. பெ.ரும் பிஸினஸ்மேன்களின் வீடுகளில் உள்ள மீன் தொட்டிகளில் இன்று அரோவனா என்கிற வாஸ்து மீனை தவறாமல் பார்க்க முடிகிறது. இந்த மீன் இருந்தால் நிம்மதியும் பணமும் கொட்டுமாம்!.
ஆசியாவிலிருந்து குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து நம்மவர்களுக்கு தொற்றிக் கொண்ட சென்டிமென்ட் இது. காரணம் அவர்கள்தான் இந்த சென்டி மென்ட்டை உலகம் முழுக்க பரப்பி விட்டவர்கள்!

இந்த அரோவனா மீன்களின் (Arowana fish) தோற்றம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படும் டிராகன்களின் தோற்றத்தைக் கொண்டுள்ளதால் இவை 'டிராகன் ஃபிஷ்’ (Dragon fish) என்றும் சொல்கிறார்கள். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த மீன்கள் 250 டாலரிலிருந்து 250 ஆயிரம் டாலர்கள் வரை விற்கப்படு கின்றனவாம்!

இந்த அரோவனாக்கள் பல வகைகளில் இருக்கின்றன. அரோவனா மீன்களிலேயே மிகவும் பெரியதாகவும், வெள்ளை நிறத்திலும் காணப்படுபவை சில்வர் அரோவனாக்கள். இதன் செதில்கள் வெள்ளியைப் போலவே மின்னுவதால்தான் இதற்கு 'சில்வர் அரோவனா’ என்று பெயர். இவை தனது வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள நண்டு மற்றும் சிறு மீன்களை உணவாக உட்கொள் கின்றன. சென்னையில் சில்வர் அரோவனாக்களின் விலை 450 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் வரை ஆகிறது.

அடுத்த வகை 'ஆசியன் அரோவனாக்கள்...’ இந்த வகை மீன்களை பெரும்பாலான மக்கள் 'கோல்டன் அரோவனா’ என்றே அழைக்கின்றனர். இவை 36 இஞ்ச் வரை வளரும் தன்மை கொண்டவை. தென்கிழக்கு ஆசியாவில் கோல்டன் அரோவனாக்களின் மவுசு அதிகம் என்பதால் அங்குள்ள மக்கள் இதனை அதிர்ஷ்ட மீனாகவே கருதுகின்றனர். இவைகளின் தீனி தவளை மற்றும் சிறு வகை மீன்கள்.

மூன்றாம் வகையினங்கள் ஸ்பாட்டட் அரோவனா. இந்த வகை மீன்கள் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகமாகக் கிடைக் கின்றன. டாவ்சன் ரிவர் சரடோகா, சவுத்தர்ன் சரடோகா, ஸ்பாட்டட் பாராமுன்டி, ஆஸ்திரேலியன் ஸ்பாட்டட் அரோவனா என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மீன்களின் உணவு வண்டு.

நான்காவது வகையினங்கள் நார்த்தர்ன் அரோவனா மீன்கள். இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படும் இடம் வட ஆஸ்திரேலியா. 22 முதல் 27 செல்சியஸ் வெப்பத்தில் வாழும் தன்மை கொண்ட இந்த மீன்கள் ஜார்தினி சரடோகா, பேர்ல் அரோவனா, கல்ப் சரடோகா என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இவை புழு, பூச்சிகளை தனது உணவாக எடுத்துக் கொள்கின்றன.

ஆப்பிரிக்க அரோவ னாக்களின் பிறப்பிடம் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா. 40-லிருந்து 100 செ.மீ வரை வளரக் கூடிய, தன்மை கொண்ட இந்த மீன் வகைகள் மற்ற அரோவனாக்கள் போல் இல்லாமல் அரிதான இனத்தைச் சேர்ந்தது. இவை சிறு உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன.

கறுப்பு அரோவனா மீன் வகையினங்கள் உயிர் வாழ்வது அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ரியோ நீக்ரோ பேசினில். அரோவனா மீன்களை வீட்டிலும் அலுவலகத்திலும் வளர்த்தால் செல்வம் பெருகும், சந்தோஷம் நிலைக்கும் என்று சொல்வது நமக்குத் தெரியும்.

நமக்குத் தெரியாத இன்னொரு விஷயம், நம் எதிரிகளை இனம் கண்டு கொள்ளக்கூடிய அபூர்வ சக்தி இந்த அரோவனா மீன்களுக்கு உண்டாம். தண்ணீர் தொட்டியில் மெதுவாக அங்கும் இங்கும் உலாவும் இந்த மீன்கள், தவறான எண்ணத்துடன் நம் வீட்டுக்கு யாராவது வந்தால் அதிவேகமாக அலைபாய்ந்து அவரை அடையாளம் காட்டிவிடுமாம்!

- செ. கார்த்திகேயன்