Published:Updated:

சோக[ல்] சர்ச்சை...

சோக[ல்] சர்ச்சை...

சோக[ல்] சர்ச்சை...

சோக[ல்] சர்ச்சை...

Published:Updated:
சோக[ல்] சர்ச்சை...


வாரன் பஃபெட்டின் 'பெர்க்ஷயர் ஹாத்வே’ நிறுவனத்தின் போர்டு மீட்டிங் என்றாலே பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் குஷியாகி விடுவார்கள். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அமெரிக்காவுக்கு வந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இதற்கு காரணம், பல்வேறு பொருளாதார விஷயங்கள் குறித்து தீர்க்கதரிசனமும் நகைச்சுவையும் கலந்து பஃபெட் அடிக்கும் கமென்ட்களை கேட்கத்தான்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

னால், இம்முறை முதலீட்டாளர்களின் மூடு வேறாகிவிட்டது. காரணம்,  பெர்க்ஷயர் நிறுவனத்தின் உயரதிகாரி, வாரன் பஃபட்டுக்கு அடுத்து இவர்தான் என்று சொல்லப் பட்ட டேவிட் சோகல்தான். இவர் அப்படி என்ன தவறு செய்தார்?  

'லூப்ரிசால்’ என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு வாரன் பஃபட்டுக்கும் பரிந்துரை செய்தார் சோகல். லூப்ரி சால் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பார்த்த பஃபெட்டும், அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார்.

இதிலென்ன பிரச்னை என்கிறீர்களா? பெர்க்ஷயர் நிறுவனம் வாங்குவதற்கு முன்பாக 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை டேவிட் சோகல் வாங்கி வைத்துவிட்டு அதன் பிறகே அதை பரிந்துரைத் திருக்கிறார். பஃபெட் அந்த பங்குகளை வாங்கிய பிறகே தன்னிடமும் அந்த பங்குகள் இருப்பதை ஒரு தகவலாகச் சொல்லி இருக்கிறார் சோகல்.

சோகல் இப்படி கம்பெனி விதிகளுக்கு புறம்பாக இன்சைட் டிரேடிங் செய்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் வேறு வழியில்லாமல் அவர் பெர்க்ஷயர் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்யவேண்டிய தாகி விட்டது. சோகல் செய்த தவறு குறித்தும் அவரது பதவி விலகல் குறித்தும் வாரன் பஃபெட்டிடம் கேள்வி கேட்டன பத்திரிகைகள். ''சோகல் ஏற்கெனவே அந்த பங்கினை வைத்திருந்தார். இதற்கு மேல் என்ன சொல்ல!'' என்று சொல்லி அமைதியாகி விட்டார் பஃபெட். ஆனால், 'சோகல் செய்தது மிகப் பெரும் தவறு. பஃபெட் இதை எப்படி கண்டிக்காமல் இருக்கிறார்?’ என்று கொதித்துப் போயினர் முதலீட்டாளர்கள்.  

சோகல் சர்ச்சையால் தற்போது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இமேஜ் கடுமையாகச் சரிந்திருக் கிறது. நிறுவனத்தின் சரிந்த இமேஜை தூக்கி நிறுத்துவது ஒருபக்கமிருக்க, தனக்குப் பிறகு நிறுவனத்தின் அடுத்த தலைவராக வரவேண்டியவரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார் பஃபெட். பெர்க்ஷயர் நிறுவனத்தின் அடுத்த தலைவர் என்று வர்ணிக்கப்பட்ட டேவிட் சோகலின் கதை இப்படி சோகக் கதையாகி விட்டதால், மீதமுள்ள உயரதிகாரிகள் மூவரில் ஒருவரை அடுத்த தலைவராக தேர்வு செய்தாக வேண்டும். என்ன செய்யப் போகிறாரோ முதலீட்டு மேதை!

-வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism