Published:Updated:

அவுட்லயர்ஸ்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 23

அவுட்லயர்ஸ்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 23

Published:Updated:
அவுட்லயர்ஸ்
அவுட்லயர்ஸ்


கதவைத் தட்டும் வாய்ப்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரிசையாக பல சாதனையாளர்களின் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அவர்கள் எந்த வகையான புத்திசாலித்தனமும் உழைப்பும் கொண்டிருந்தார்கள் என்று பார்த்தோம்.

##~##
தையும்தாண்டி, அவர்களுடைய பிறப்பிடம், பெற்றோர், சுற்றுப்புறம்... ஏன் பிறந்த மாதம்கூட அவர்களுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு வரமாக அமைந்திருந்தன என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தோம். இப்போது நாம் பார்க்கப் போகிற மனிதரின் கதை முற்றிலும் மாறுபட்டது. முதலில் அவர் வளர்ந்த கதையைப் பார்ப் போம்... அடுத்த அத்தியாயத்தில் அதன் பின்னால் இருக்கும் ஆச்சரியங்களை ஆராய்வோம்...

பார்ட்னர்களின் பெயர் களையே பெயராகக் கொண்டு, உலக அளவில் புகழோடு விளங்கும் சட்ட அலுவலகம் அது. அதன் பெயர் 'ஸ்கடான், ஆர்ப்ஸ், ஸ்லேட், மீகெர் அண்ட் ஃப்ளோம்'. இதில் கடைசியாக வருகிற ஜோ ஃப்ளோம் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். நிறுவனத்தின் பெயரில் உள்ள பார்ட்னர்களில் இவர் மட்டும்தான் இப்போது இருக்கிறார். அவருடைய அலுவலகம் மன்ஹாட்டனில் உள்ள 'காண்டே நாஸ்ட் டவர்’ என்கிற உயரமான கட்டிடத்தில் இயங்குகிறது.

கொஞ்சம் குள்ளமாக, லேசாக குனிந்த முதுகு... தலை கொஞ்சம் பெரியதாக, காது விடைப்பாக... தனது சிறிய நீல நிற கண்களால் மூக்குக் கண்ணாடியை ஊடுருவிக் கொண்டு பார்க்கிறார்! இப்போது மிக மெலிந்து காணப்படும் அவர், முன்பெல்லாம் ரொம்ப குண்டாக இருந்தவர். அந்த காலத்தில் அசைந்து, அசைந்துதான் நடப்பார்.

இந்த ஜோ ஃப்ளோம், புரூக்ளின் நகரில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் கிழக்கு ஐரோப்பா விலிருந்து வந்து குடியேறியவர்கள். யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய அப்பா கார்மென்ட் தொழிற்சாலை ஒன்றில் யூனியன் அமைப்பாளராக இருந்தவர். பின்னர் பெண்களுக்கான உடை தயாரிக்கும் தொழிற்சாலையில் சேர்ந்து வேலை செய்து வந்தார். அவருடைய அம்மாவும் அலங்காரப் பொருட்கள் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஏழ்மை அவர்களை வாட்டியது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய குடும்பம் இடம் மாறிக் கொண்டே யிருந்தது. அதற்குப் பின்னால் இருந்த விநோதமான காரணம், அந்தக் காலத்தில் வீட்டுச் சொந்தக் காரர்கள் புதிதாக வரும் வாடகைதாரர்களிடம் முதல் ஒரு மாதத்திற்கு வாடகை வாங்கு வதில்லை! இப்படி ஒரு வாடகை சேமிப்புக்காகவே இடம் மாறிக் கொண்டு இருந்தார்கள். அப்படி ஒரு பணக் கஷ்டம்.

ஜூனியர் உயர்நிலைப் பள்ளி படிப்புக்காக, மன்ஹாட்டன் லெக்ஸிங்டன் அவென்யூவில் இருந்த மிகவும் பிரபலமான டவுன்சென்ட் ஹாரிஸ் என்ற பள்ளியில் நுழைவுத்தேர்வு எழுதினார் ஃப்ளோம். நோபல் பரிசு பெற்ற 3 பேரையும், புலிட்சர் பரிசு பெற்ற 6 பேரையும், ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதியையும், போலியோவிற்கு தடுப்பூசி கண்டு பிடித்த ஜார்ஜ் ஹெர்ஸ்வின் மற்றும் ஜொனாஸ் சால்க் என்ப வரையும் இந்த உலகுக்குத் தந்த பள்ளிக்கூடம் அது. இந்த பள்ளிக் கூடத்தில் ஃப்ளோமுக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது!

