Published:Updated:

'இண்ட்ரின்சிக்' மதிப்பு என்றால் என்ன?

கேள்வி - பதில்

'இண்ட்ரின்சிக்' மதிப்பு என்றால் என்ன?

கேள்வி - பதில்

Published:Updated:
'இண்ட்ரின்சிக்' மதிப்பு என்றால் என்ன?

பங்கு முதலீட்டில் 'இன்ட்ரின்சிக்’ மதிப்பு என்றால் என்ன?

- கண்ணன், கோயம்புத்தூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

##~##
''சில நேரங்களில் பங்கின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) புத்தக மதிப்பைவிட அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் 'இன்ட்ரின்சிக் மதிப்பு’ என்ற உள்ளார்ந்த மதிப்பு அதிகமாக இருப்பதுதான். 'இன்ட்ரின்சிக் மதிப்பு’ என்பது கண்ணுக்குத் தெரிந்த மற்றும் கண்ணுக்குத் தெரியாத சொத்து மதிப்பைக் கணக்கிடுவதாகும்.

கண்ணுக்குத் தெரிந்த சொத்து மதிப்பு (Tangible Assets) என்பது நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டிலிருந்தே தெரிந்துவிடும். கண்ணுக்குத் தெரியாத சொத்து மதிப்பு (Non Tangible Assets) என்பது. உதாரணமாக அந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு போன்றவையாகும். தற்போது, இன்ட்ரின்சிக் மதிப்பை அளவிட சரியான முறை இல்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 'இன்டர்நேஷனல் ஃபைனான்ஷியல் ரிப்போர்ட்டிங் ஸ்டாண்டர்ட்’ வரும்போது பேலன்ஸ் ஷீட்டிலிருந்தே இன்ட்ரின்சிக் மதிப்பும் தெரிந்துவிடும். அப்போது இன்னும் சுலபமாக முதலீட்டாளர்கள் இந்த மதிப்பைத் தெரிந்து கொண்டு முதலீட்டு முடிவை எடுக்கலாம்.'

எல்.ஐ.சி.-யில் 'பீமா கோல்டு பாலிசி’ எடுத்திருக்கிறேன். இதனை டேர்ம் பாலிசியாக மாற்ற முடியுமா?

- அபிராமி பார்த்தசாரதி, புதுக்கோட்டை.

ஏ.ஜி.பழனி, தலைமை ஆயுள் காப்பீடு ஆலோசகர், எல்.ஐ.சி.

''பீமா கோல்டு பாலிசி’ என்பது ஆயுள் காப்பீட்டு வசதியுடன், வருமானம் தரக்கூடிய மணிபேக் பாலிசி. இதில் பாலிசி காலம் முடிந்த பின்பும் 50 சதவிகிதம் கவரேஜ் கிடைக்கும். அதற்கு ஏற்ப பிரீமியத் தொகையும் அதிகமாக இருக்கும். ஆனால், டேர்ம் பிளான் என்பது பிரீமியம் கட்டும் காலத்துக்கு ஆயுள் காப்பீடு கவரேஜ் மட்டுமே அளிக்கக் கூடிய பாலிசி. இரு பாலிசிகளின் தன்மையும் வெவ்வேறு என்பதால் 'பீமா கோல்டு பாலிசி’யை டேர்ம் பாலிசியாக மாற்ற முடியாது.''

'இண்ட்ரின்சிக்' மதிப்பு என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்டில் பத்து யூனிட் வைத்திருப்பவர்களுக்கு போனஸாக ஒரு யூனிட் கொடுத்திருக்கிறார்கள். இதனால் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

- மாணிக்கம், பாண்டிச்சேரி.

ஸ்ரீகாந்த் மீனாட்சி, ஃபண்ட்ஸ் இந்தியா டீம்.

''ஒரு ஃபண்ட் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கவே, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் டிவிடெண்ட் அல்லது போனஸ் யூனிட்கள் வழங்கப்படுகிறது. போனஸாக யூனிட்களைக் கொடுப்பதற்கும், டிவிடெண்ட் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டிலுமே கொடுத்து முடித்ததும் அந்த விகிதாசாரத்தின்படி ஃபண்டின் என்.ஏ.வி. கீழே இறங்கும். உதாரணமாக, பத்து யூனிட்டுக்கு ஒரு யூனிட் போனஸாக கொடுத்தால் என்.ஏ.வி. சுமார் 10% கீழே இறங்கும். டிவிடெண்ட் கொடுக்கும்போது அதை பணமாகவோ, யூனிட்களாகவோ வாங்கிக் கொள்வது முதலீட்டாளரின் விருப்பமே. ஆனால், போனஸ் எப்போதும் யூனிட்களாகவே கொடுக்கப்படும். போனஸ் கொடுத்ததும் யூனிட் என்.ஏ.வி. மதிப்பு குறைந்துவிடும் என்பதால் லாபமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.''  

'இண்ட்ரின்சிக்' மதிப்பு என்றால் என்ன?

இங்கிலாந்தில் பி.ஹெச்.டி. படிக்கும் நான், இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைக்கிறேன். என்.ஆர்.ஐ. என்பதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வழிமுறைகள் என்ன?

- கண்ணன், இங்கிலாந்து.

சேகர், இயக்குநர், தோஹா புரோக்கரேஜ் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்.

''என்.ஆர்.ஐ-கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. நீங்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது இங்கிலாந்து கரன்ஸியில் முதலீடு செய்கிறீர்கள், ஆனால் அதன்மூலம் கிடைக்கும் லாபத்தை இந்தியாவிலேயே வைத்திருக்கிறீர்கள். இந்த முதலீட்டை இங்கிலாந்திற்கு கொண்டு செல்லவில்லை எனில் நீங்கள் சாதாரணமாக இந்தியர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுபோல் முதலீடு செய்யலாம். இது முதல் வழி! இதற்கு இந்தியாவில் உங்களின் முகவரி சான்று, பான் கார்டு, டீமேட் அக்கவுன்ட் போன்றவை இருந்தாலே போதுமானது.

இரண்டாவது வழி, நீங்கள் இங்கிலாந்து கரன்ஸியில் முதலீடு செய்து, மீண்டும் அதே நாட்டு கரன்ஸியாக எடுத்துச் செல்வதாக இருந்தால் 'போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்’ (PIS) மூலம் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். இதற்கு முகவரிச் சான்றாக நீங்கள் வசிக்கும் வெளிநாட்டின் முகவரி/பாஸ்போர்ட், அடையாளச் சான்றாக பான் கார்டு மற்றும் வருமானச் சான்று/வங்கி ஸ்டேட்மென்ட் ஆகிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். அத்துடன் டீமேட் அக்கவுன்ட், டிரேடிங் அக்கவுன்ட் போன்றவற்றைப் பெற்றுக்கொண்டு நீங்கள் ஆன்லைன் மூலமாக பங்குகளை வாங்கலாம். இந்த  'போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்’ மூலம் பங்குகள் வாங்கும்போது உங்களது அனைத்து பரிவர்த்தனைகளும் ஆர்.பி.ஐ.-யின் பார்வைக்குச் செல்லும்.''

'இண்ட்ரின்சிக்' மதிப்பு என்றால் என்ன?

ஷேர் புரோக்கிங் நிறுவனம் ஒன்றில் சீனியர் டீலராக பணிபுரிகிறேன். மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஃபண்ட் மேனேஜராக என்னென்ன தகுதி தேவை?

-டி. ஸ்ரீகாந்த், கோயம்புத்தூர்.

- ஸ்ரீவித்யா ராஜேஷ், ஃபண்ட் மேனேஜர், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்.

