பதவிக்கும் வயசுக்கும் சம்பந்தம் உண்டா? உண்டு. அதுவும் டாடா நிறுவனத்தில் வயசை வைத்துத்தான் பதவி.

. வருடம் 1992... டாடா நிறுவனத் தில் இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என்பதற்காக புதிய திட்டமொன்றை கொண்டு வந்தார் ரத்தன் டாடா. இந்த திட்டத் தின்படி, நான் எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர்கள் (ழிஷீஸீ மீஜ்மீநீutவீஸ்மீ ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீs) ஓய்வுபெறும் வயதை 75-லிருந்து 70-ஆக குறைத்தார். இதனால் ருசி மோடி, அஜித் கெர்க்கர், தர்பாரி சேத் போன்றவர்கள் திடீரென பதவியை இழந்து வெளியே போனார்கள்..
வருடம் 2005... இருபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கொண்டுவந்த அதே சட்டம் இப்போது தனக்கே எதிராக இருப் பதை உணர்ந்தார் ரத்தன் டாடா. காரணம், அவர் கொண்டுவந்த மாற்றத்தின்படி, 2008-ல் அவர் தலைவர் பதவியைவிட்டு விலக வேண்டும். இந்த சிக்கலைத் தவிப் பதற்காகவே 2005-ல் ஓய்வுபெறும் வயதை மீண்டும் 70-லிருந்து 75-ஆக உயர்த்தினார் ரத்தன்.

2011... ரத்தன் டாடாவின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், நான் எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு 75-லிருந்து 70-ஆக மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தின் உயரதிகாரி கள் எத்தனை ஆண்டுகள் பதவி வகிக்கலாம் என்பது அந்த கம்பெனியின் தனிப்பட்ட விஷயம். டாடா நிறுவனம் அடிக்கடி விதிமுறைகளை மாற்றி அமைப்பதை தவறென்று சொல்ல முடியாது. ஆனால், சமீபத்தில் செய்யப்பட்டுள்ள விதிமுறை மாற்றங்களால் பல அனுபவசாலி கள் அந்த நிறுவனத்தைவிட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மைதான்.

தற்போது செய்துள்ள மாற்றத்தின்படி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர்களாக (ழிஷீஸீ மீஜ்மீநீutவீஸ்மீ ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீs) ஆர்.கே. கிருஷ்ணகுமார் (72), ஜாம்ஷெட் ஜே இரானி (74) ஆகிய இருவர் மட்டுமே 75 வயது வரை இப்போதுள்ள பதவியில் நீடிப்பார்கள். இவர்கள் ஏற்கெனவே 70 வயதைத் தாண்டி விட்டார்கள் என்பதால் புதிய விதிமுறை மாற்றத்தால் இவர்களின் பதவிக்கு பெரிய பாதிப்பு எதுவுமில்லை.

ஆனால், தற்போது 65 வயதைத் தாண்டிய சில முக்கியமான டைரக்டர்களின் பதவிக் காலம் 7 முதல் 9 ஆண்டுகள் குறைந்திருக்கிறது. உதாரணமாக, டாடா ஏ.ஐ.ஜி. மற்றும் டிரெண்ட் நிறுவனத்தின் தலைவராகவும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கும் பரூக் கே. கவரானாவுக்கு இப்போது 67 வயது. தற்போது வந்திருக்கும் மாற்றத்தால் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவரால் டாடா நிறுவனத்துக்காக உழைக்க முடியும்.

இன்னொரு முக்கியமான உதாரணம், ஆர்.கோபால கிருஷ்ணன் (65). டாடா ஆட்டோகாம்ப், டாடா கெமிக்கல் நிறுவனங்களின் தலைவராகவும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கும் இவர் இன்னும் ஐந்து ஆண்டுகளே பணியாற்ற முடியும்.

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உதவித் தலைவராக இருக்கும் ரவி காந்த் (66), டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் உதவித் தலைவராக இருக்கும் பி.முத்துராமன் (66), டி.சி.எஸ். நிறுவனத்தின் உதவித் தலைவராக இருக்கும் எஸ்.ராமதுரை (66), டாடா சன்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக இருக்கும் அருண்குமார் காந்திக்கும் (68) இதே பிரச்னைதான்.

ரத்தன் டாடாவுக்குப் பிறகு அந்த மாபெரும் நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் வாரிசு ஒருவரைத் தேடும் ஐந்துபேர் கொண்ட கமிட்டிதான் இந்த விதிமுறை மாற்றத்தைக் கொண்டுவர பரிந்துரை செய்திருக்கிறது.

அடுத்த வாரிசைத் தேடும் இந்த குழு, இதுவரைக்கும் ஒன்பது முறை கூடியுள்ளது. ஆனால், ரத்தன் டாடாவுக்கு மாற்றாக புதிய தலைவரை எங்களால் தேர்வு செய்ய முடியவில்லை என்று அந்த குழுவின் தலைவர் கிருஷ்ண குமார் தெரிவித்திருக்கிறார். மேலும், தேர்வு செய்யும் முறைகளில் மாற்றம் செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்றால் விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்றும் சொல்லி இருக்கிறார்.

தவிர, டாடா நிறுவனத்தின் அடுத்த வாரிசாக தேடப்படுகிறவர் ஐந்து அல்லது பத்தாண்டுகள் அந்த பதவியில் இருக்கிற மாதிரி இல்லாமல் குறைந்தது 30 முதல் 40 ஆண்டுகள்வரை அந்தப் பதவியில் இருந்து நிறுவனத்தை நடத்திச் செல்கிற மாதிரி இருக்க வேண்டும் என்பதே டாடாவின் எண்ணம். கூடிய விரைவிலேயே இளங்காளை டாடாவின் தலைமைப் பொறுப்பை ஏற்கட்டும்!

-செ.திருக்குறள் அரசி.