கல் கல்ச்சுரல் பள்ளியில் படித்துவிட்டு வரும் ஒருவரை, பிற்பாடு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் ஏதாவது விமர்சனம் செய்தாலும்... அதைக் கண்டு அவர்கள் அரண்டுபோக மாட்டார்கள். ஹார்வர்டில் பௌதிகம் படித்த ஒருவருக்கு, அதன் அருகிலேயே உள்ள எம்.ஐ.டி-யில் படித்த என்ஜினீயரிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதில் எந்த தயக்கமும் ஏற்படாது. அந்த நடைமுறை புத்திசாலித்தனம் அவர்களுக்குள் ஊறியிருக்கும்... நன்றாக ஊட்டப்பட்டு இருக்கும், சரியா?

ஓபன்ஹெமருக்கு சற்றும் சளைக்காத மேதாவியான கிறிஸ் லாங்கனுக்கோ வீட்டில் உள்ளவர்களின் கோபமும், குடிகார வளர்ப்புத் தந்தையும்தான் வாய்த்தார்கள். அலெக்ஸிற்கு காரில் போகும்போது அவன் அம்மா கூறிய மாதிரி யாரும் லாங்கனுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களிடம் எப்படி தயங்காமல் கேள்வி கேட்க வேண்டும் என்றும் சொல்லித் தரவில்லை. மாறாக, 'அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களை நம்பாதே, சற்று விலகியே நிற்கப் பழகிக்கொள்' என்பதுதான் அவருக்கு தரப்பட்ட எச்சரிக்கைகளாக இருந்தது. ஒரு டாக்டரிடமோ... அல்லது பேராசிரியரிடமோ... தன் மனதில் உள்ளதை அவர் ரசிக்கும் வண்ணம் எப்படி கம்பீரமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற 'அதிகாரப்பூர்வமான உரிமைகள்’ பற்றி அவருக்கு யாருமே சொல்லித் தரவில்லை. அவர் கற்றுக் கொண்டதெல்லாம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் 'இடர்பாடுகள்’ வரும் என்பது பற்றி மட்டும்தான். எட்டி நின்று பார்ப்பதற்கு இது சிறிய விஷயமாகப் படலாம். ஆனால், இதுதான் அவர் வாழ்ந்த நகரைவிட்டு, அதன் இன்னலான சூழல்களைவிட்டு அவரை வெளியே சென்று பரந்த வாய்ப்புகளைத் தேடவிடாமல் முட்டுக்கட்டையாகத் தடுத்தது.

''கிறிஸ்டோபர் மட்டும் பெரிய, பெரிய இடங்களில் தொடர்பு கொண்ட டாக்டரின் மகனாக, வசதியான குடும்பத்தில் பிறந்திருக் கும்பட்சத்தில் அவன் தனது 17 வயதிலேயே பி.எச்.டி. பட்டம் பெற்றிருப்பான்’ என்று கிறிஸின் சகோதரர் ஜெஃப் கூறினார்.

இளம் வயதில் நம்மைச் சுற்றியுள்ள கலாசாரம் மற்றும் பண்பாடுதான், எதிர்காலத்தில் நாம் எப்படியிருக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. கிறிஸிற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டுக் கேட்டு போரடித்து விட்டது. இதுதான் அவனிடம் இருந்த ஒரு பிரச்னை. அவருடைய புத்திசாலித்தனத்தை அங்கீகரித்திருந்தாலோ அல்லது அவனுடைய புத்தி கூர்மையின் மதிப்பை அறிந்தவர்கள் அவருடைய குடும்பத்தில் இருந்திருந்தாலோ... அவருக்கு சிறுவயதில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் போரடித்து இருக்காது. அப்படி போரடித்து இருந்தாலும், அதை அந்த ஆசிரியர்களும் ஏற்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதற்கான நடைமுறை புத்திசாலித்தனமும் அந்த மேதாவியிடம் வளர்ந்திருக்கும்!

(விதை விருட்சமாகும்)
Copyright © 2008 by Malcolm Gladwell