''ஃபண்ட் மேனேஜராக வருவது தற்போது டாக்டர், என்ஜினீயர் போன்று புரொபஷனல் ஆகிவிட்டது. இதற்கு பங்குச் சந்தையில் 8 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். அனுபவம் என்பது பங்குகளை நன்கு ஆராய்ச்சி செய்திருப்பதைக் குறிக்கும். இத்துடன் எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் அல்லது சி.எஃப்.ஏ. எனப்படும் 'சார்ட்டட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்’ படிப்பைப் படித்திருந்தால் இன்றைய நிலையில் இன்னும் கூடுதல் வாய்ப்பாக அமையும். நீங்கள் ஷேர் புரோக்கிங் நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவசாலியாக இருந்தால் தாராளமாக ஃபண்ட் மேனேஜராகலாம். ஆல் த பெஸ்ட்!''

மியூச்சுவல் ஃபண்டை, ஃபண்ட் ஹவுஸ் மூலமாக வாங்கும்போது நுழைவுக் கட்டணம் கிடையாது. அதேபோல் ஒரு வருடத்திற்குப் பிறகு வெளியேறும் கட்டணமும் கிடையாது. இதுவே டீமேட் அக்கவுன்ட் மூலம் வாங்கினால் புரோக்கரேஜ் கட்டணம் கொடுக்க வேண்டியது வருமா?

- ஜெ.மகேஷ், செங்கல்பட்டு.

முருகன், மண்டல அதிகாரி, புளூசிப் இன்வெஸ்ட்மென்ட் சென்டர்.

''ஃபண்ட் ஹவுஸ் மூலம் ஃபண்ட் வாங்கும்போது எவ்வித கட்டணங்களும் வசூலிக்கப் படுவதில்லை. ஆனால் டீமேட் அக்கவுன்ட் மூலம் எக்ஸ்சேஞ்சில் ஃபண்ட் வாங்கும்போது புரோக்கருக்கு புரோக்கரேஜ் கட்டணம் கட்டவேண்டியது வரும். உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் எனில், 500 ரூபாய் புரோக்கரேஜ் கட்டணம் கொடுக்க வேண்டியது வரும். ஆனால் இதுவே ஃபண்ட் ஹவுஸ் மூலம் வாங்கும்போது இந்த 500 ரூபாய் கட்டத் தேவையில்லை. எனவே மியூச்சுவல் ஃபண்டுகளை ஃபண்ட் ஹவுஸ் மூலம் வாங்குவதே லாபகரமானது.''

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள் என்னிடம் 1,150 இருக்கிறது. இதன்  ஆவரேஜ் விலை 82 ரூபாயாக இருக்கிறது. தற்போது இப்பங்கின் சந்தை விலை 65-68 ரூபாய். இதை வைத்துக் கொள்ளலாமா? அல்லது விற்றுவிடுவது நல்லதா?

-ரமேஷ், மெயில் மூலமாக.

விக்னேஷ், பங்குச் சந்தை ஆலோசகர்.

''ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், சர்வதேச அளவில் மின்சாரம் மற்றும் டெலிகாம் துறைக்கு டிரான்ஸ்மிஷன் தொடர்பான தீர்வுகளை அளித்து வருகிறது. இது புதிதாக மின் கடத்திகள் உற்பத்தியில் இறங்கியுள்ளது. இத்தொழிலில் கடும் போட்டி இருப்பதால் இவர்களால் லாபகரமாக செயல்பட முடியுமா என்பது கேள்விக் குறி. அத்துடன் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவு திருப்தியளிப்பதாக இல்லை. இதன் வருவாய் 33% குறைந்திருக்கிறது. தற்போது உங்களிடம் இருக்கும் பங்குகளில் பாதியை விற்றுவிட்டு பிறகு விலை குறையும்போது வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி வருகிறது என்று பார்த்துவிட்டு முடிவு எடுங்கள்.''

'இண்ட்ரின்சிக்' மதிப்பு என்றால் என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism