அறிவியலில் இருந்து அரசியல் வரை சென்டிமென்ட்டின் தாக்கம் பலமாக இருக்கிறபோது பிஸினஸ்மேன்கள் மட்டும் அதிலிருந்து எப்படித் தப்பிக்க முடியும்?

இதோ, உலகம் முழுக்க பிஸினஸ் உலகில் பின்பற்றப்படும் சில சென்டிமென்ட்கள்.

. சீ.ன பிஸினஸ் உலகில் எவ்வளவு பெரிய வியாபார ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, அதை 8-ம் தேதி வைத்துக் கொண்டால் ராசி என்று நினைக்கிறார்கள்..
தனிப்பட்ட ஆட்கள் என்றில்லை, அரசாங்கம்கூட ரகசியமாக அதைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறதாம். அதனால்தான் 2008-ல் 8-ம் மாதத்தில் 8-ம் தேதி ஒலிம்பிக்ஸ் போட்டியைத் தொடங்கியதாம். அதேபோல், சீனர்களுக்கு 4 என்பது துரதிருஷ்டமான நம்பர்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்... பன்னாட்டு நிறுவனம் ஒன்று சீனாவில் கடை பரப்ப விரும்பியது. மிகப் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கள் நிறுவனம் குறித்தும் தங்கள் உற்பத்திப் பொருட்கள், சேவைகள் குறித்தும் அறிமுக விளக்கம் தருவதற்காக அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

முன்னணி தினசரிகளில் முழுப்பக்க விளம்பரங் கள், முக்கிய அதிகாரிகள், நிறுவனங்கள், வி.ஐ.பிக் கள் என அனைவருக்கும் சிறப்பு அழைப்புகள். இருப்பினும், கூட்டம் நடக்க வேண்டிய நாளன்று மிகச் சொற்ப அளவிலேயே கூட்டம் கூடியிருந்தது. அத்தனை ஏற்பாடுகளும் விரயம். நிறுவனத்தின் பிரதான அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. தீவிரமாக ஆராய்ந்த போதுதான் மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட் விட்டிருந்த கோட்டை புரிந்தது.

விளம்பரங்கள், அழைப்புகள் என்று அனைத்திலும் தங்கள் நிறுவனத்தின் பலமான அம்சங்கள் என்று அவர்கள் 4 அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தனர். சீனர்கள் அந்த அம்சங்களின் நிறை, குறைகளையெல்லாம் ஆராயவில்லை. 4 சிறப்பம்சங்கள் என்று அந்த நிறுவனம் சொன்னதால், 4 என்ற நம்பரையே பார்த்து அந்த நிறுவனம் தேறாது என்று முடிவெடுத்து விட்டார்கள்.

சீனாவில் எவ்வளவு பெரிய மால் என்றாலும் இன்னொரு சென்டிமென்ட்டை தவறாமல் பின்பற்றுவார்கள். புத்தாண்டு தினத்தன்று தங்கள் கடைகளிலோ, வணிக நிறுவனங்களிலோ குப்பைகளைப் பெருக்கித் தள்ளினால் அதிர்ஷ்டமும் வெளியே போய்விடும் என்று நம்புகின்றனர். எனவே அன்று முழுவதும் பெருக்குவதற்கு தடா!

இதே போல், பிரபல அமெரிக்க கார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தென் அமெரிக்காவில் தங்கள் புது மாடல் கார் ஒன்றுக்கு மிகப் பெரிய விளம்பரம் கொடுத்திருந்தது. பல கோடி ரூபாய் செலவு. இருப்பினும் ஒரு கார்கூட விற்பனையாகவில்லை. காரணம், அந்த காரின் மாடல் பெயர் 'நோவா'.

லத்தீன் அமெரிக்கர்களுக்கு நோவா என்ற வார்த்தைக்கு 'இது வேலை செய்யாது' என்று அர்த்தமாம்!!

- பா.முருகானந்தம்