வாஸ்து பரிகாரச் சக்கரம், ரசமணி, மகாமேரு போன்ற சென்டிமென்ட்டான பொருட்களை வீட்டில் வைப்பதால் வளம் பெருகும், வாழ்வு செழிக்கும் என நாம் நம்புவது போல, சீனர்களும் சில சென்டிமென்ட்களை விடாமல் பின்பற்றுகிறார்கள்.

. அதிர்ஷ்டக் கண்ணாடி, வின்ட் சிம் (wind chim) எனும் மணி, சிரிக்கும் புத்தர் (laughing Budda) போன்றவற்றை பொம்மைகளாகவோ, அல்லது படங்களாகவோ வைத்து அலங்கரித்து தங்கள் வீட்டை அதிர்ஷ்டம் தரும் வீடாக மாற்றிக் கொள்கின்றனர். ஒரு சாதாரண சீன வீட்டுக்குள் நுழைந்தால் பின்வரும் சென்டிமென்ட் பொருட்கள் ஒரு சிலவற்றை நிச்சயம் பார்க்கலாம்..
1. சிரிக்கும் புத்தர்: சிரித்தபடி இருக்கும் இந்த புத்தர் சிலை சீனர்களின் செல்வக்கடவுள். இவரை வீட்டில் வைப்பதால் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் கொழிக்குமாம்! சிரிக்கும் புத்தரிலேயே சந்தான விருத்தி, போசனம் என ஆறு வகையில் சிரிக்கும் புத்தர் சிலை என பலவகை உண்டு. இதில் ஆறு புத்தர் சிலைகளை வீட்டில் மட்டுமின்றி, தொழிற்சாலையிலும் வைக்கிறார்கள்.

2. அதிர்ஷ்ட தேவர்கள்: லுக்( Luk), பக் (Fuk), சௌ(Sau) என்ற இந்த மூன்று தேவர்கள்தான் சீனர்களின் ஆரோக்கியம், செல்வம், ஆயுள் என்ற மூன்றுக்கும் அதிபதிகள். இந்த சிலைகளை வைப்பதால் வீட்டில் சந்தோஷம் பொங்கும்; வாழ்வு செழிக்குமாம்.

3. ஜோடித் தாராக்கள் : சீனர்கள் தாரா (நம் சீதாதேவியை போல) என்ற பெண்ணை கற்புக்கும், காதலுக்கும் உதாரணம் காட்டி அவளை போற்றிக் கொண்டாடுகின்றனர். வண்ணச்சிறகுகளைக் கொண்ட ஆண், பெண் தாரா ஜோடிகளை படங்களாகவோ அல்லது சிலை களாகவோ வீட்டில் வைத்தால் கணவன் மனைவிக்குள் சந்தோஷம் கூடுமாம்.

4. சீனத்துப் புறாக்கள்: ஒரு வகை உயர்தர மரத்தினால் செய்யப்படும் இந்த ஜோடிப்புறாக்களை வீட்டில் வைப்பதால் கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள முரண்பட்ட கருத்துக்கள் மாறி, அவர்களிடையே ஒற்றுமை நிலவுமாம். வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காதாம். திருமணம் தள்ளிப் போகிறவர்கள் இந்த புறாக்களை வைத்துக் கொண்டால் விரைவிலேயே திருமணம் ஆகிவிடுமாம். நம்மூரில் இதை விற்றால் செம வியாபாரம் நடக்குமே!

5. பீனிக்ஸ் பறவை:  இறந்த பின் எரியூட்டிய சாம்பலிலிருந்து உயிர் பெற்று எழக்கூடிய இந்த பறவை, 500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க தேசத்தில் உயிர் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த பறவையின் படம், சிலையை வீட்டிலோ அல்லது அலுவலகத் திலோ வைப்பதால் நீண்ட ஆயுள், வருங்காலத்தை கூர்ந்தறியும் ஆற்றல் கிடைக்கும் என்கிறார்கள்.

6. அதிர்ஷ்ட ஆமை:  இதன் படத்தை வீட்டில் வைப்பதால் வீட்டில் உள்ளவர்களின் ஆயுள் பெருகுமாம்.

7. மூன்று நாணயங்கள்:  செப்பினால் செய்யப்பட்ட இந்த நாணயங்கள் வட்ட வடிவிலும், நடுவில் சதுரமான துளையுடனும், அதன் நாலு பக்கமும் மந்திர எழுத்துக்களும் இருக்கும். இந்த நாணயத்தை கல்லா பெட்டியில் வைத்தால் காசு கொட்டோ கொட்டுனு கொட்டுமாம்!

8. மூன்று கால் தவளை: மூன்று காசுகளைக் கவ்வியபடி இருக்கும் இந்த மூன்று கால்கள் கொண்ட தவளையும் செல்வச் சிறப்பை உணர்த்துவதாகும்.

9. ஒற்றைக் கொம்புள்ள குதிரை:  யுனிகான் என்று அழைக் கப்படும் குதிரைப் பொம்மையை வீட்டில் வைத்தால் ஆண் சந்ததி விருத்தியாகுமாம்.

10. பிரமிடுகள்: பல வண்ணங்களில் இருக்கும் இந்த பிரமிடுகளுக்கு பல்வேறு விதமான சக்தியுண்டாம். வெள்ளை - மனஅமைதி; பச்சை - கணவன், மனைவி நெருக்கம்; சிவப்பு - விஷத்தன்மையை அகற்றும்; மஞ்சள் - மகிழ்ச்சியைப் பெருக்கும்; நீலம் - நோய் நொடி அண்டாது; ஏழு நிறத்தையும் ஒருங்கே கொண்ட பிரமிடு சகல சௌபாக்கியங்களையும் தரவல்லதாம்.

- செ. கார்த்திகேயன்