அவருடைய அம்மா அவருக்கு தினமும் காலையில் சாப்பாட்டிற் காக 10 சென்ட் கொடுத்து அனுப்பு வார். பள்ளிக்கூடம் முடிந்த பின்பு துணி உற்பத்தி தொழிற்சாலைக்குப் போய் கைவண்டி இழுப்பார் ஃப்ளோம். பள்ளி படிப்புக்குப் பிறகு மன்ஹாட்டனில் உள்ள சிட்டி காலேஜில் இரண்டு வருடம் இரவுநேர பள்ளியில் படித்தார். காலையில் வேலை, மாலையில் படிப்பு! அதன்பின் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். பிறகுதான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார் ஜோ ஃப்ளோம்.

அவுட்லயர்ஸ்

''எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே ஒரு வக்கீலாக வர வேண்டுமென்று ஆசைப்பட்டேன்' என்றார் ஃப்ளோம். படிப்பு விஷயத்தில் இவரைவிட அதிகம் படித்த பலர் விண்ணப்பித்து இருந்தாலும், இவரை ஹார்வர்ட் சட்டக் கல்லூரி தேர்வு செய்தது. இதற்குக் காரணம் என்ன?

'விண்ணப்பம் செய்யும்போதே, 'உங்களுக்கு நான் ஏன் தேவை தெரியுமா?' என்று சுருக்கமாக ஒரு கடிதமும் எழுதினேன்' என்று பிறகு விளக்குகிறார் ஜோ ஃப்ளோம். அவர் 1940-களில் ஹார்வர்டில் படிக்கும்போது வகுப்பறையில் 'நோட்ஸ்’ எதுவும் எடுத்துக் கொண்டதே இல்லையாம்.

''நம்மில் பலரும் நோட்ஸ் எடுக்கிற வழக்கத்தை வைத்திருக்கிறோம். அதற்குப் பிறகு பாடத்தின் சாராம்சம் என்னவோ அதை மீண்டும் விளக்கமாக பேப்பரில் மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்கிறோம்' என்று சொல்லும் ஃப்ளோமின் வகுப்புத் தோழர் சார்லஸ் ஹார், ''ஆனால் ஜோ ஃப்ளோம் அப்படியல்ல. அவர் இந்த மாதிரியான வேலைகள் எதுவும்

செய்வதில்லை. அவரிடம் இருந்த குணாதிசயம் - படிக்கும்போதே ஒரு வக்கீலைப் போல சிந்திப்பது. ஏன்... அவரிடம் தீர்ப்பு சொல்வ தற்கான திறமைகூட இருந்தது - அந்த பருவத்திலேயே!'' என்றும் கூறுகிறார்!

ஃப்ளோமினுடைய பெயர் 'லா ரெவியூ’ என்கிற ஒரு பத்திரிகையில் வந்தது. இது வகுப்பில் மிகச் சிறந்த மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய கவுரவம். அவர் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது வந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் வேலைக்கு ஆள் எடுத்தார்கள். அன்றைக்கு நியூயார்க்கில் பெரிதாக விளங்கிய ஒரு கார்ப்பரேட் லா நிறுவனத்தின் இன்டர்வியூவுக்கு இவர் சென்றார். அதை பிறகு நினைவு கூறும்போது, ''நான் பார்ப்பதற்கு சுமாரான தோற்றம் தான். குண்டாக இருப்பேன். அந்த ஆண்டு 'ஹயரிங் சீசன்’போது வேலை கிடைக்காமல் இருந்தவர்கள் என்னையும் சேர்த்து இரண்டு மாணவர்கள்தான். அந்த நேரத்தில்தான் எனது பேராசிரியர் புதிதாக யாரோ சிலர் ஒரு சட்ட அலுவலகம் திறப்பதாகக் கூறினார். நான் அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர்களைச் சந்தித்தபோது ''எங்களிடம் தற்சமயம் கிளையன்ட்களே யாரும் இல்லை. அதனால் நீ இங்கே வேலைக்கு சேர்ந்தால் அது உனக்குதான் ரிஸ்க்’ என்று கூறினார்கள். அவர்கள் என்னிடம் பேசப் பேச எனக்கு அவர்களைப் பிடித்துப்

போய்விட்டது. நான் எனக் குள்ளேயே, 'இவர்கள் என்னதான் சொன்னாலும் ரிஸ்க் எடுத்துதான் பார்ப்போமே’ என்று சொல்லிக் கொண்டேன். அவர்கள் ஆரம்ப வருமானமாக வருடத்துக்கு 4,500 கோடி ரூபாயில்  ஆரம்பித்தார்கள்!' என்கிறார்.

வால் ஸ்ட்ரீட்டில் ஒரு நிறுவனத் தில் பங்குதாரர்களாக இருந்த மார்ஷல் ஸ்காடனும், லெசில் ஆர்ப்ஸ் மட்டும்தான் இந்த புதிய அலுவலகத்தில் இவர் சேரும்போது இருந்தார்கள். அதற்குப் பிறகு ஜான் ஸ்லேட்டும் வந்து சேர்ந்து கொண்டார். ஃப்ளோம் அவர் களுடைய அசோஸியேட் ஆகச் சேர்ந்தார். அவர் களுடைய சிறிய அலுவலகம் வால் ஸ்ட்ரீட்டில் லேமேன் பிரதர்ஸ் கட்டிடத்தில் இருந்தது. ஃப்ளோமிடம், 'நீங்கள் எந்த மாதிரியான லா பிராக்டிஸ் செய்கிறீர்கள்?' என்று யாராவது கேட்டால், 'கதவைத் தட்டிக் கொண்டு என்ன வெல்லாம் வாய்ப்பு வருகிறதோ... அதை எல்லாம் எடுத்து செய்வோம்’ என்று சொல்வாராம் அந்த காலக் கட்டத்தில்.

அவுட்லயர்ஸ்

1954-ல் ஃப்ளோம் அந்த சட்ட நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் ஆன பின்பு... அவர்களது தொழில் பல மடங்கு பெருகி, கொழிக்கத் தொடங்கியது அடுத்த கொஞ்ச நாட்களிலேயே அங்கு கிட்டத்தட்ட 100 வழக்கறிஞர்கள் வேலை பார்த்து வந்தனர். அதற்குப் பிறகு 200 ஆனது. அது 300-ஐ தொட்டபோது, ஃப்ளோமின் பார்ட்னர்களில் ஒருவரான மோரிஸ் கிராமர் இவரிடம் வந்து, 'இளவயதில் இருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களை நாம் தொடர்ந்து சேர்ப்பது குறித்து எனக்குள் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது'

என்றார். அதற்கு அவர் சொன்ன காரணம், 'நம் சட்ட நிறுவனம் பெரியதுதான். ஆனால், இதற்கு மேலும் இது விரிவடையுமா?  அப்படியிருக்கும்போது எதிர்பார்ப்போடு வந்து சேரும் இளம் மாணவர்களை நாம் எப்படி புரமோட் செய்வது?' என்பதுதான்.

அதற்கு ஃப்ளோம், 'நீங்கள் கவலையே படாதீர்கள். நாம் ஆயிரம்பேரைக்கூட வேலைக்கு வைப்போம்' என்றார். மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும்... இன்னும் இன்னும் உயர வேண்டும் என்ற வெறி கொண்டவர் அவர்.  இன்றைக்கு இந்த சட்ட நிறுவனம் கிட்டத்தட்ட 2000 வழக்கறிஞர்களைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் 23 அலுவலகங்களைப் பெற்றிருக்கும் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 100 கோடி பில்லியன் டாலர்கள். இன்றைக்கு உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த சட்ட அலுவலகங்களில் இதுவும் ஒன்று. ஃப்ளோமினுடைய அலுவலகத்தில் அவர் சீனியர். ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோருடன் சரிக்குச் சமமாக எடுத்துக் கொண்ட படங்கள் இருக்கின்றன. அவர் வசிக்கும் அபார்ட்மென்ட் மிக ஆடம்பர மானது.

கடந்த முப்பது ஆண்டு காலக்கட்டத்தில் புகழ் பெற்ற 'ஃபார்ச்சூன் 500' நிறுவனங்களில் ஒன்றாக உங்கள் கம்பெனி இருந்திருந்தால்... நீங்கள் மற்றொரு நிறுவனத்தை புதுசாக வாங்க திட்டமிட்டிருந்தால்... ஜோ ஃப்ளோம்தான் உங்களின் வழக்கறிஞராக இருந்திருப்பார். அதாவது, அவருடயை ஸ்காடன் ஆர்ப்ஸ் நிறுவனம்தான் உங்களுக்கான சட்ட ஆலோசனை அலுவலகமாக இருந்திருக்கும். இவர்களை உங்களின் சட்ட ஆலோசகர்களாகவே வைத்துக் கொள்வதையே நீங்கள் தனி கவுரவம் பெற்ற விஷயமாக எண்ணி இருப்பீர்கள்.

இனி, கொஞ்சம் ஆராய்ச்சி...

(விதை விருட்சமாகும்)
Copyright © 2008  by Malcolm Gladwell

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism